மச்சினிக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த நடிகர் அப்பாக்கு எவ்ளோ விலை குறைவான காரை பரிசளிச்சிருக்காரு பாருங்க!
பாலிவுட் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜான் ஆபிரகாம், தன்னுடைய தந்தைக்கு ஓர் எளிமையான காரை பிறந்த நாள் பரிசாக வாங்கிக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) கார் மாடலையே வாங்கிக் கொடுத்திருக்கின்றார். பாலிவுட்டில் கோடிகளில் புரளக் கூடிய முன்னணி நடிகர்களில் ஜான் ஆபிரகாமும் ஒருவர். இவரிடத்தில் சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கக் கூடிய விலைக் கொண்ட பைக்குகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஒன்றல்ல பல மோட்டார்சைக்கிள்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இத்தகைய ஓர் நபரே மிகவும் எளிமையான காரை தந்தைக்கு பரிசாக வழங்க வாங்கி இருக்கின்றார். இந்த கார் விலையில் வேண்டுமானால் குறைவானதாக இருக்கலாம். ஆனால், பயணங்களுக்கு மிகவும் உகந்த கார் மாடல் இதுவாகும். குறிப்பாக, பாதுகாப்பான பயணத்தை வழங்குவதில் இந்த கார் கை தேர்ந்தது ஆகும்.

இதற்கு சான்றாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மாடலில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS)-ஐ வழங்கி இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக விபத்தை தவிர்த்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
குறிப்பாக, அவசர கால தானியங்கி பிரேக்கிங், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஒரே நேர் கோட்டில் செல்வதற்கான வழி நடத்தல் உள்ளிட்ட வசதிகளையே அடாஸ் அம்சத்தின் வாயிலாக மஹிந்திரா வழங்கி இருக்கின்றது. லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பமே எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா போன்ற ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர பிரீமியம் தர அம்சங்களையும் மிக தாராளமாக இந்த காரில் மஹிந்திரா வாரி வழங்கி உள்ளது.
அந்தவகையில், பனோரமிக் சன்ரூஃப், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், பெரிய 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஹர்மேன் கர்டோன் ஆடியோ சிஸ்டம் போன்றவையும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த கார் பட்ஜெட் கார் பிரியர்களுடன் சேர்த்து சில முன்னணி பிரபலங்களையும் கவர்ந்து வருகின்றது.
அந்தவகையில், பிரபல கார் டிசைனரான பிரதாப் போஸ் கூட இந்த காரையே தன்னுடைய அம்மாவிற்கு சமீபத்தில் பரிசாக வழங்கினார். இவரை போலவே இன்னும் சில பிரபலங்களும் இந்த காரை வாங்கியிருக்கின்றனர். அதில் ஒரு சிலர் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காகவும் இந்த காரை வாங்கியிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த நிலையிலேயே அவர்களின் பட்டியலில் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமும் இணைந்திருக்கின்றார். மும்பையில் உள்ள மஹிந்திர கார் டீலர் வாயிலாகவே இந்த காரை ஜான் ஆபிரகாம் வாங்கியிருக்கின்றார். இந்த காரை அவருடைய தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டே அவர் பரிசளித்திருக்கின்றார். அந்த கார் ஸ்டீல்த் கருப்பு நிற பெயிண்டால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிறம் ஜான்-க்கு பிடித்த நிறம் என கூறப்படுகின்றது. இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் தாங்கிய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 7.49 லட்சம் மட்டுமே ஆகும்.
இதேபோல், இதன் அதிகபட்ச விலையே ரூ. 15.49 லட்சம் மட்டுமே ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். நடிகர் ஜான் ஆபிரகாம் தன்னுடைய குடும்பத்தினர்களுக்கு காரை பரிசாக வழங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் அவர் இதுமாதிரியான சம்பவங்களை நிகழ்த்தியிருக்கின்றார்.
அந்தவகையில், கடந்த 2012 ஆம் ஆண்டில் தன்னுடைய மனைவியின் தங்கைக்கு விலை உயர்ந்த கார் மாடலான ஆடி க்யூ3 எஸ்யூவி சொகுசு காரை பரிசாக வழங்கியிருந்தார். இதேபோல், பல விலை உயர்ந்த கார் மாடல்கள் மற்றும் அரிய வகை மோட்டார்சைக்கிளையும் நடிகர் ஜான் ஆபிரகாம் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேவேளையில், அவர் சமீப சில காலமாக விலை உயர்ந்த ஆடம்பர வகை வாகனங்களை வாங்குவதை தவிர்த்து வருகின்றார். அவற்றை தேவையில்லா செலவு மற்றும் தலைவலியைக் கொடுக்கக் கூடியவை என நடிகர் கருதுகின்றார். இந்த காரணத்தினால்தான் சமீப சில காலமாக அவர் எளிய வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றார். இதற்கு சான்றாகவே எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் கொள்முதல் சம்பவம் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜான் ஆபிராகம் மிகப் பெரிய பைக் காதலர் ஆவார். இவரிடத்தில் ஏகப்பட்ட விலை உயர்ந்த மற்றும் மிக மிக அரிய வகை மோட்டார்சைக்கிள்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, யமஹா ஆர்டி 350 போன்ற பைக் கூட அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








