சென்னையில் உள்ளீர்களா? ஒரே ஒரு போன் கால் தான், டீசல் வீட்டை தேடியே வரும்!!

நமது சென்னையில் முதல் முறையாக வீட்டுக்கே டீசல் விநியோகம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சென்னையில் உள்ளீர்களா? ஒரே ஒரு போன் கால் தான், டீசல் வீட்டை தேடியே வரும்!!

பெட்ரோல் & டீசல் பிரச்சனை தான் தற்சமயம் நாட்டின் முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது. இப்போது மட்டுமல்ல, கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுகள் எப்போதுமே நம் மக்களை நேரடியாக பாதிக்கக்கூடியவைகளாக விளங்குகின்றன.

சென்னையில் உள்ளீர்களா? ஒரே ஒரு போன் கால் தான், டீசல் வீட்டை தேடியே வரும்!!

இதனால் தான் தமிழகத்தில் எதிர்கட்சியாக இருந்த திமுக, 2021 சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் பெட்ரோல் & டீசல் விலை குறைப்பும் ஒன்றாக இருந்தது. ஆட்சிக்கு வந்தால், பெட்ரோலின் விலையில் லிட்டருக்கு ரூ.5 குறைப்பதாக திராவிட முன்னேற்ற கட்சி அறிவித்தது.

சென்னையில் உள்ளீர்களா? ஒரே ஒரு போன் கால் தான், டீசல் வீட்டை தேடியே வரும்!!

அதன்படி இன்று (ஆகஸ்ட் 13) சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்த இ-பட்ஜெட்டில் பெட்ரோல் மீது விதிக்கப்பட்டுள்ள வரியில் 3 ரூபாய் குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ளீர்களா? ஒரே ஒரு போன் கால் தான், டீசல் வீட்டை தேடியே வரும்!!

இப்படிப்பட்ட நிலை தமிழகத்தில் நிலவிவரும் நிலையில், சென்னையில் ‘ஜெர்ரிகேன்' என்ற பெயரிலான திட்டம் ஒன்றின் மூலமாக எரிபொருள் தேவைப்படுவோருக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று பெட்ரோல் மற்றும் டீசலை நேரடியாக வழங்கும் வசதி துவங்கப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் தான் இந்த திட்டத்தை துவங்கி இருக்கின்றது.

சென்னையில் உள்ளீர்களா? ஒரே ஒரு போன் கால் தான், டீசல் வீட்டை தேடியே வரும்!!

நகர்வின்றி நிறுவப்பட்டுள்ள பெட்ரோல் பம்ப் சாதனங்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களை வைத்திருக்கின்ற சிறு நுகர்வோர்களுக்கு, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஜெர்ரிகேனில் டீசலை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அவர்களது இருப்பிடத்திற்கே சென்று வழங்க பாரத் பெட்ரோலியம் முடிவெடுத்துள்ளது.

சென்னையில் உள்ளீர்களா? ஒரே ஒரு போன் கால் தான், டீசல் வீட்டை தேடியே வரும்!!

இதற்கான பாதுகாப்பு ஒப்புதலை பெசோ எனப்படும் பெட்ரோல் மற்றும் வெடிப்பொருட்கள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து பாரத் பெட்ரோலியம் பெற்றுள்ளது. வாடிக்கையாளரின் டீசல் தேவையை பொறுத்து, இரு சக்கர வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் இந்த டெலிவிரி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ளீர்களா? ஒரே ஒரு போன் கால் தான், டீசல் வீட்டை தேடியே வரும்!!

இந்த ஹோம் டீசல் டெலிவிரி வசதிக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே மற்ற பகுதிகளுக்கும் இத்தகைய வசதியை பாரத் பெட்ரோலியம் விரிவுப்படுத்த உள்ளது. மேலும் இதற்காக புதியதாக 25 சில்லறை விற்பனை நிலையங்களை நிறுவ இந்த ஆயில் மற்றும் எரிவாயு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் உள்ளீர்களா? ஒரே ஒரு போன் கால் தான், டீசல் வீட்டை தேடியே வரும்!!

நீங்கள் சென்னையில் அம்பத்தூர் சுற்று வட்டார பகுதியில் உள்ளீர்கள் என்றால், இந்த சேவையை பெறலாம். இதற்கான உதவி எண்களாக, 9500160063 மற்றும் 9444677246 வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்களை தொடர்பு கொண்டால் டீசல் உங்கள் வீட்டை தேடியே வரும்.

ஆனால் அதற்கு நீங்கள் அம்பத்தூரை சுற்றி 5 கிமீ தூரத்திற்கு உள்ளாக இருக்க வேண்டும். தொடர்பு எண்கள் தான் வெளியிடப்பட்டுள்ளதே தவிர்த்து, டீசலை ஆர்டர் செய்ய வெப்சைட் எதுவும் வெளியிடப்படவில்லை. அதேபோல் டீசலை ஹோம் டெலிவிரி செய்வதற்கு கூடுதல் தொகை எதாவது வசூலிக்கப்படுமா என்பதும் தெரியவில்லை.

சென்னையில் உள்ளீர்களா? ஒரே ஒரு போன் கால் தான், டீசல் வீட்டை தேடியே வரும்!!

சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.94.39ஆக (பட்ஜெட் கூட்டுத்தொடர் அறிவிப்பிற்கு முன்பு) உள்ளது. ஒரு டீசல் விலை ரூ.102.49 ஆகும். நிதியமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பின்படி பெட்ரோலின் விலை ரூ.3 குறைக்கப்பட உள்ளதால் இந்தியாவிலேயே முதன்முறையாக பெட்ரோலின் (1 லி) விலை சென்னையில் மீண்டும் ரூ.100க்கு கீழ் செல்லவுள்ளது.

சென்னையில் உள்ளீர்களா? ஒரே ஒரு போன் கால் தான், டீசல் வீட்டை தேடியே வரும்!!

டீசல் மட்டும் தான் தற்போதைக்கு இந்த விற்பனையில் உட்படுகிறதே தவிர்த்து, பெட்ரோல் அடங்கவில்லை. இதுகுறித்த அறிவிப்பை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் இருந்து எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம். அதேபோல் சென்னை முழுவதும் இந்த வசதி விரிவுப்படுத்தப்படலாம்.

Most Read Articles

English summary
Jerrycan diesel supplies from 100 BPCL outlets in six months.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X