பேலன்ஸ் வீல்களுக்கு குட்பை.. சைக்கிள்களுக்கான புதிய செல்ஃப் பேலன்சிங் சாதனம்... !

By Saravana

சைக்கிள் ஓட்ட பயிற்சி எடுக்கும் சிறுவர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரியாதவர்களும் இனி எளிதாக சைக்கிள் ஓட்டும் வகையில் ஓர் புதிய சாதனம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஜிரோநிமோ என்று பெயரில் அழைக்கப்படும் இந்த சாதனத்தை சைக்கிளின் நடுவிலுள்ள ஃப்ரேமில் பொருத்திக் கொண்டால் போதுமானது. சைக்கிளை எந்த நிலையிலும் விழாமல் சம நிலையுடன் செலுத்தவும், நிற்கவும் உதவும். இந்த புதிய நிலைப்படுத்தி சாதனம் பற்றிய கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

 இதுவரை...

இதுவரை...

இதுவரை நிலைப்படுத்தி சாதனம் கொண்ட சைக்கிள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு வருவது வழக்கம். ஆனால், இந்த ஜிரொநிமோ சாதனத்தை தனியாக வாங்கி, சைக்கிளில் பொருத்திக் கொள்ள முடியும் என்பதே விஷேசம்.

பயன்பாடு

பயன்பாடு

சைக்கிளின் வேகம் குறையும்போதோ அல்லது நிற்கும்போது இந்த நிலைப்படுத்தி சாதனம் சைக்கிளை கீழே விழாமல் சமநிலைப்படுத்திவிடும். மேலும், குழந்தைகள் சைக்கிள் ஓட்டும்ப�%8

சாதனம்

சாதனம்

இந்த சாதனம் பேட்டரியின் மூலம் இயங்குகிறது. சைக்கிளின் வேகம், செல்லும் கோணம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து நிலைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

மாறுதல்கள்

மாறுதல்கள்

ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில், இந்த சாதனத்தின் சாஃப்ட்வேரில் மாறுதல்களை செய்து கொள்ள முடியும். சைக்கிள் கற்றுக் கொள்ள பயிற்சி எடுப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சாதனமாக தெரிவிக்கப்படுகிறது.

கான்செப்ட்

கான்செப்ட்

ஸ்லைடரில் நீங்கள் பார்த்த ஜிரோநிமோ நிலைப்படுத்தி சாதனம் பொருத்தப்பட்ட சைக்கிள் கான்செப்ட்டை லுனாடிக் கான்செப்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அபிஷேக் ராய் உருவாக்கியுள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Jironimo is an electro-mechanical system that uses gyroscopes to keep a child’s bike balanced at low speeds and even when stopped. This device/accessory could be used instead of training wheels to keep the bike from falling too often or to assist kids in creating new figures and tricks by using the force of the gyroscopes to execute new maneuvers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X