“அடேயப்பா... நம்மள மாதிரியே நீங்களும் பயங்கரமான காரை தான் வெச்சிருக்கீங்க போல...” ஜோ பைடன்- ஜின்பிங் சந்திப்பு
உலகின் முக்கிய நிகழ்வாக, இரு எதிர் துருவங்களாக இருக்கும் அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் அதிபர்கள் இருவரும் சமீபத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். பின்னர், இருவரும் தங்களது கார்களின் சிறப்பம்சங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி பேசிக் கொண்டுள்ளனர். இருவரும் அப்படி என்ன தான் பேசிக் கொண்டனர்? வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் மிக நீண்ட வருடங்களாக பகை புகைந்து வருவதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. சில வருடங்களுக்கு முன் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் அமெரிக்க மக்களை டார்க்கெட் செய்தே வேண்டுமென்றே சீனாவில் பரப்பி விடப்பட்டதாகவும் அமெரிக்காவில் ஓர் பேச்சு உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சமீபத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது இருவரும் மிகவும் மரியாதை நிமித்தமாக பேசிக் கொண்டனர். பின்னர், ஜோ பைடன் ஜி ஜின்பிங்கின் விலையுயர்ந்த லிமௌசைன் காரை அருகில் சென்று பார்வையிட்டதோடு, கார் குறித்த விபரங்களையும் கேட்டறிந்தார்.
விலையுயர்ந்தது மட்டுமின்றி, ஜி ஜின்பிங்கின் கார் மிகவும் பாதுகாப்பானதும் கூட. இதன் காரணமாகவே, விமானத்தில் அமெரிக்காவுக்கு வந்த சீன அதிபர் உடன் தனது லிமௌசைன் காரையும் விமானத்தில் கொண்டுவந்துள்ளார். பின்னர், பாதுகாப்பு வீரர்கள் சூழ அந்த காரில் அமெரிக்க அதிபர் இருக்கும் இடத்திற்கு ஜி ஜின்பிங் சென்றுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ அலுவலக கார் ஹோங்கி லிமௌசைன் ஆகும். என்701 என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்படுகின்ற இந்த காரில் தான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள சீன அதிபர் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவுள்ளார். கடந்த 6 வருடங்களில் சீன அதிபர் அமெரிக்காவுக்கு சென்றிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
சமீபத்திய சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர், சீன அதிபர் இருவரும் தங்களது கார்களை பற்றி பல விஷயங்களை பேசிக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், "இது அழகான வாகனம்" என பைடன் ஆங்கிலத்தில் கூறுவதை கேட்க முடிகிறது. அத்துடன், "நாங்கள் இங்கு கொண்டுள்ள கேடிலாக் கார்களை போன்று இது உள்ளது. சர்வதேச சந்திப்புகளுக்கு அவை என்னுடன் பறக்கும்.
அவற்றை என்னவாக அழைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அவர்கள் இதனை பீஸ்ட் என அழைக்கின்றனர்" என்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ அலுவலக கார் கேடிலாக் ஆகும். ஹெவி-ட்யூட்டி ஜி.எம்.சி டாப்கிக் லாரி பிளாட்ஃபாரத்தில் இந்த கேடிலாக் கார் உருவாக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு கவசங்கள் மற்றும் மற்ற பாதுகாப்பு பொருத்தல்களினால் சுமார் 8 டன்களுக்கும் அதிகமான எடை கொண்டதாக ஜோ பைடனின் இந்த அபிஷியல் கார் விளங்குகிறது. இந்த் காரில் டூராமேக்ஸ் டீசல் என்ஜின் உள்ளது. சீன அதிபரின் லிமௌசைன் கார் சீனாவின் ஹோங்கி என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த காரில் 6-லிட்டர் வி12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிகவும் செல்வாக்கு மிகுந்த தலைவர்களாக இருப்பதால், அமெரிக்க மற்றும் சீன அதிபர்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பு மிக்க கார்களே வழங்கப்படும். இதனாலேயே அந்த கார்களை எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்கின்றனர். அமெரிக்க அதிபர், சீன அதிபர் இவர்கள் இருவரில் யாரின் கார் சிறப்பானதாக நீங்கள் எண்ணுகிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








