ஐடி நிறுவனங்களை போல கார்களை பரிசாக வழங்கிய ஜேகே சிமெண்ட்.. அவங்க எல்லாரும் யாரு தெரியுமா?

காரை பரிசாக வழங்கும் கலாச்சாரம் தற்போது நாடு முழுவதும் பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, ஐடி நிறுவனங்கள் கார்களை பரிசளிப்பதில் முன்னணியில் உள்ளன. சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று அடி நிலை ஊழியர்கள் தொடங்கி உயர்நிலை ஊழியர்கள் வரை என அனைவருக்கும் கார்களை பரிசளித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த மாதிரியான சூழலிலேயே ஓர் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனம் கார்களை பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜேகே சிமெண்ட் (JK Cement) நிறுவனமே கார்களை பரிசாக வழங்கி இருக்கின்றது. நிறுவனம் அதன் விற்பனையாளர்களுக்கு (டீலர்கள்) கார்களை பரிசாக வழங்கி இருக்கின்றது.

JK cement gifted car

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகளான ஸ்கார்பியோ என் (Scorpio N) மற்றும் எக்ஸ்யூவி 700 (XUV700) கார் மாடல்களையே அது பரிசாக வழங்கி இருக்கின்றது. இந்தியாவில் இந்த இரண்டு கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. 65 பேருக்கு கார்களை ஜேகே சிமெண்ட்ஸ் பரிசாக வழங்கி இருக்கின்றது.

நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகப் பெரிய அளவில் பங்களித்ததன் காரணமாகவே 65 டீலர்களுக்கு கார் பரிசளிப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே இந்த பரிசை பெற்றவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். பரிசளிக்கப்பட்ட அனைத்து கார் மாடல்களும் வெள்ளை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டவை ஆகும்.

இதில் எக்ஸ்யூவி700 நிறுவனம் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடல் இந்தியாவில் 13.99 லட்சம் ரூபாயில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், ஸ்கார்பியோ என் கார் மாடலோ ரூ. 13.59 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலை உயர்ந்த கார்களையே சிறப்பாக செயலாற்றியதன் காரணமாக ஜேகே சிமெண்ட்ஸ் அதன் டீலர்களுக்கு இந்த கார்களை பரிசாக வழங்கி இருக்கின்றது. எக்ஸ்யூவி700 கார் மாடல் அடாஸ் போன்ற அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இதுபோன்ற இன்னும் பல கவர்ச்சியான சிறப்பம்சங்கள் மற்றும் தோற்றத்துடன் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்தியாவில் இந்த கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், மஹிந்திரா நிறுவனத்தின் மற்றுமொரு சிறந்த தயாரிப்பாகவே ஸ்கார்பியோ என் காட்சியளிக்கின்றது.

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரண்டு விதமான அவதாரங்களில் ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்கார்பியோ கிளாசிக் மாடலைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் இட வசதி மற்றும் பெரிய உருவ அமைப்பைக் கொண்டதே ஸ்கார்பியோ என் ஆகும். 7 இருக்கைகள் கொண்ட கார் மாடலாக மட்டுமே ஸ்கார்பியோ என் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இத்துடன், 4X4 சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சம் ஸ்கார்பியோ அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்க வேண்டி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. எனவேதான், கிராமம், சரியான சாலை வசதி இல்லாத பகுதிகளில் வசிப்பவர்கள் மத்தியில் ஸ்கார்பியோவிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்களை பரிசாக வழங்கும் கலாச்சாரம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது. கணவன்-மனைவிக்கும், தாய்-தந்தையர்கள் பிள்ளைகளுக்கும் கார்களை பரிசாக வழங்கி வந்த காலம் தற்போது மாறி நிறுவனங்கள் அதிக அளவில் ஊழியர்களுக்கு வாகனங்களை பரிசளிக்கும் சம்பவம் அரங்கேற தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2024, 11:01 [IST]
English summary
Jk cement who gifted a car like it companies
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+