அஜீத்லாம் ஓரமாதான் நிக்கணும்! அந்த நடிகர் வாங்கிய பைக் இவ்ளோ காஸ்ட்லியா! எல்லாம் படம் ஹிட் ஆன சந்தோஷம்!
இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் ஒரு சில பைக்குகள் பிரபலம் அடைவதற்கு திரைப்படங்கள் மிகவும் முக்கியமான காரணமாக இருக்கின்றன. பொல்லாதவன் திரைப்படத்தை இதற்கு ஒரு உதாரணமாக கூற முடியும். பைக்கை மையப்படுத்தி இத்திரைப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டிருக்கும். தனுஷ் இந்த திரைப்படத்தில் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) பைக்கை பயன்படுத்தியிருப்பார்.
இதைப்பார்த்து விட்டு ஏராளமான இளைஞர்கள் பஜாஜ் பல்சர் பைக்கின் மீது காதல் கொண்டனர். அதேபோல் இந்தியாவில் சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa) பைக் மிகவும் பிரபலமடைந்ததற்கு ஜான் ஆபிரஹாம் (John Abraham) ஒரு காரணம் என்றால் மிகையல்ல. பாலிவுட் (Bollywood) நடிகரான இவர், இந்தியா முழுவதும் ரசிகர்களால் அறியப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். 'தூம்' படத்தில் சுஸுகி ஹயபுசா பைக்கை, ஜான் ஆபிரஹாம் ஓட்டும் காட்சிகள் மிகவும் பிரபலம்.

சொந்த பைக்கா!
தூம் படத்தில் ஜான் ஆபிரஹாம் பயன்படுத்தியது அவரது சொந்த சுஸுகி ஹயபுசா பைக் என கூறப்படுகிறது. அத்துடன் சுஸுகி ஹயபுசா பைக்கின் புதிய மாடல்கள் வர வர அவர் அதற்கு மாறி கொண்டே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை நிரூபிக்கும் வகையில், 2023 சுஸுகி ஹயபுசா பைக்கை ஜான் ஆபிரஹாம் தற்போது வாங்கியுள்ளார். ஷாருக்கான் (Shah Rukh Khan) நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் (Pathaan) திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஸன் (Box Office Collection) பிரம்மிக்க வைக்கும் வகையில் உள்ளது.
அந்த சந்தோஷத்துல வாங்கியிருப்பாரோ?
பதான் திரைப்படத்தில் ஜான் ஆபிரஹாமும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, 2023 சுஸுகி ஹயபுசா பைக்கை ஜான் ஆபிரஹாம் வாங்கியுள்ளார். இந்த புதிய பைக்கை ஜான் ஆபிரஹாம் டெலிவரி பெறும் வீடியோ (Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரல் (Viral) ஆகி வருகிறது. பைக் பற்றிய செய்திகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இங்கே ஒரு சந்தேகம் வரலாம். 2023 சுஸுகி ஹயபுசா பைக் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லையே... அப்படி இருக்கும்போது ஜான் ஆபிரஹாம் அதை எப்படி வாங்கியிருக்க முடியும்? என்பதுதான் அந்த சந்தேகம்.
அது எப்படி திமிங்கலம்?
ஆம், 2023 சுஸுகி ஹயபுசா பைக் இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே ஜான் ஆபிரஹாம் இந்த பைக்கை பிரத்யேகமாக இறக்குமதி செய்துள்ளார். 2023 சுஸுகி ஹயபுசா பைக்கில் புதிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், மெட்டாலிக் தண்டர் க்ரே மற்றும் கேண்டி டேரிங் ரெட் கலரில் ஜான் ஆபிரஹாம் 2023 சுஸுகி ஹயபுசா பைக்கை தேர்வு செய்துள்ளார். ஆனால் முந்தைய மாடலில் பொருத்தப்பட்டிருந்த அதே இன்ஜின்தான், 2023 சுஸுகி ஹயபுசா பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது.
பவர்ஃபுல் இன்ஜின்!
இதன்படி 2023 சுஸுகி ஹயபுசா பைக்கில் 1,340 சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 190 பிஎஸ் பவர் மற்றும் 142 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பைக்கில் ஏராளமான அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. 2023 சுஸுகி ஹயபுசா பைக் இந்தியாவில் இன்னும் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், ஜான் ஆபிரஹாம் இறக்குமதி செய்த பைக்கின் விலை (Price) எவ்வளவு? என்பது உறுதியாக தெரியவில்லை.
இவ்ளோ காஸ்ட்லியா இந்த பைக்?
ஆனால் இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் சுஸுகி ஹயபுசா பைக்கின் விலை 16.51 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஜான் ஆபிரஹாம் வாங்கியுள்ள 2023 சுஸுகி ஹயபுசா பைக்கின் விலை இதைக்காட்டிலும் மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகை பொறுத்தவரை அஜீத் குமார் (Ajith Kumar) பைக் காதலராக அறியப்படுகிறார். அதேபோல் பாலிவுட் திரையுலகில் ஜான் ஆபிரஹாம் தீவிரமான பைக் ரசிகராக உள்ளார்.
பொறுப்பானவரா இருக்காரே!
இதன் காரணமாகவே இதுபோன்ற மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை ஜான் ஆபிரஹாம் வாங்கி குவித்து வருகிறார். ஜான் ஆபிரஹாமிடம் 10க்கும் மேற்பட்ட சூப்பர் பைக்குகள் உள்ளன. சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கான பயிற்சியை, கலிஃபோர்னியா சூப்பர் பைக் பள்ளியில் ஜான் ஆபிரஹாம் பெற்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பொது சாலைகளில் அதிவேகத்தில் பைக்குகளை ஓட்டுவதில்லை எனவும், முறையான ரேஸ் டிராக்குகளில் மட்டுமே அதிவேகத்தில் பைக்குகளை ஓட்டுவதாகவும் ஜான் ஆபிரஹாம் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








