வாகன உற்பத்தியாளர்களுக்கு நிலங்களை வாரி வாரி வழங்குறாங்க.. டொயோட்டாவுக்கு 827 ஏக்கரை இப்பதான கொடுத்தாங்க!
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota)-விற்கு 827 ஏக்கர் நிலத்தை கார்களை உற்பத்தி செய்யவதற்காக சமீபத்திலேயே மஹாராஷ்டிரா அரசாங்கம் வழங்கியது. இந்த நிலையிலேயே இதே மாநில அரசு தற்போது வேறொரு நிறுவனத்திற்கும் மிகப் பெரிய இடத்தை வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முறை அது ஜேஎஸ்டபிள்யூ கிரீன் மொபிலிட்டி (JSW Green Mobility) எனும் நிறுவனத்திற்கே இடத்தை வழங்கி இருக்கின்றது. 636 ஏக்கர் நிலத்தையே அது வழங்கி இருக்கின்றது.
இங்கு அமைய இறுக்கும் புதிய ஆலை வாயிலாக அந்நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு நண்பனாக செயல்படும் வாகனங்களையே தயார் செய்ய இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆரிக் சிட்டி-க்கு அருகிலேயே நிலம் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த புதிய ஆலை இன்னும் ஒரு சில மாதங்களிலேயே செயல்பட தொடங்கிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி அடுத்த 12 அல்லது 18 மாதங்களுக்குள் ஜேஎஸ்டபிள்யூ கிரீன் மொபிலிட்டியின் ஆலை செயல்பட தொடங்கிவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது. தற்போது ஒதுக்கப்பட்டு இருக்கும் 636 ஏக்கர் நிலத்தில் 546 ஏக்கர் மட்டுமே அது மின்சார வாகனங்களின் உற்பத்தியை மேற்கொள்ள இருக்கின்றது.
மீதமுள்ள 90 ஏக்கர் நிலத்தில் அது வர்த்தக வாகனங்களையே தயார் செய்ய இருக்கின்றது. இதற்காக நிறுவனம் சுமார் 27,200 கோடியை ஒதுக்கி இருக்கின்றது. மேலும், இந்த புதிய உற்பத்தி ஆலையின் வாயிலாக 5 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக இருக்கின்றது.
இதுதவிர, 15 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ஜேஎஸ்டபிள்யூ-வும், சீனா நிறுவனத்திற்கு சொந்தமான எம்ஜி மோட்டார் (MG Motor)-ம் கூட்டணியைத் தொடங்கின. இந்த கூட்டணியைத் தொடர்ந்து இரு நிறுவனங்களும் இணைந்து ஒவ்வொரு 3 அல்லது 6 மாத இடைவெளியில் புதுமுக வாகனத்தால் இந்திய சந்தையை அலங்கரிக்க இருப்பதாக அறிவித்தன.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ஜேஎஸ்டபிள்யூ கிரீன் மொபிலிட்டி இந்த ஆலையைப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, இந்தியாவிற்கான உலக தரம் வாய்ந்த மின்சார வாகனங்களையே இந்த புதிய ஆலையில் வைத்து தயார் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், நிறுவனத்திடம் இருந்து இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
விரைவில் அதுபற்றிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்திலேயே இந்த கூட்டணியின்கீழ் விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் இன்டலிஜென்ட் சியூவி (Intelligent CUV) ரக கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்தியாவின் முதல் சியூவி ரக கார் மாடல் ஆகும்.
இந்த எலெக்ட்ரிக் காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு எம்ஜி நிறுவனம் பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டத்தை அறிவித்தது. அதாவது, பேட்டரி இல்லாமல் காரை விற்பனைக்கு வழங்கும் திட்டமே இதுவாகும். இருப்பினும், இந்த காரில் பேட்டரி வழங்கப்படும். ஆனால், அதை ஒரு கிமீ பயன்படுத்த ரூ. 3.5 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதை ஓர் பேட்டரி வாடகை திட்டம் என்றும் கூறலாம். இத்தகைய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்ற காரணத்தினாலும், அதிக பிரீமியம் அம்சங்களை இந்த கார் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலும் இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரே நாளில் இந்த எலெக்ட்ரிக் காருக்கு 15,176 யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த மாதிரியான ஓர் அமோக வரவேற்பை வேறு எந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரும் நாட்டில் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மின்சார வாகன உற்பத்தியின் மையமாக இந்தியாவை மாற்றும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் இந்த இலக்கை எட்டுவதற்கான உதவியையே நிலம் வழங்குவதன் வாயிலாக மஹாராஷ்டிரா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திலும் இதுபோன்று மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








