பிரபல நகைக்கடை ஓனரே இந்த காரைதான் ஓடி வந்து வாங்கியிருக்காரு!.. வரும்போதே பிரச்னையுடன் வந்த கார் இது..
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி நகைக் கடைகளில் ஜோஸ் ஆலுக்காஸ்-ம் ஒன்றாகும். தென்னிந்தியாவின் பிரபலமான ஆபரண தங்க நகைக் கடையாக இது விளங்குகின்றது. இதன் சிஇஓ ஜான் ஆலுக்கா, இவரே தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். இந்தியர்கள் மத்தியில் புதிதாக பிரபலமடைந்துக் கொண்டிருக்கும் மஹிந்திரா (Mahindra) இ-காரையே அவர் வாங்கி இருக்கின்றார். சமீபத்தில் இந்த நிறுவனம் இரண்டு புதுமுக கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) ஆகிய கார் மாடல்களையே அது அறிமுகப்படுத்தியது.
இரண்டும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் (SUV Electric Car) மாடல்கள் ஆகும். இரண்டும் மிகுந்த கவர்ச்சியான தோற்றத்தைத் தாங்கியதாகவும் இருக்கின்றன. இதுமட்டுமல்ல அதிக ஆடம்பர அம்சங்களையும் இந்த கார்கள் தன்னுள் தாங்கி இருக்கின்றன. இதனாலேயே இந்த காருக்கு தற்போது மிகுந்த டிமாண்ட் நாட்டில் ஏற்பட தொடங்கி இருக்கின்றது.

பெரும் பணக்காரர்கள் தொடங்கி முன்னணி பிரபலங்கள் வரை என பலர் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது இந்தியாவின் முன்னணி நகைக் கடை ஓனர் ஜான் ஆலுக்கா வாங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இவர் ஓர் மிகப் பெரிய வாகன காதலர் ஆவார்.
இதற்கு சான்றாகவும் அவர் இந்த காரை வாங்கிய நிகழ்வு அமைந்துள்ளது. பலதரப்பட்ட சிறப்பம்சங்களைத் தாங்கிய இந்த (பிஇ 6) எலெக்ட்ரிக் கார், வரும்போதே பிரச்னையுடன் வந்த வாகனம் ஆகும். அதாவது, இந்த காருக்கு முதலில் மஹிந்திரா நிறுவனம் பிஇ 6இ (BE 6e) எனும் பெயரையேச் சூட்டயது.
இந்த பெயரைச் சூட்டியதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மஹிந்திராவை நீதிமன்றம் வரை இழுத்துவிட்டது. இதற்கு பின்னரே அதன் பெயர் பிஇ 6 என மாற்றப்பட்டது. இத்தகைய காரையே தற்போது ஜோஸ் ஆலுக்காஸ் ஓனரும், பெரும் செல்வந்தருமான ஜான் ஆலுக்கா வாங்கியுள்ளார். பிரச்னையுடன் வந்தாலும், மக்களின் மனதை மயக்கும் காராக இது வந்திருக்கின்றது.
இதன் ஒரே ஒரு யூனிட்டே ரூ. 18.90 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் உயர்நிலை தேர்வு ரூ. 26.90 லட்சம் என்கிற உச்சபட்ச விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அதிக விலைக்கு ஏற்ப லெவல் 2 அடாஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, விபத்தின்போதும் பாதுகாப்பாக இருக்கும் பேட்டரி பேக் போன்ற தரமான அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமல்ல, இந்த காரின் உள்பக்கத்தில் ஓர் இன்ஃபினிட்டி கிளாஸ் ரூஃப் வழங்கப்பட்டு இருக்கும்.
அது ஓர் டைனமிக் எல்இடி லைட் வசதியைக் கொண்ட ரூஃப் ஆகும். இதுமட்டுமல்ல மிதக்கின்ற மாதிரியான ஸ்டைலில் இரண்டு திரைகள், ஒளிரும் வசதிக் கொண்ட பிஇ எனும் லோகோ, மெல்லிய ஏசி துவாரங்கள், எல்இடி லைட்டுகள், டோருடன் டோராக இருக்கக் கூடிய ஹேண்டில் பார்கள் போன்ற அம்சங்களையும் இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கின்றது.

பேட்டரி பேக்கைப் பொருத்த வரை இரண்டு விதமான ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. 59 kWh மற்றும் 79 kWh ஆகியவையே அவை ஆகும். ஆனால், எலெக்ட்ரிக் மோட்டார் விஷயத்தில் ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. ரியர் வீல் டிரைவ் வசதிக் கொண்ட வாகனமாக மட்டுமே பிஇ 6 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
விரைவிலேயே இதில் புதிய ஆப்ஷனாக அனைத்து வீல் இயக்கம் கொண்ட வேரியண்ட் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 59 kWh பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ ரேஞ்சையும், 79 kWh பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 656 கிமீ ரேஞ்சையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதிலும், கூடுதலாக சில பேட்டரி பேக் தேர்வுகளை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இதுவரை வெளியாகவில்லை. இதுபோன்ற பன்முக வசதிகளைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் ஜான் ஆலுக்கா போன்ற பெரும் பணக்காரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
மஹிந்திராவின் இந்த காருக்கு மட்டுமல்ல எக்ஸ்இவி 9இ மாடலுக்கும் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் பிஇ 6 மாடலைக் காட்டிலும் அதிகப்படியானோர் எக்ஸ்இவி 9இ மாடலையே வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இரண்டும் உருவத்தில் மாறுபட்டுக் காணப்பட்டாலும், சிறப்பம்சங்கள் விஷயத்தில் அவை ஒரே மாதிரியானதாக இருக்கும்.
இருப்பினும், பலரை எக்ஸ்இவி 9இ கவர்ந்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அதன் பிரமாண்ட தோற்றமே காரணம் என கூறப்படுகின்றது. ஏஆர் ரஹ்மான் மற்றும் அனுராக் காஷ்யப் போன்ற பிரபலங்கள்கூட இந்த கார் மாடலையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. மிக சமீபத்திலேயே அவர்கள் இந்த காரை வாங்கினார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தகுந்தது.
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300 (Toyota Land Cruiser 300): ஜான் ஆலுக்கா தன்னுடைய புதிய மஹிந்திரா பிஇ 6 காரை டெலிவரி பெற டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 காரிலேயே வந்திறங்கினார். இந்த காரின் ஒரே ஒரு யூனிட்டு மட்டுமே ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.
இத்தகைய காரிலேயே கெத்தாக வந்திறங்கி மஹிந்திராவின் புதிய பிஇ 6 எலெக்ட்ரிக் காரை ஜான் ஆலுக்கா தன்னுடைய வீட்டிற்கு ஓட்டிச் சென்றார். உலக சந்தையில் வெகு நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் ஓர் கார் மாடலே டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 ஆகும். எல்சி 300 என்கிற பெயரிலும் இந்த கார் மாடல் அறியப்படுகின்றது. இதுவும் இந்தியப் பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாகும்.
லெதர் போர்த்தப்பட்ட இருக்கை, முன் மற்றும் பின் பக்கத்தில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஹெட்ரெஸ்ட், கோப்பை தாங்கிகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி என ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது.
இதுமாதிரியான அம்சங்களின் காரணமாகவும், பிரமாண்ட தோற்றம் காரணமாகவும் இந்த காரை இந்தியாவில் பலர் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் இந்த காரை புல்லட் ப்ரூஃப் காராக மாற்றியும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திராவின் இந்த (எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6) மின்சார கார்கள் விற்பனைக்கு வந்திருப்பது எம்ஜி விண்ட்ஸர் இவி மற்றும் டாடா நெக்ஸான் இவி உள்ளிட்ட முன்னணி எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. விரைவில் இவற்றை விற்பனையில் மஹிந்திரா இ-கார்கள் பின்னுக்கு தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









