ரெண்டுமே செம பவர்ஃபுல்... சூப்பரான 2 புதிய பைக்குகளை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

பிரபல நடிகர் ஜான் ஆபிரகாம், புதிதாக இரண்டு பைக்குகளை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெண்டுமே செம பவர்ஃபுல்... சூப்பரான 2 புதிய பைக்குகளை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

ஆக்ஸன் காட்சிகள் நிரம்பிய திரைப்படங்கள் மற்றும் சூப்பர் பைக்குகள் மீதான காதல் ஆகிய இரண்டு காரணங்களுக்காகதான் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் அறியப்படுகிறார். கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக ஜான் ஆபிரகாமின் புதிய திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேல் கடந்து விட்டது.

ரெண்டுமே செம பவர்ஃபுல்... சூப்பரான 2 புதிய பைக்குகளை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

இப்படிப்பட்ட ஒரு சூழலில் சமீபத்தில், புதிய சூப்பர் பைக் ஒன்றை ஜான் ஆபிரகாம் தனது கராஜில் இணைத்துள்ளார். புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் (BMW S 1000 RR) பைக்தான் அது. புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் பைக்கின் புகைப்படத்தை ஜான் ஆபிரகாம் சமீபத்தில், சமூக வலை தளங்களில் வெளியிட்டிருந்தார்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ரெண்டுமே செம பவர்ஃபுல்... சூப்பரான 2 புதிய பைக்குகளை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

அவரிடம் உள்ள மற்ற சூப்பர் பைக்குகள் உடன், புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் ஒன்றாக நின்று கொண்டிருந்தது. இதில், ஆச்சரியம் என்னவென்றால், புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேடு (Honda CBR1000RR-R Fireblade) பைக்கும் நின்று கொண்டிருந்தது. இந்த பைக்கையும் ஜான் ஆபிரகாம் புதிதாக வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெண்டுமே செம பவர்ஃபுல்... சூப்பரான 2 புதிய பைக்குகளை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

நாம் ஏற்கனவே கூறியபடி ஜான் ஆபிரகாம் சூப்பர் பைக்குகளை அதிகம் நேசிக்க கூடியவர். கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்-14ஆர், அப்ரில்லா ஆர்எஸ்வி4 ஆர்எஃப், யமஹா ஒய்எஃப்இஸட்-ஆர்1, டுகாட்டி பனிகாலே வி4, எம்வி அகஸ்ட்டா எஃப்3 800 மற்றும் யமஹா விமேக்ஸ் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை ஜான் ஆபிரகாம் ஏற்கனவே வைத்துள்ளார்.

ரெண்டுமே செம பவர்ஃபுல்... சூப்பரான 2 புதிய பைக்குகளை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

இவற்றுடன் தற்போது புதிதாக பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் மற்றும் ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேடு ஆகிய இரண்டு பைக்குகளும் சேர்ந்திருப்பதால், பிரபலங்களிலேயே அட்டகாசமான மோட்டார்சைக்கிள் கலெக்ஸனை வைத்திருக்கும் நபர் என ஜான் ஆபிரகாமை நம்மால் நிச்சயமாக கூற முடியும்.

ரெண்டுமே செம பவர்ஃபுல்... சூப்பரான 2 புதிய பைக்குகளை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் பைக்கில், 999 சிசி, இன்-லைன் நான்கு-சிலிண்டர் வாட்டர்/ஆயில்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 13,500 ஆர்பிஎம்மில் 203.8 பிஎச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ரெண்டுமே செம பவர்ஃபுல்... சூப்பரான 2 புதிய பைக்குகளை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

அதே சமயம் ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேடு பைக்கில், 1000 சிசி, இன்-லைன் நான்கு-சிலிண்டர் 4-ஸ்ட்ரோக் 16-வால்வு டிஓஹெச்சி லிக்யூட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 14,500 ஆர்பிஎம்மில் 214.5 பிஎச்பி பவரையும், 12,500 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ரெண்டுமே செம பவர்ஃபுல்... சூப்பரான 2 புதிய பைக்குகளை வாங்கிய பிரபல நடிகர்... யார்னு தெரியுமா?

பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்ஆர் பைக்கை போலவே, ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேடு பைக்கிலும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரைப்பட நடிகர்களில், ஜான் ஆபிரகாம் எப்படிப்பட்ட ரசனை உடையவர் என்பதை அவரது பவர்ஃபுல் மோட்டார்சைக்கிள் கலெக்ஸன் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
John Abraham Buys BMW S 1000 RR, Honda CBR1000RR-R Fireblade. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X