கார் மற்றும் பைக் ரேஸ்களில் வென்ற ஒரே உலகச்சாம்பியன் மரணம்!

Written By:

கார் மற்றும் பைக் ரேஸில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற உலகச் சாதனை படைத்த இங்கிலாந்தைச் சேர்ந்த 'ஜான் சர்தீஸ்' தனது 83 வயதில் முதுமை காரணமாக மரணமடைந்தார். காற்றின் மைந்தன் என்று செல்லமாக இவர் அழைக்கப்பட்டு வந்தார். ரேஸ் உலக வரலாற்றிலேயே இவரைப் போல் ஒரு மகத்தான சாதனையை எவரும் இதுவரையில் படைத்திருக்கவில்லை.

காற்றில் கரைந்த 'காற்றின் மைந்தன்' ஜான் சர்தீஸ்!

இங்கிலாந்தின் லண்டன் நகரில் 1934 ஆம் ஆண்டில் பைக் டீலர் ஒருவருக்கு மகனாக பிறந்தார் சுர்தீஸ், இவரை பிக் ஜான் என்றும் செல்லமாக அழைக்கின்றனர். இயற்பிலேயே இவருக்கு பைக் ரேஸ் மீது தீராத காதல். இவர் தனது தந்தையின் வின்செண்ட் மாடல் பைக்கில் முதல் முறையாக ஒரு பைக் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு போதுமான வயது இல்லை என்பதால் போட்டிக்கும் பின்னர், பந்தய அமைப்பாளர்கள் அவரின் வெற்றியை ஏற்க மறுத்து தகுதி நீக்கம் செய்தனர்.

காற்றில் கரைந்த 'காற்றின் மைந்தன்' ஜான் சர்தீஸ்!

தனது 15 வயதில் முதல் முறையாக தொழில்முறை பைக் பந்தயங்களில் கலந்துகொண்ட ஜான், அடுத்த ஆண்டிலேயே தலைப்புச் செய்திகளில் வரத்துவங்கினார். தனது 19 வயதிலேயே அப்போதைய உலகச் சாம்பியன் ஒருவரை தோற்கடித்துள்ளார், என்பது இவரின் திறமையை பறைசாற்றுகிறது.

காற்றில் கரைந்த 'காற்றின் மைந்தன்' ஜான் சர்தீஸ்!

500சிசி பிரிவு மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொண்டு முதல் முறையாக 1956ஆம் ஆண்டு உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ஜான், தொடர்ந்து 1958, 1959 மற்றும் 1960ஆம் ஆண்டுகளிலும் உலகச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். மேலும் 350சிசி பிரிவில் 1958, 1959 மற்றும் 1960ஆம் ஆண்டுகளில் உலகச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

காற்றில் கரைந்த 'காற்றின் மைந்தன்' ஜான் சர்தீஸ்!

பைக் ரேஸில் ஜாம்பவனாக திகழ்ந்த ஜான், 1960ஆம் ஆண்டில் தனது 26வது வயதில் மோட்டார்சைக்கிள் பந்தயத்திலிருந்து தனது கவனத்தை கார் பந்தயம் மீது திருப்பினார். விரைவாகவே அதிலும் உலகின் முன்னோடி ரேசராக மாறினார். தான் பங்குபெற்ற இரண்டாவது ஃபார்முலா-1 கார் பந்தயத்திலேயே இரண்டாம் இடம் பெற்று வியக்கவைத்தார்.

காற்றில் கரைந்த 'காற்றின் மைந்தன்' ஜான் சர்தீஸ்!

1964ஆம் ஆண்டில் இத்தாலி அணிக்காக ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் பெராரி காரில் களமிறங்கிய ஜான் சுர்தீஸ், அதில் உலகச் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். இதுவரையிலும் எந்த ஒரு வீரராலும் முறியடிக்கப்படாத சாதனையாக அது நீடிக்கிறது. இந்நிலையில், சுவாசக்கோளாறு பிரச்சனை தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 83வது வயதில் காலமானார் ஜான் சுர்தீஸ்.

காற்றில் கரைந்த 'காற்றின் மைந்தன்' ஜான் சர்தீஸ்!

1970ஆம் ஆண்டில் பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்ற சுர்தீஸ், தனது ஓய்வு காலத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயத் துறையில் பயனுள்ள வகையில் பல ஆக்கப்பூர்வ வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

பல அளப்பரிய சாதனைகளை படைத்த ஜானுக்கு, சர்வதேச மோட்டார்ஸ்போர்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியக்கத்தில் அவரின் உருவப்படத்தை அமைத்து மரியாதை செய்துள்ளனர்.

காற்றில் கரைந்த 'காற்றின் மைந்தன்' ஜான் சர்தீஸ்!

ஹென்ரி சுர்தீஸ் அமைப்பு என்ற ஒன்றை தொடங்கி மூளை வளர்ச்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை செய்து வந்தார் ஜான். இவரின் மரணத்தை உறுதிசெய்து குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "கடைசி வரையிலும் சாதனை மனிதராக வாழ்ந்து மறைந்த ஜான், சாதிக்கத்துடிக்கும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்துள்ளார்" என்று கூறியுள்ளனர்.

காற்றில் கரைந்த 'காற்றின் மைந்தன்' ஜான் சர்தீஸ்!

புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதற்கேற்ப இவரின் மகனும் ஒரு கார் பந்தய வீரர் தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 2009ஆம் ஆண்டில் ஃபார்முலா-2 கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இவரின் 18 வயது மகன் ஹென்ரி காலமானார்.

காற்றில் கரைந்த 'காற்றின் மைந்தன்' ஜான் சர்தீஸ்!

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் 7 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ஒருவர், அதிலிருந்து விலகி கார் பந்தயங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்த 4 வருடங்களிலேயே, உலகச் சாம்பியன் பட்டம் வெல்கிறார் என்றால் அவரின் கடின முயற்சியும், ஆற்றலும், ஈடுபாடும் எந்த அளவுக்கு அளப்பரியதாக இருந்துள்ளது என்பது வியக்கச் செய்கிறது.

அவரின் ஆன்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போம்.

ஸ்போர்ட்ஸ் மாடாலான மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரின் படங்கள்:

English summary
Surtees is considered as one of motorsport's greatest competitors of all time.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark