இவங்கள மாதிரி ஆட்கள் ஜெயிக்கறத பாத்தா நாமலே வெற்றி பெற்றத போல இருக்கு! தன்ன விட உயரமான கார வாங்கி அசத்திட்டாரு
முன்பெல்லாம் பெரிய பெரிய பிசினஸை செய்தால் மட்டுமே கோடியில் வருமானம் பார்க்க முடியும் என்கிற சூழல் இருந்தது. ஆனால், இப்போது அப்படிலாம் இல்லை. உங்களுக்கு கேமிரா முன் சிறப்பாக நடிக்க அல்லது வித்தியாசமான வீடியோக்களை கிரியேட் செய்யும் திறன் இருந்தாலே போதும் பிசினஸ் மேன்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு உங்களால் வருமானம் ஈட்ட முடியும். இதற்கு சான்றாக இந்த உலகத்தில் பல இருக்கின்றனர். அத்தகைய ஓர் நபரே ஜிதேந்திர சிங் பெர்வல். இவர் சமூக வலைதளங்கள் வாயிலாக உடல் பயிற்சி குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.
குறிப்பாக, உடலை எப்படி ஆரோக்கியமாகவும், கட்டுமஸ்தாகவும் வைத்திருப்பது என்கிற அறிவுரைகளை இவர் சமூக வலைதள பக்கம் வாயிலாக வழங்கி வருகின்றனர். இந்த வீடியோக்கள் வாயிலாகவே அவர் தற்போது மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார். சொல்லப் போனால் புத்தம் புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) சொகுசு காரை வாங்குகின்ற அளவிற்கு அவர் வளர்ச்சியடைந்திருக்கின்றார்.

அவரின் இத்தகைய வளர்ச்சிக்கு சமூக வலைதளமே காரணமாக உள்ளது. ஒரு காலத்தில் 'ஏன் இப்படி சோசியல் மீடியாவுல டைம வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்க' என திட்டிக் கொண்டிருந்த பெற்றோர்கள்கூட தங்களுடைய பிள்ளைகள் சமூக வலைதளம் வாயிலாக பெரும் செல்வந்தர்களாக மாறியிருக்கின்றனர் என பெருமையுடன் கூறி வருகின்றனர்.
மேலும், அவர்களுடன் சேர்ந்து வீடியோ கன்டென்டுகளையும் அவர் உருவாக்கி வருகின்றனர். ஜிதேந்திர சிங் பெர்வல் மிகவும் அடிமட்டத்தில் வளர்ந்து வந்தவர் என கூறப்படுகின்றது. இப்போது அவர் பிசிக்கல் டிரைனிங் அகாடமி ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த அகாடமி வாயிலாக இந்திய ராணுவத்திற்காக இளைஞர்களை தயார் செய்யும் பணியை அவர் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நபரே அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்கின்ற வகையில் அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த காரை வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் விற்கப்படும் விலை உயர்ந்த கார் மாடல்களில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்-ம் ஒன்றாகும். இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.
இதன் ஒரே ஒரு யூனிட்டே 1.04 கோடி ரூபாக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 1.57 கோடிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய அதிக விலை மிக்க காருக்கு ஜிதேந்தர் கூடுதல் சிறப்பையும் சேர்த்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.
அவர் '0001' ஃபேன்சி நம்பரையே பயன்படுத்தி இருக்கின்றார். லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் கைகளில் இருந்தால் மிகவும் கரடு-முரடான சாலைகளைகூட அசால்டாக கடந்துவிட முடியும். இதுமட்டும் இல்லைங்க, சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த கார் மிகவும் அசத்தலான தயாரிப்பாகக் காட்சியளிக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
அந்தவகையில், 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயெின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் திறன் கொண்ட 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஹெட்-அப் திரை, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கார் இணைப்பு அம்சம், மெரிடியன் பிராண்டு ஸ்பீக்கர்கள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காட்சியளிக்கின்றது. இந்த கார் இந்தியாவில் மூன்று விதமான வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் ஒன்றையே தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








