ஆடி க்யூ-7 கார் வாங்கி ஆசையை தீர்த்தார் நடிகர் ஜான் ஆபிரஹாம்

John Abraham Audi Car
மும்பை: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரிமியம் எஸ்யூவி கார் என்ற பெருமையை ஆடி க்யூ-7 எஸ்யூவி கார் தக்கவைத்து வருகிறது.

ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் தாமதமாக நுழைந்தாலும், அதன் விற்பனையை புதிய உச்சங்களை தொட வைத்த பெருமை ஆடி க்யூ-7 எஸ்யூவி காருக்கு உண்டு.

சாதாரண கார் வைத்துள்ள நடுத்தர மக்களுக்கு சொகுசு கார் வாங்குவது கனவாக இருக்கும்.

ஆனால், கோடிகளில் புரளும் பாலிவுட் பிரபலங்களையும், இந்த காரைத்தான் வாங்க வேண்டும் என்ற மனக்கோட்டை கட்டும் அளவுக்குகு தோற்றத்திலும், வசதிகளிலும் ஆடி க்யூ-7 நெஞ்சில் நிறைந்து நிற்கிறது.

பாலிவுட் நடிகர் நீல் நிதின் உள்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் ஆடி க்யூ-7 எஸ்யூவி காரை ஏற்கனவே சொந்தமாக்கி தங்களது கனவை நிறைவேற்றிக்கொண்டுள்ளனர்.

இந்த வரிசையில், பாலிவுட்டில் கட்டிளங்காளையாக வலம் வரும் ஜான் ஆபிரஹாமும் ஆடி க்யூ-7 காரை வாங்கி தனக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

தனது அழகாலும், வசீகரத்தாலும் ரசிகைகளை சுண்டி இழுத்த ஜான் ஆபிரஹாமுக்கு, ஆடி க்யூ-7 மீதுதான் கொள்ளை ஆசையாம்.

ஆடி க்யூ-7 எஸ்யூவி காரை டெலிவிரி பெறுவதற்காக மும்பையிலுள்ள ஆடி ஷோரூமுக்கு வந்த ஜான் ஆபிரஹாம்,

அங்கு நின்ற ஆர்-8 ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் காரை வைத்த கண் வாங்காமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த அவர் அந்த காரில் ஏறி அமர்ந்து கொண்டதுடன், அங்கு குவிந்த பத்திரிக்கை கேமராக்களும் விருந்து படைத்தார்.

பின்னர், அவர் புதிதாக வாங்கிய ஆடி க்யூ-7 எஸ்யூவி காரின் சாவியை ஷோரூம் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

புதிய ஆடி க்யூ-7 கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாக புலகாங்கிதத்துடன் தெரிவித்தார்.

ஷோரூமிலிருந்து புதிய காரில் புறப்பட்ட ஜான் ஆபிரஹாமை கண்ட அங்கு ரசிகர்கள் குவிந்தனர்.

அவர்களும் தங்களது மொபைல் கேமராவில் ஜான் ஆபிரஹாம் புதிய காரில் செல்வதை முண்டியடித்துக்கொண்டு க்ளிக்கி தள்ளினர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 24, 2011, 12:00 [IST]
English summary
The Audi Q7 is one car that has been India's highest selling Premium SUV in India. This car has helped Audi grow quickly despite its late entry in to the Indian market. There are several celebrities such as Neil Nithin Mukesh who pride themselves for being Audi car owners. The latest celebrity to join the list is Bollywood heartthrob John Abraham. John Abraham recently visited Audi's show room in Mumbai. He was handed over the keys of his new Q7 SUV. He not only posed for the cameras with the Q7 but also sat in a R8 sports cars much to the delight of the showroom owners.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+