31 லட்ச ரூபாய் பைக்கில் வந்தது அவரா! திக்கு முக்காடி போன வாகன ஓட்டிகள்! நேர்ல பாக்க குடுத்து வெச்சிருக்கணும்!

திரைப்பட நடிகர், நடிகைகள் பலரும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் ஒரு சில நடிகர்கள் சற்று வித்தியாசமாக பைக் மீது காதல் கொண்டவர்களாக உள்ளனர். தமிழ் திரையுலகில் நடிகர் அஜீத் குமார் (Ajith Kumar) இதற்கு ஒரு உதாரணம்.

பாலிவுட் திரையுலகில் பைக்குகள் மீது பைத்தியமாக இருக்கும் நடிகர் யார் என கேட்டால், ஜான் ஆபிரஹாம் (John Abraham) என கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லலாம். நடிகர் அஜீத் குமாரை போல், இவரும் பைக்குகள் மீது பேரார்வம் கொண்டவர். ஜான் ஆபிரஹாமின் பைக் கலெக்ஸன் (Bike Collection) மிகவும் பெரியது.

John Abraham Rides Ducati Panigale V4

டுகாட்டி பனிகேல் வி4 (Ducati Panigale V4), யமஹா வி-மேக்ஸ் (Yamaha V-Max), யமஹா ஒய்இஸட்எஃப்-ஆர்1 (Yamaha YZF-R1), கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்-14ஆர் (Kawasaki Ninja ZX-14R), கவாஸாகி இஆர்-6என் (Kawasaki ER-6n) பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் (BMW S1000RR) மற்றும் அப்ரில்லா ஆர்எஸ்வி4 ஆர்எஃப் (Aprilia RSV4 RF) உள்ளிட்ட பைக்குகள் எல்லாம் ஜான் ஆபிரஹாமிடம் உள்ளன.

பைக்குகளின் பெயர்களை படிப்பதற்கே மூச்சு முட்டுகிறதா? கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் ஜான் ஆபிரஹாமின் பைக் கலெக்ஸன் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது. மேற்கண்ட் பைக்குகள் தவிர ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேடு (Honda CBR1000RR-R Fireblade), எம்வி அகுஸ்டா எஃப்4 (MV Agusta F4) ஆகிய பைக்குகளும், ஜான் ஆபிரஹாமிடம் உள்ளன.

அத்துடன் கேடிஎம் ட்யூக் 390 (KTM Duke 390) பைக்கும் கூட ஜான் ஆபிரஹாமிடம் இருக்கிறது. இவ்வளவு பைக்குகள் இருக்கும் நிலையில், புதிய பைக்குகளை வாங்குவதை ஜான் ஆபிரஹாம் இன்னமும் நிறுத்தவில்லை. தொடர்ச்சியாக பல்வேறு புதிய பைக்குகளை அவர் வாங்கி கொண்டே இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதிய தலைமுறை சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa) பைக்கை அவர் வாங்கியதை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். இவ்வளவு பைக்குகளை வெறும் காட்சிக்காக வாங்கி நிறுத்தாமல், அவ்வப்போது ஜாலியாக ரைடு செல்வதையும் ஜான் ஆபிரஹாம் வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த வரிசையில் டுகாட்டி பனிகேல் வி4 பைக்கில் அவர் வலம் வரும் புதிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருந்தாலும் கூட, சாதாரண மனிதர்களை போல், மிகவும் எளிமையாக ஜான் ஆபிரஹாம் சாலையில் வலம் வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது நடவடிக்கை எளிமையானது என்றாலும் கூட, அவர் ஓட்டி வந்த பைக் எளிமையானது அல்ல. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலையே (Price) சுமார் 28 லட்ச ரூபாய் வருகிறது. ஆன் ரோடு விலை தோராயமாக 31 லட்ச ரூபாய் வரும். இத்தனைக்கும் ஜான் ஆபிரஹாம் வைத்திருப்பது, டுகாட்டி பனிகேல் வி4 லைன்-அப்பின் ஆரம்ப நிலை மாடல் மட்டுமே.

அதாவது இது ஸ்டாண்டர்டு மாடல். இதுதவிர இந்த பைக்கில் இன்னும் 2 வேரியண்ட்கள் (Variants) உள்ளன. அவை டுகாட்டி பனிகேல் வி4 எஸ் (Ducati Panigale V4 S) மற்றும் டுகாட்டி பனிகேல் வி4 ஆர் (Ducati Panigale V4 R) ஆகியவை ஆகும். இதில் டுகாட்டி பனிகேல் வி4 எஸ் வேரியண்ட்டின் விலை சுமார் 33 லட்ச ரூபாய் ஆகும்.

அதே நேரத்தில் டுகாட்டி பனிகேல் வி4 ஆர் வேரியண்ட்டின் விலை சுமார் 70 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். சாமானிய மனிதர்களுக்கு இவை அதிக விலை என்றாலும் கூட, திரைப்பட துறையை சேர்ந்தவர் என்பதால், ஜான் ஆபிரஹாமிற்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்காது என்பதில் சந்தேகமில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஜான் ஆபிரஹாமின் வீடியோ, மும்பையில் எடுக்கப்பட்டுள்ளது. அவர் விதிமுறைப்படி ஹெல்மெட் (Helmet) அணிந்திருப்பதை இந்த வீடியோவில நாம் பார்க்கலாம். இது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பதால், நடிகர், நடிகைகள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும். அதை ஜான் ஆபிரஹாம் சரியாக செய்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 11, 2023, 14:27 [IST]
English summary
John abraham rides rs 31 lakh worth ducati panigale v4 viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+