எளிமையில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே ஒன்னுமில்ல ஆக்கிட்டாரே... இப்படியும் ஒரு ஹாலிவுட் நடிகரா!
எளிமையான வாழ்க்கைக்கு பெயர்போனவராக நடிகர் ரஜினிகாந்த் இருக்கின்றார். இவர் ஒரு படத்திற்கே சம்பளமாக 100 கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், இவர் தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி (Toyota Innova HyCross MPV) காரையே பயன்படுத்தி வருகின்றார். முன்னதாக பழைய வெர்ஷன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta MPV)-யை பயன்படுத்தி வந்தநிலையில், சமீபத்திலேயே புதிய இன்னோவா ஹைகிராஸ் பயன்பாட்டிற்கு அவர் மாறினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது சற்று காஸ்ட்லியான கார் மாடலாக தெரியலாம். மாதம் 30-50 ஆயிரம் ரூபாயை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றோருக்கு இது காஸ்ட்லியான கார் மாடல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ரஜினி போன்று கோடியில் புரளுபவர்களுக்கு இன்னோவா மட்டுமல்ல சில ரோல்ஸ் ராய்ஸ் கார்களே மிகவும் சாதாரணமான கார் மாடல்தான் என்பது குறிப்பிட்ததகுந்தது.

இதனால்தான் மிகவும் எளிமையான மனிதனாக ரஜினி அறியப்படுகின்றார். அதேவேளையில், நம்முடைய சூப்பர் ஸ்டார் மட்டுமில்லைங்க, இன்னும் பலர் கோடியில் சம்பளம் வாங்கிக் கொண்டு மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ரஜினிக்கே ஓர் நபர் டஃப் கொடுக்கும் அளவிற்கு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பது பெரும் வியப்பாக அமைந்திருக்கின்றது.
அதிலும், அவர் ஓர் ஹாலிவுட் நடிகர் என்பது கூடுதல் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகரும், முன்னாள் டபிள்யு.,டபிள்யு.,இ., (WWE) குத்துச் சண்டை வீரருமான ஜான் சீனாவே அவர் ஆவார். இவர் ஹோண்டா சிவிக் கார் மாடலை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தநிலையில், இப்போதே புதிய கார் ஒன்றிற்கு மாறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
ஆச்சரியம் என்னவென்றால் அவர் மீண்டும் அதே ஹோண்டா சிவிக் காரையே வாங்கி இருக்கின்றார். மிக சமீபத்திலேயே ஹோண்டா நிறுவனம் அதன் சிவிக் கார் மாடலின் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷனை உலக சந்தைகள் சிலவற்றில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதையே ஜான் சீனா தற்போது வாங்கி இருக்கின்றார்.
இந்த கார் பயன்படுத்த மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், நிலை தன்மையைக் கொண்டிருப்பதாகவும் நடிகர் ஜான் சீனா கருத்து தெரிவித்து உள்ளார். இதன் விளைவாகவே விற்பனைக்கு விரைவிலேயே புதிய வெர்ஷன் சிவிக்கிற்கு அப்கிரேட் ஆகியிருக்கின்றார். முன்பு பயன்படுத்தி வந்தது ஹோண்டா சிவிக் டைப் ஆர் ஆகும்.
இதை 2021 ஆம் ஆண்டிலிருந்தே அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது அவர் வாங்கி இருக்கும் 2024 ஹோண்டா சிவிக் மிகவும் பவர்ஃபுல்லான ஹைபிரிட் தொழில்நுட்பத்தைக் கொண்டதை என்பது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து ஹோண்டா சிவிக் காரை ஜான் சீனா பயன்படுத்தி வருவது அவருடைய ரசிகர்கள் பலரை ஆச்சரியத்தில் மூழ்க செய்துள்ளது.
2024 ஹோண்டா சிவிக் டைப் ஆர் 2.0 லிட்டர் விடெக் (VTEC) எஞ்சினையேக் கொண்டுள்ளது. இது அதிகபட்சமாக 311 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஆக்டிவ் எக்சாஸ்ட் வால்வுடன் கூடிய டிரிபிள் அவுட்லெட் எக்சாஸ்ட் மற்றும் டூயல்-ஆக்சிஸ் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன் ஆகியவற்றையும் இந்த கார் கொண்டுள்ளது.
மேலும், இந்த காரில் சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக மல்டி-லிங்க் ரியர் சஸ்பென்ஷன், அடாப்டிவ் டேம்பர் சிஸ்டம் மற்றும் ப்ரெம்போ பிரேக்குகள் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. ஜான் சீனாவிடத்தில் ஹோண்ட சிவிக் மட்டுமல்ல இன்னும் பல கார்கள் அவரிடத்தில் உள்ளன.
அந்தவகையில், 1966 டாட்ஜ் ஹெமி சார்ஜர் 426 (1966 Dodge Hemi Charger 426) மற்றும் 1970 பிளைமவுத் ரோட் ரன்னர் சூப்பர்பேர்ட் (1970 Plymouth Road Runner Superbird) போன்ற விண்டேஜ் மாடல்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, அவர் 2013 ஃபெராரி 458 இத்தாலியா (2013 Ferrari 458 Italia), ஃபோர்டு ஜிடி (2006 Ford GT) மற்றும் 1989 ஜீப் ரேங்க்லர் (1989 Jeep Wrangler) ஆகியவற்றையும் வைத்திருக்கிறார்.
மேலும், ஜான் சீனா சமீபத்தில் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட 1969 எம்ஜிசி ஜிடி (1969 MGC GT) காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றுடனேயே தற்போது புதிய ஹோண்டா சிவிக் காரையும் ஜான் சீனா சேர்த்திருக்கின்றார். மிகப் பெரிய விண்டேஜ் கார் காதலர் ஹோண்டா சிவிக்கை வாங்கியிருப்பதே பலருக்கு ஆச்சரியமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜான் சீனா மிகவும் வித்தியாசமான கார் காதலர் என்பது அவரின் கார் சேகரிப்பின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ் போன்ற சொகுசு கார்களுக்கு பதிலாக அவர் அரிய வகை விண்டேஜ் கார்களையே தன்னுடைய கார் சேகரிப்பில் சேர்த்துக் கொண்டிருக்கின்றார். எனவே மிகவும் தனித்துவமான கார் காதலரே ஜான் சீனா என்பது மீண்டும் உறுதியாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








