ஆள் தெரியாம அவமானப்படுத்திட்டாங்க! ரோல்ராய்ஸை தரமான சம்பவம் செய்த நகை கடை அதிபர்!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்க வேண்டும் என்றால் அவர்கள் சமூகத்தில் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அல்லது பெரும் பணக்காரராக இருக்க வேண்டும் பிரபலமான நபராக இருக்க வேண்டும் அவர்களுக்கு மட்டும் தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கார்களை விற்பனை செய்யும் என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஆனால் அது உண்மை அல்ல என்ற தெளிவை நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஊழியர்களால் அவமானப்படுத்திய ஒரு நபர் இன்று பல்வேறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக வைத்துள்ள சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கார் ஷோரூம் உள்ளே செல்லும் போது அங்கு வரும் வாடிக்கையாளர்களின் தோற்றத்தை பார்த்து அவர்கள் கார் வாங்க தகுதியானவர்களா இல்லையா என்று முடிவு செய்யும் பழக்கம் பல்வேறு டீலர்ஷிப்ளில் உள்ள ஊழியர்களுக்கு இருக்கிறது. தோற்றத்தில் சரியாக இல்லாத நபர்களை ஷோரூம் உள்ளே அனுமதிக்காமல் அவமானப்படுத்தி வெளியே அனுப்பும் சம்பவங்கள் எல்லாம் பல இடங்களில் நடந்துள்ளன இப்படியான ஒரு சமூகம் ஒரு பெரிய பணக்காரருக்கு நடந்துள்ளது.

ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக இருப்பவர் சமீபத்தில் சிஎன்பிசி தளத்திற்கு ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் பேட்டியில் அவர் rolls-royce நிறுவனத்தின் ஷோரூமுக்கு சென்று அவருக்கு ஏற்பட்ட அவமானம் குறித்த தகவலை பேசியுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜாய் அலுக்காஸ் என்ற குழுமம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகை கடைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சேர்மன் கடந்த 2000-வது ஆண்டில் துபாயில் உள்ள ரோல்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப்பிற்குள் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு இருந்த ஊழியர்கள் அவர் எதற்காக வந்தார் என்ன விசாரித்துள்ளார்கள். அப்பொழுது அவர் rolls-royce காரர்களை பார்க்க வந்ததாக கூறியுள்ளார். அவர்கள் தன்னை நன்றாக கவனித்து கார் குடித்த தகவல்களை அளிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு எதிர்பாராத ஒரு பதில் காத்திருந்தது.

Joy Alukkas Rolls Royce

அவரை வெளியே செல்ல சொன்ன ஊழியர்கள் அவரால் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க முடியாது எனவும், அவர் அருகில் உள்ள மிட்சுபிஷி டீலர்ஷிப் சென்று கார்களை பற்றி விசாரித்துக் கொள்ளவும் என கூறி அவரை அவமானப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அவரை மனதளவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் எப்படியாவது ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க வேண்டும் என அந்த ஆண்டு அவர் rolls-royce காரை வாங்கி உள்ளார்.

அந்த காரையை வாங்கிய பிறகு தான் அவருக்கு rolls-royce நிறுவனம் பற்றியோ அந்த காரைப் பற்றியோ பெரிதாக தனக்கு புரிதலில் இல்லை என்பதை புரிந்து கொண்டார். அவருக்கு உண்மையிலேயே ரோல்ஸ் ராய்ஸ் என்பது தேவையில்லாத ஒன்று என்பதை அவர் உணர்ந்து கொண்டார். இப்படியாக அவர் வாங்கிய காரை எப்படியாவது பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என புதிய திட்டம் ஒன்றை தீட்டினார்.

அதன்படி துபாயில் செயல்பட்டு வரும் அவரது நகை கடையில் குலுக்கல் போட்டி ஒன்றை அறிவித்தால் அதன்படி நகை வாங்குவதற்கு சீட்டு ஒன்று வழங்கப்படும். அந்த சீட்டில் அவர்கள் தகவல்களை நிரப்பி அங்கிருக்கும் பெட்டியில் போட வேண்டும். குறிப்பிட்ட நாளுக்கு பிறகு அங்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இவருக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் காரையும் பரிசாக வழங்க முடிவு செய்திருந்தார்.

அந்த காலகட்டத்தில் இந்த குழுக்கள் பரிசுப் போட்டி மிகப்பெரிய அளவில் பிரபலமானது. துபாய் முழுக்க பலர் இது குறித்து பேசினார்கள். இதனால் அந்த பிராண்ட் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமானது. ஜாலுக்காக சென்ற பிராண்டு பிரபலமாக இந்த போட்டி மிகப்பெரிய காரணமாக அமைந்தது இதனால் விற்பனையும் அதிகமாக நடந்தது. இவர் சொன்னது படியே தனது rolls-royce காரை பரிசாக வழங்கினார். இப்படியாக இவர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் சில்வர் செப்பரா என்ற காராகும் .இந்த காரில் 5.4 லிட்டர் வி122 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இவர் வாங்கும்போது இது rolls-royce நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடல் காராக இருந்தது. இந்த கார் வாங்கிய பிறகு இவர் பல்வேறு சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் சீரிஸ் ஒன்று மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஆகிய கார்கள் இருக்கிறது. ஒரு காலத்தில் rolls-royce நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் மூலம் அவமானப்படுத்தப்பட்ட நபர் இன்று பல்வேறு ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பல்வேறு சொகுசு காரங்களுக்கு உரிமையாளராக இருக்கிறார்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 28, 2025, 17:45 [IST]
English summary
Joy alukkas rolls royce billionaire indian jeweller insulted
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+