அக்ஷய் குமாருக்கு ஹார்(காஸ்ட்)லி பைக் பரிசளித்த ஜான் ஆபிரஹாம்!
ஹவுஸ்புல்-2 படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தன்னுடன் இணைந்து நடித்த அக்ஷய் குமாருககு ஹார்லி டேவிட்சன் பைக்கை பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் ஜான் ஆபிரஹாம்.
பாலிவுட் முன்னணி கதாநாயகர்களான ஜான் ஆபிரஹாமும், அக்ஷய் குமாரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இணைந்து நடித்த கரம் மசாலா, தேஸி பாய்ஸ் ஆகியவை பெரும் வெற்றிபெற்றன. இதைத்தொடர்ந்து தற்போது, இவர்கள் இணைந்து நடித்த மூன்றாவது படமான ஹவுஸ்புல்-2 படமும் பெரும் வெற்றியடைந்துள்ளது.

ராசியான கூட்டணி என்ற பெயர் பெற்றதால் இவர்களது நட்பு தற்போது மேலும் இறுக்கமாகியுள்ளது. இந்த நிலையில், அக்ஷய் குமாருக்கு பைக்குகளின் மீது தீராத காதல் இருப்பதை ஜான் ஆபிரஹாம் உணர்ந்து கொண்டார். ஹவுஸ்புல்-2 படத்தில் நடிக்கும்போதே படம் வெற்றியடைந்தால், தன்னிடம் உள்ளது போன்று ஹார்லி டேவிட்சன் பைக்கை பரிசளிப்பதாக அக்ஷய் குமாரிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஹவுஸ்புல்-2 படம் வசூலை வாரி குவித்துள்ளது. இதனால், சொன்னபடியே அக்ஷய் குமாருக்கு ஹார்லி டேவிட்சன் பைக்கை ஜான் ஆபிரஹாம் பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். கஸ்டமைஸ் செய்யப்பட்ட இந்த ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலை ரூ.30 லட்சம்.
இந்த நிலையில், ஜான் ஆபிரஹாம் பரிசளித்த ஹார்லி பைக்குக்கு பேன்ஸி நம்பர் வேண்டி மும்பை போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளராம் அக்ஷய் குமார்.


Click it and Unblock the Notifications








