ஜியோவின் புதிய கருவி அறிமுகம்.. இது உங்கள் காரை திருட்டில் இருந்து பாதுகாக்கும்.. ஒரு வருஷத்துக்கு ஃப்ரீ!

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு (Telecommunication) நிறுவனங்களில் ஒன்றான ஜியோ (Jio), செல்போன் உற்பத்தியைத் தொடர்ந்து தற்போது வாகனத்திற்கான முக்கிய கருவி ஒன்றின் விற்பனையையும் தொடங்கி இருக்கின்றது. இந்த கருவியின் சிறப்பம்சங்கள் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் வாகன திருட்டு தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனங்கள் திருடப்பட்ட சம்பவங்கள்கூட நம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. பெரும்பாலான வாக திருட்டு சம்பவங்கள் உதிரிபாகத்திற்காகவே செய்யப்படுகின்றன. இந்த வாகன திருட்டைத் தவிர்க்கும் பொருட்டு பலதரப்பட்ட நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றன.

Jiomotive device

இருப்பினும், இந்த விஷயத்தில் முழுமையாக தீர்வு எட்டப்படாத நிலையே தென்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ (Jio), வாகனத் திருட்டை தவிர்க்கும் வசதிக் கொண்ட கருவி (Device) ஒன்றை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது.

ஜியோமோட்டீவ் (JioMotive) என அந்த கருவி அழைக்கப்படும். ஜியோ மோட்டீவ் என்கிற பெயரிலேயே அந்த கருவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 4,999 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த மலிவு விலை உடன் சேர்த்து ஓராண்டிற்கான பிளாட்பாரம் கட்டணமும் இலவசம் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Jiomotive features

ஜியோ நிறுவனம் அதன் ஜியோ மோட்டீவை பன்முக வசதியை வழங்கக் கூடிய ஓர் கருவியாகவே உருவாக்கி இருக்கின்றது. இந்த ஒற்றை கருவியைப் பொருத்தும் பட்சத்தில் வாகனத்தின் ஆரோக்கியத்தை சுலபமாக உங்கள் செல்போனிலேயே கண்டறியலாம். இதற்காக பிரத்யேக செயலி ஒன்றையும் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கின்றது.

அததவிர, கார் இருக்கும் இடத்தை டிராக் செய்யவும் முடியும். மேலும், ஜியோ பென்சிங் அலர்டு, அதிக வேகத்தில் போனால் எச்சரிக்கும் வசதி ஆகியவற்றையும் ஜியோ மோட்டீவ் வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, ஒய்-ஃபை கருவியாகவும் இந்த ஜியோ மோட்டீவ் செயல்படும்.

மிக முக்கியமாக ஏற்கனவே கூறியதைப் போல் திருட்டை தவிர்க்கும் விதமாகவும் இந்த கருவி செயல்படும். இத்துடன், ஆன்டி டோவ் அலர்டையும் ஜியோ மோட்டீவ் நமக்கு வழங்கும். இத்தகைய பல ரோல்களில் செயல்படக் கூடிய கருவியையே ஜியோ நிறுவனம் ரூ. 4,999க்கு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த கருவியை அனைத்து தளங்கள் வாயிலாகவும் ஜியோ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. விருப்பமுள்ளவர்கள் ஜியோவின் இந்த புதிய கருவியை அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் இ-காமர்ஸ் தளண் மற்றும் ஜியோ.காம் ஆகிய தளங்கள் வாயிலாக வாங்கிக் கொள்ளலாம். இதுதவிர, ஜியோவின் ரீடெயில் ஷோரூம்களிலும் ஜியோ மோட்டீவ் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த கருவியை கார்களில் பொருத்துவது மிக மிக சுலபம் ஆகும். ஓபிடி போர்ட்டில் பொருத்தினால் போதும் அதன் வேலையை மிக சிறப்பாக செய்ய தொடங்கிவிடும். அதேவேளையில், இந்த கருவி பிரத்யேகமாக ஜியோ சிம் வாயிலாகவே வேலை செய்கிறது என்பது நாம் அனைவரும் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

ஜியோ சிம்மை தவிர வேறு எந்த சிம் கார்டிலும் இந்த கருவி வேலை செய்யாது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதவிர, முதல் ஓராண்டிற்கு மட்டுமே இந்த கருவியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த சலுகை காலம் முடிவடைந்த பின்னர் ஆண்டு ஒன்றிற்கு ரூ. 599 சந்தா செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார் திருட்டு சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் காரை திருட்டுகளில் இருந்து பாதுகாக்கவே இந்த கருவியை ஜியோ அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக ஜியோ தளத்தில் கூடுதல் 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, November 6, 2023, 13:55 [IST]
English summary
Jio launched jiomotive car tracking device at inr 4999
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+