சகோதரர் மனைவிக்கு ஆடி க்யூ3 எஸ்யூவியை பரிசளித்த ஜான் ஆபிரஹாம்
தனது சகோதரர் ஆலன் மனைவியின் பிறந்தநாளுக்கு ஆடி காரை பரிசாக கொடுத்து அசத்தினார் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம்.
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் ஆடி கார்களின் ரசிகர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆடி க்யூ7 காரை வாங்கி தனது நீண்ட நாள் ஆசையை தீர்த்துக் கொண்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தனது சகோதரர் ஆலன் ஆபிரஹாம் மனைவி அன்காவுக்கு பிறந்தநாள் பரிசாக க்யூ3 காரை வாங்கி கொடுத்துள்ளார்.
பாலிவுட் நட்சத்திரங்களுடன் மிக நெருங்கிய நட்பு பாராட்டி வருவதால், ஆடி நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மைக்கேல் பெர்ஷகே நேரில் சென்று காரை சாவியை அன்காவிடம் கார் சாவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஸ்லைடரில் அந்த காட்சிகளையும் ஆடி க்யூ3யின் சிறப்பம்சங்களையும் காணலாம்.
ஆடியின் சமீபத்திய புதிய மாடலான க்யூ3 புக்கிங்கில் அசத்தி வருகிறது. இந்திய மார்க்கெட்டில் ரூ.26.41 லட்சம் ஆரம்ப விலை முதல் ரூ.31.41 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆடியின் குறைந்த விலை மாடலான இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும், 7 ஸ்பீட் டூவல் கிளட்ச் தொழில்நுட்பம் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஏதோ என்னால முடிஞ்ச 'சின்ன' கிப்ட்!
ரூ.30 லட்சம் விலை கொண்ட க்யூ 3 எஸ்யூவியை அன்காவுக்கு பரிசளிக்கும் ஜான். அருகில் சகோதரர் ஆலன் ஆபிரஹாம்

ஹய்யா... 'வடை' கிடைச்சுடுச்சு..!!
காரை பரிசு பெற்ற அன்கா சாவியை காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

எல்லாம் ஒரு விளம்பரந்தான்..!!
சம்பிரதாயத்துக்காக ஒரு போஸ் கொடுக்க வேண்டுமே.. ஆடி க்யூ3 சாவியை ஜான் ஆபிரஹாமிடம் சம்பிரதாயத்துக்காக வழங்குகிறார் ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷகே.

ஆல்பத்துக்கு வேணும்ல..!
அன்காவுக்கு பரிசு கொடுத்த கார் முன்னால் நின்று பவ்யமாக போஸ் கொடுக்கும் ஜான் ஆபிரஹாம்.

விளையாடதீங்க.. கார் சாவி எங்கப்பா!
காரை பரிசு பெற்ற மகிழ்ச்சியில் திளைக்கும் ஜான் ஆபிரஹாம், அன்கா மற்றும் ஆலன்

டீல்... என்ன ஜான்.. தம்பிக்கும் ஒண்ணு..??
ஆடி நிறுவனத்துக்கு தொடர்ந்து ஆதரவை நல்கி வரும் ஜான் ஆபிரஹாமுடன் அளவளாவும் மைக்கேல் பெர்ஷகே.

சத்தியமா பிறந்தநாள் வாழ்த்து சொல்லத்தான் வந்தேன்!!
காரை பரிசளித்துவிட்டு அன்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் மைக்கேல் பெர்ஷகே.


Click it and Unblock the Notifications








