டெல்லில இவ்ளோ மோசமா கார் திருடுறாங்களா! ஜேபி நட்டா காரையே தூக்கிட்டங்களாம்.. துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்

இந்தியாவில் வாகன திருட்டு தலை விரித்தாடிக் கொண்டிருக்கின்றது. சமீபத்திய ஆய்வு தகவல்களும் இதையேதான் கூறுகின்றன. தலைநகர் டெல்லியே வாகன திருட்டிலும் தலைநகரமாக திகழ்கின்றது. இந்த தகவலும் அதே சமீபத்திய புள்ளி விபரங்கள் வாயிலாகவே தெரிய வந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஓர் அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவிற்கு சொந்தமான கார் ஒன்று திருடு போயிருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. ஜேபி நட்டாவின் மனைவி மல்லிகா நட்டா பயன்படுத்தி வந்த கார் மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner). இதுவே தற்போது காணமல் போயிருக்கின்றது.

Jp nadda and wife

சமீபத்தில் காரின் ஓட்டுநர் ஜோகிந்தர் சிங், டொயோட்டா ஃபார்ச்சூனரை சர்வீஸ் விடுவதற்காக கோவிந்த்புரியில் உள்ள சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார். அங்கு சர்வீசுக்கு விடப்பட்ட நிலையிலேயே அந்த கார் மாயமாகி இருக்கின்றது. இந்த சம்பவம் மார்ச் 19 ஆம் தேதி அன்றே அரங்கேறி இருக்கின்றது.

அன்றைய தினமே காவல் நிலையிலத்தில் கார் திருட்டு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. புகாரைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரைணைத் தொடங்கியது காவல் துறை. இதன் வாயிலாக அந்த கார் குருகிராம் நோக்கி பயணித்திருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. ஆனால், கார் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிகின்றது.

Toyota fortuner

ஜேபி நட்டாவின் மனைவி மல்லிகா நட்டாவிற்கு சொந்தமான அந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், வெள்ளை நிறத்திலும், ஹிமாச்சல் பிரதேசத்தின் பதிவெண்ணையும் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. HP-03-D-0021 என்கிற பதிவெண்ணையே அது கொண்டிருக்கும். இந்த சம்பவத்தின் வாயிலாக அடுத்து வரும் நாட்களிலும் தலைநகர் டெல்லியே வாகன திருட்டில் முதல் இடத்தில் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

2023 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 105க்கும் அதிகமான வாகன திருட்டு வழக்குகள் காவல்நிலையத்தில் பதியப்பட்டு இருக்கின்றன. இதன்படி பார்த்தால் 2023 ஆம் ஆண்டில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் தலைநகர் டெல்லியில் களவு போயிருப்பது தெரிகின்றது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சென்னையும், மூன்றாவது இடத்தில் கர்நாடகாவின் பெங்களூவும் உள்ளன.

மல்லிகா ஜெட்டாவின் கார் காணாமல் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. காணாமல் போயிருக்கும் அந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மாடலின் புதிய ஒன்றின் விலை ரூ. 33 லட்சத்து 43 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த கார் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெட்ரோலில் 2 விதமான தேர்வுகளும் டீசலில் 5 விதமான தேர்வுகளும் இந்த கார் மாடலில் வழங்கப்படுகின்றன. மேலே பார்த்தது பெட்ரோல் தேர்வின் ஆரம்ப விலை ஆகும். டீசல் ரூ. 35.93 லட்சம் தொடங்கி ரூ. 51.44 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இந்த கார் மாடலுக்கு இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் முன்னணி அரசியல்வாதிகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் அதை சமாளிக்கும் திறனை ஃபார்ச்சூனர் கொண்டிருக்கின்றது. இதனால்தான் பலர் இந்த காரை மிகுந்த ஆவலுடன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் கரடு-முரடான மற்றும் ஆஃப்-ரோடுகளுக்கு உகந்த ஓர் கார் மாடலே டொயோட்டா ஃபார்ச்சூனர். இந்த காருக்கும் திருடர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருக்கின்றது. இதனால்தான் அதிகளவில் இந்த கார் மாடலை திருடர்கள் களவாடிக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலே இந்தியாவில் அதிகம் திருடுபோகும் கார் மாடல்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2024, 16:43 [IST]
English summary
Jp nadda wife mallika nadda s car theft
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+