தங்கம் விலை ஏறியதும் அலுக்காஸில் லாபம் கொட்டுது போல! ரூ1.5கோடி காரை வாங்கிய ஜான் அலுக்காஸ்!

இன்று தங்கம் விலை மிக அதிகமாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கிராம் ரூ6000த்திற்கு விற்பனையாகி வந்த தங்கம் தற்போது கிராம் ரூ12,000த்திற்கு விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகைகடை நெட்வொக்கான ஜோஸ் அலுக்காஸ் ஜூவல்லரியின் உரிமையாளர் ஜான் அலுக்காஸ் புதிதாக ரூ1.5 கோடிக்கு கார் வாங்கியுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இவர் சமீபத்தில் தான் எம்ஜி சைபஸ்பர் காரை வாங்கிய நிலையில் உடனடியாக மற்றொரு காஸ்ட்லி காரை வாங்கியது. வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஜூவல்லரி குழுமம் ஜோஸ் அலுக்காஸ் அதன் சிஇஓ வாக இருப்பவர் ஜான் அலுக்காஸ். இவர் பல காஸ்ட்லிகார்களை சொந்தமாக வைத்துள்ளார். இவர்கார் வாங்கியது குறித்து அவ்வப்போது செய்திவந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் டொயோட்டா நிறுவனத்தின் வில்ஃபயர் என்ற சொகுசு எம்பிவி காரை வாங்கியுள்ளார். இது போக இவரிடம் ஏராளமான சொகுசு கார்கள் இருக்கிறது.

John Alukkas Toyota Vellfire

தற்போது இவர் வாங்கிய டொயோட்டா வில் ஃபயர் வீடியோவை ஜான் அலுக்காஸே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தவீடியோவில் முதலில் கார் கருப்பு நிற துணிவைத்து மூடப்பட்டுள்ளது. ஜான் அலுக்காஸ் 2 பாதுகாவலர்களுடன் வருகிறார். அவரை டொயோட்டா டீலர்ஷிப் ஊழியர்கள் வரவேற்கிறார்கள். பின்னர் இவர் கம் மீது உள்ள கருப்பு துணியை நீக்குகிறார். அதன்பிறகு இந்த காரின் வெளிப்புறம் மற்றும் வெளிப்புற தோற்றம் காட்டப்படுகிறது. பிறகு அவர் இந்த காரில் வெளியே செல்கிறார். அவருக்கு பாதுகாப்பிற்காக டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா காரில் சிலர் செல்கிறார்கள்.

டொயோட்டா வில் ஃபயர் காரை பொருத்தவரை சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இகு்கிறது. இந்த கார் ஒரு பிரமியம் எம்பிவி ரக கார் ஆகும். இந்த காரை பல பிரபலங்கள்ல, தொழிலதிபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட ஒர ஸ்டாண்ட்டப் காமெடியன் சாமே ரெய்னா இந்த காரை வாங்கியிருந்தார். இந்த காரைபிரபலங்கள் பலர் விரும்பிவாங்க முக்கியான காரணம் இ்நதகாரில் பின்பக்கம் உள்ள பெரிய கேப்டன் சீட்கள் தான். இதில் வென்டிலேஷன், மசாஜ், சாய்வு வசதி, ஆகியவை இருக்கிறது. இது பயணத்தின் போது பயணிகளுக்கு சொகுசு வசதியை தருகிறது.

John Alukkas Toyota Vellfire

இந்த காரில் ரிடிராக்டபிள் டேபிள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மென்ட், ஓட்டோமேன்ஸ் ஹீட்டிங், வென்டிலேஷன் மற்றும் மசாஜ் அம்சங்கள் இந்த காரில் உள்ளது. இது போக இந்த காரின் உள்ளே 14 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர் சன்ஷேடுகள், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜர், 60+ கனெக்டெட் கார் அம்சங்கள், டொயோட்டா பாதுகாப்பு சென்ஸ் அடாஸ், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட்டுகள் உள்ளன.

இந்த காரில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதுஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டதுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 193 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் வடிவமைக்கப்ப்பட்டுள்ளது. இதனால் இ்நத காரை பிரபலங்கள் பலர் விரும்பி வாங்கிவருகின்றனர்.

John Alukkas Toyota Vellfire

ஜான் அலுக்காஸ் சமீபத்தில் தான் சொந்தமாக எம்ஜி சைபஸ்டர் காரைவாங்கினர். இது சிவப்பு நிறத்திலான கார் ஆகும். இதில் எலெக்ட்ரானிக் சிஸர் டோர்கள் உள்ளது. மேலும் இவரடம் லாம்போர்கினி ஹராகேன் சூப்பர் கார், போர்ஷே 911, மெர்சிடீஸ் பென்ஸ் எஸ்எல்கே கன்வெர்டபிள், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 3000, மஹிந்திரா தார் 3 டோர் மற்றும் மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய கார்கள் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜோஸ் அலுக்காஸ் நகைகடை பிரபல கடையாகஇருக்கிறது.இங்கு மக்கள் பலர் நகைவாங்கும் நிலையில் அதன் அதிபர் பல காஸ்ட்லியான காரைவாங்கி வருகிறார். இவர் வாங்கிய இந்த கார் நிச்சயம் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 23, 2025, 11:10 [IST]
English summary
John alukkas toyota vellfire after mg cyberster purchase
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X