யாரோ மாதிரி கோயிலுக்கு சாதாரண கார்ல வந்தது இவ்ளோ பெரிய ஆளா! அழகுல ரம்பை, ஊர்வசிலாம் 10 அடி தள்ளிதான் நிக்கணும்

இந்தியாவில் பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் உள்ளது. இந்த ரக கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இருப்பினும் ஓரளவிற்கு குறைவான விலையிலும் கூட, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு எஸ்யூவி ரக கார்கள் கிடைத்து கொண்டுதான் உள்ளன. இதில், பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1) மிகவும் முக்கியமானது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆரம்ப நிலை சொகுசு எஸ்யூவி ரக கார் ஆகும். எனவே இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 50.80 லட்ச ரூபாய் ஆக உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 53.80 லட்ச ரூபாய் ஆக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Jiya Shankar Spotted In BMW X1

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில், 136 பிஎஸ் பவர் மற்றும் 230 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். இதன் பவர் அவுட்புட் 150 பிஎஸ் பவர் மற்றும் 360 என்எம் ஆக உள்ளது.

இந்த இன்ஜின்கள் உடனும், 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலை குறைந்த கார்களில் ஒன்றாக இருந்தாலும் கூட, எக்ஸ்1 ஏராளமான வசதிகளை (Features) பெற்றுள்ளது. இதில், மெமரி மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள் மிகவும் முக்கியமானதாகும்.

BMW X1

இவை தவிர, பனரோமிக் சன்ரூஃப், 10.7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான வசதிகளாக இருக்கின்றன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை ராக்கி சவந்த் (Rakhi Sawant) போன்ற நடிகைகள் பலரும் வைத்துள்ளனர். இந்த சூழலில் மற்றொரு பிரபலமான நடிகை ஒருவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை பயன்படுத்தி வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, மும்பையை (Mumbai) சேர்ந்த பிரபல நடிகையான ஜியா ஷங்கர் (Jiya Shankar) ஆவார். மும்பையில் உள்ள உலக புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு (Siddhivinayak Temple) ஜியா ஷங்கர் வந்தபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை நிற உடையில் ஜியா ஷங்கர் கோயிலுக்கு உள்ளே சென்றபோதும், தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்தபோதும் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வெளியே வந்த சமயத்தில் அவர் அங்கிருந்த ரசிகர்களுக்கு பிரசாதங்களை வழங்குவதையும் நாம் காணலாம். இதன்பின் அவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில் ஏறி அங்கிருந்து சென்று விட்டார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜியா ஷங்கர் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரானது, இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ (Mercedes Benz GLA) மற்றும் ஆடி க்யூ3 (Audi Q3) போன்ற கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இது ஓரளவிற்கு விலை குறைவானது என்பதால், வளர்ந்து வரும் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 22, 2025, 13:25 [IST]
English summary
Jiya shankar spotted in bmw x1 luxury suv viral video read full details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+