ரேகாசித்திரம் படத்திற்கு அப்பறம் லைப்பே மாறிருச்சு! பணக்காரர்கள் விரும்பி வாங்கும் மஹிந்திரா காரை வாங்கிட்டாரு

பணக்காரர்கள் மத்தியில் மஹிந்திரா (Mahindra)-வின் சமீபத்திய வெளியீடான எக்ஸ்இவி 9இ (XEV 9e), கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி ரக கார் (Electric SUV Car) மாடல் ஆகும். இந்த காரையே மலையாள திரைப்பட இயக்குநரான ஜோஃபின் டி சாக்கோ வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர், அவருடைய குடும்பத்துடன் சென்று அந்த காரை டெலிவரி பெற்ற படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

மஹிந்திராவின் புத்தம் புதிய எலெக்ட்ரிக் காருக்கு அருகில் இயக்குநர், அவருடைய மனைவி, அம்மா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் நிற்கின்ற மாதிரியான படங்களே தற்போது வெளியாகி உள்ளது. சமீப காலமாக மலையாள படங்களுக்கு நாடு தழுவிய அளவில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

Director jofin t chacko buys mahindra xev 9e ecar

குறிப்பாக, தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பான வரவேற்பு மலையாளப் படங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என கூறலாம். அதிலும், சமீபத்தில் திரைக்கு வந்த 'ரேகாசித்திரம்' படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படமாகக் காட்சியளிக்கின்றது. இந்த படத்தை இயக்கியவரே இந்த ஜோஃபின் டி சாக்கோ ஆவார்.

இவர் இதுவரை இரண்டே படங்கள் மட்டுமே எடுத்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. முன்னதாக மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக்டர்களில் ஒருவரான மம்மூட்டியை வைத்து 'தி பிரீஸ்ட்' எனும் படத்தை அவர் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Jofin t chacko got delivery mahindra xev 9e ecar

இதுமாதிரியான வெற்றிப் படங்களைத் தொடர்ந்தே இயக்குநர் ஜோஃபின் டி சாக்கோ தற்போது மஹிந்திராவின் லேட்டஸ்ட் அறிமுக காரை வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் எக்ஸ்இவி 9இ ரூ. 21.9 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த அளவு அதிக விலையைக் கொண்டிருந்தாலும் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிரபலங்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் டிமாண்ட் கிடைத்து்க கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே எக்ஸ்இவி 9இ-யை மலையாள பட இயக்குநர் ஜோஃபின் டி சாக்கோ வாங்கிய சம்பவம் அமைந்திருக்கின்றது.

Rekhachithram director jofin t chacko buys mahindra xev 9e ecar

Source: Manoramaonline அதேவேளையில், மஹிந்திரா நிறுவனம் அதன் உச்சபட்ச விலைக்கு ஏற்ப மிக அதிக ஆடம்பர அம்சங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், இந்த மிகப் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி காரில் அதன் உருவத்திற்கு 12.3 அங்குல அளவுக் கொண்ட பெரிய திரை ஒன்றை வழங்கி இருக்கின்றது.

இதுமட்டும் அல்ல பின் இருக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு திரை, ஹெட்ஸ் அப் திரை (HUD), ஏஐ (AI) தொழில்நுட்பம், 7 ஏர் பேக்குகள் மற்றும் லெவல் 2 வகை அடாஸ் (ADAS) என ஏகப்பட்ட அம்சங்களை மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரில் வழங்கி இருக்கின்றது.

பேட்டரி பேக்கைப் பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. 59 kWh மற்றும் 79 kWh ஆகியவை அவை ஆகும். முதல் பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

அதேவேளையில், இரண்டாவது பேட்டரி பேக் தேர்வில் அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 656 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளுடன் விரைவில் புதிதாக சிறியது அல்லது பெரிய பேட்டரி பேக் தேர்வுகள் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய பேட்டரி பேக் ஆப்ஷன் வழங்கப்படுகின்றதோ இல்லையோ கூடுதல் புதிய மோட்டார் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போதைய நிலவரப்படி மஹிந்திரா நிறுவனம் இந்த கார் மாடலை ரியர் வீல் டிரைவ் வசதியுடன் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே விரைவில் அனைத்து வீல் இயக்கம் கொண்ட ஆப்ஷனையும் இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், அது எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மஹிந்திரா நிறுவனம் சமீபத்திலேயே எக்ஸ்இவி 9இ கார் மாடலின் டெலிவரி பணிகளை நாட்டில் தொடங்கியது. இந்த காருக்கு பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் போன்ற பிரபலங்களும் இந்த காரை புக் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவர் மட்டுமல்ல 'மகாராஜா' பட வில்லன் அனுராக் காஷ்யப்கூட இந்த காரை சமீபத்தில் வாங்கினார். இவ்வாறு பிரபலங்கள் பணக்காரர்கள் என பலரையும் தன் வசம் எக்ஸ்இவி 9இ தன் பக்கம் கவர்ந்துக் கொண்டிருக்கின்றது.

மற்றுமொரு சுவாரஷ்யம் என்னவென்றால் இந்த காருக்கு புக்கிங் பணிகள் முதல் ஒரு நாளிலேயே 30,179 பேர் புக் செய்தனர். இது எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காருக்கு மட்டுமே கிடைத்த புக்கிங் என நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த காருடன் இணைந்து அறிமுகமான பிஇ 6 (BE 6)-க்கும் சேர்த்து கிடைத்த புக்கிங்கின் எண்ணிக்கை இதுவாகும்.

ஆனால், பிஇ 6ஐக் காட்டிலும் அதிக புக்கிங்கும், வரவேற்பும் எக்ஸ்இவி 9இ கார் மாடலுக்கே நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. உருவத்தில் மட்டுமே இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் விற்பனைக்கு வந்த பிறகும் கான்செப்ட் மாடலைப் போலவே பிஇ 6-இன் தோற்றம் இருக்கும். இதேபோல், எக்ஸ்இவி 9இ-யைக் காட்டிலும் சற்றே குறைவான உருவத்தை அதுக் கொண்டிருக்கும். அதேவேளையில், அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கி இருப்பது, பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகிய அனைத்திலும் இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திராவின் சமீபத்திய வரவுகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும் என கூறும் வகையிலேயே பிரபலங்கள் இந்த காரை வாங்கும் தொடர்ச்சியாக நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அனுராக் காஷ்யப் மற்றும் ஜோஃபின் டி சாக்கோவை போலவே இன்னும் பலர் இந்த எலெக்ட்ரிக் கார்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 7, 2025, 23:45 [IST]
English summary
Jofin t chackos journey from scorpio dreams to mahindra xev 9 purchase
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X