இனி பகலிலும் எல்லா வாகன முகப்பு விளக்குகளும் ஒளிர வேண்டும்... மாநில அரசு அதிரடி..!!

Written By:

பகல்நேரங்களில் கூட அனைத்து ரக வாகனங்களின் முகப்பு விளக்கினை எல்லா வாகன ஓட்டிகளும் ஒளிரவிட வேண்டும் என ஜார்கண்டு மாநில முதலமைச்சர் ரகுபார் தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

பகலில் கூட வாகன முகப்பு விளக்குகள் ஒளிர வேண்டும்..!!

மாநிலத்தில் எல்லா வழி நெடுஞ்சாலைகளிலும், சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு மையங்களை ஜார்கண்டு அரசு நிறுவ உள்ளது.

பகலில் கூட வாகன முகப்பு விளக்குகள் ஒளிர வேண்டும்..!!

சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில், பகல் நேரங்களில் கூட வாகன முகப்பு விளக்குகள் ஒளிர்வதற்கான ஆணையை முதலமைச்சர் ரகுபார் தாஸ் பிறப்பத்தார்.

பகலில் கூட வாகன முகப்பு விளக்குகள் ஒளிர வேண்டும்..!!

2018 ஜனவரி முதல் இந்த புதிய உத்தரவு அமலுக்கு வரவுள்ள நிலையில், இவை ஜார்கண்டின் அனைத்து நகர மற்றும் ஊரக பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பகலில் கூட வாகன முகப்பு விளக்குகள் ஒளிர வேண்டும்..!!

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகமாக வாகனங்களில் செல்வது ஆகிய மூன்று காரணங்களால் தான் பெரும்பாலான சாலை விபத்துகள் நடக்கின்றன.

பகலில் கூட வாகன முகப்பு விளக்குகள் ஒளிர வேண்டும்..!!

இதை தடுக்கும் வகையில் இனி மோட்டார் சைக்கிள்களில் பில்லியனில் அமர்ந்து செல்லும் பயணிகளும் ஹெல்மெட் அணியவேண்டும் என உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
பகலில் கூட வாகன முகப்பு விளக்குகள் ஒளிர வேண்டும்..!!

மது குடித்துவிட்டு பைக் மற்றும் காரை ஓட்டுவதை தடுக்க, அதிக எண்ணிக்கையிலான சுவாசத்தை சோதனை செய்யும் கருவிகளை வாங்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பகலில் கூட வாகன முகப்பு விளக்குகள் ஒளிர வேண்டும்..!!

சாலை பாதுகாப்பை வேண்டி எல்லா வாகன தயாரிப்பு நிறுவனங்களும், தற்போது விற்பனை செய்யும் வாகனங்களில் பகல்நேர விளக்குகளை பொருத்துவதை நடைமுறைப்படுத்தியுள்ளன.

பகலில் கூட வாகன முகப்பு விளக்குகள் ஒளிர வேண்டும்..!!

இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல தற்போது ஜார்கண்டிலும் சாலை போக்குவரத்து கடுமையாகப்பட்டு இருப்பதற்கு பல சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Vehicles Should Keep Headlights ON During Daytime. Says Jharkhand Government. Click for Details...
Story first published: Friday, December 8, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark