என்னங்க இப்படி சொல்லிட்டாரு? தென்.ஆப்பிரிக்க அணிக்கு இந்தியாவிட்ட தோற்றதை விட இது தான் பெரிய அவமானம்!
உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணி (South African Cricket Team) இந்தியாவிடம் மிக மோசமான தோல்வியை தழுவிய நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் (Jonty Rhodes) அந்த அணியை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ராயல் என்ஃபீல்டு (Royal Enfield Hunter 350) பைக் உடன் ஒப்பிட்டு கலாய்த்துள்ளார் இது குறித்த விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.
தற்போது இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் (World Cup Circket) போட்டி நடந்து வருகிறது. கிட்டத்தட்ட போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் நேற்று இந்தியா-தென்னாப்பிரிக்கா (IND-SA) இடையேயான போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை அடித்த நிலையில் அதை ஷேர் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியிடம் படுதோல்வியை சந்தித்தது.

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான இந்தப் போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது தற்போது புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே இந்த போட்டி நடப்பதால் இது கடுமையான போட்டியாக இருக்கும் என பலரால் கருதப்பட்டது. ஆனால் இந்த போட்டி ஒரு பக்கமாக முடிந்தது.
இந்நிலையில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்த தென் ஆப்பிரிக்கா அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் (Jonty Rhodes) தனது டிவிட்டர் பக்கத்தில் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கையும் தென் ஆப்பிரிக்க அணியும் ஒப்பிட்டு ஒரு கிண்டல் பதிவை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது. பலர் இந்த கிண்டல் பதிவை பகிர்ந்து அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவிடம் தென் ஆப்பிரிக்கா அணி சுமார் 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் அந்த அணியை விமர்சிக்கும் வகையில் ஒரு கலாய்ப்பு பதிவாக இதை பதிவு செய்துள்ளார். ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஹன்டர் 350 பைக் இருக்கிறது. அதை இரண்டு குழந்தைகள் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதில் உள்ள 2குழந்தைகளும் ஜான்டி ரோட்ஸின் குழந்தைகளாக உள்ளனர். அவர்கள் சுத்தப்படுத்துவது ஜான்டி ரோட்ஸின் ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 (Royal Enfield Hunter 350) பைக் தான். இதை பகிர்ந்த அவர் " இந்த புகைப்படத்தில் உள்ள எனது ராயல் என்பீல்டு ஹன்டர் பைக்கும் நேற்று நடந்த போட்டியில் விளையாடிய தெ.ஆப்பிரிக்கா அணியும் ஒன்றாக பார்க்கிறேன். இதில் பொதுவான விஷயங்களில் இருக்கிறது. 2ம்நன்றாக சுத்தம் செய்யப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு மூலம் ஜாண்டி ரோட்ஸ் தென் ஆப்பிரிக்கா அணியை கலாய்த்து இருந்தாலும் அவரிடம் தற்போது ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பைக்கை பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். முக்கியமாக பிரபலங்கள் கூட இந்த பைக்கை விரும்பி வாங்கி வருகின்றனர். பைக்கில் உள்ள பல முக்கிய சிறப்பம்சங்கள் காரணமாகவே பலர் இந்த பைக்கை விரும்பி வாங்கி வருகின்றனர்.
இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 349.34 சிசி இன்ஜின் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் லிட்டருக்கு 36 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஃப்யூயல் டேங்கை பொருத்தவரை 13 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கை பார்க்க சிறப்பான லுக்கில் இருக்கிறது. இந்த பைக்கில் உள்ள 350 சிசி இன்ஜின் சிறப்பான பெர்ஃபார்மன்ஸை வழங்குகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்ஜினை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சிட்டி ரைடிற்க்கு இந்த பைக் ஏற்றதாக இருக்கிறது. ஆனால் இந்த பைக்கில் ஜிபிஎஸ் வசதி இல்லை. அதேபோல இந்த பைக்கின் சஸ்பென்ஷன் சிஸ்டமும் இருப்பதால் ரைடிங் குவாலிட்டியும் அதே போன்று தான் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இளைஞர்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த பைக்கை வாங்க விரும்புகின்றனர். அப்படித்தான் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸும் இந்த பைக்கை வாங்கியுள்ளார். இவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் மற்றும் டிவிட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
