இங்கிலாந்து கிட்ட இருந்து சீனா வாங்கிய நிறுவனத்தின் பெரும் பங்கை இந்திய நிறுவனம் தட்டி தூக்கிருச்சு!
எம்ஜி மோட்டார் (MG Motor), இந்த கார் உற்பத்தி நிறுவனம் சீன நிறுவனமாகவே பலரால் அறியப்படுகின்றது. ஆனால், இது முன்னதாக இங்கிலாந்து நிறுவனமாக இருந்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தை சீன நிறுவனம் கையகப்படுத்தியது. செய்க் மோட்டார் எனும் சீன நிறுவனமே அதனைக் கையகப்படுத்தியது.
இந்த மாதிரியான சூழ்நிலையில், இங்கிலாந்து நிறுவனத்திடம் இருந்து சீனா நிறுவனம் வாங்கிய இந்த எம்ஜி மோட்டார் நிறுவனத்தை தற்போது இந்திய நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, எம்ஜி மோட்டாரின் பெரும் பங்கினை செயிக் மோட்டார் (SAIC Motor) இடம் இருந்து இந்திய நிறுவனம் கையகப்படுத்தி இருக்கின்றது.

35 சதவீத பங்கே இந்திய நிறுவனத்தால் வாங்கப்பட்டு இருக்கின்றது. சஜ்ஜன் ஜிண்டால்-க்கு சொந்தமான ஜேஎஸ்டபிள்யூ குழுமமே (JSW Group) அந்த இந்திய நிறுவனம் ஆகும். இந்த கூட்டணியைத் தொடர்ந்து எம்ஜி மோட்டாரின் வாகன உற்பத்தியை மேம்படுத்தும் பணியில் இரு நிறுவனங்களும் இணைந்து பணி புரிய இருக்கின்றன.
குறிப்பாக, தொழில்நுட்ப துறையில் உள்ள புதிய வளங்களைப் பயன்படுத்தி ஆட்டோமொபைல் துறையை மேலும் சிறந்ததாக மாற்றுவதற்கான முயற்சியில் இரு நிறுவனங்களும் ஈடுப்பட இருக்கின்றன. இத்துடன், மின்சார வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை நாட்டில் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள இருக்கின்றன.
மிக முக்கியமாக சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் பணியில் நிறுவனங்கள் ஈடுபட இருக்கின்றன. இதுதவிர, வாகன தயாரிப்பிற்கான ஆதாரங்களை உள்ளூரிலேயே மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள இருக்கின்றன. இவற்றுடன், கூடுதல் போனஸாக இரு நிறுவனங்களும் இணைந்து பற்பல புதுமுக வாகனங்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றன.
ஆகையால், இந்திய கார் விரும்பிகளுக்கு விருந்தளிக்கும் முயற்சியில் இரு நிறுவனங்களும் இணைந்து தீவிரமாக ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் கால் தடம் பதிக்கும் பணியில் எம்ஜி மோட்டார் 2017 ஆம் ஆண்டிலேயே களமிறங்கியது. இதன் அடிப்படையில், குஜராத் ஹலோல் பிளாண்டில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ்க்கு சொந்தமான உற்பத்தி ஆலையை அது கையகப்படுத்தியது.
இந்த ஆலையில் வைத்தே இந்தியாவிற்கான அனைத்து கார் மாடல்களையும் அது உற்பத்தி செய்யத் தொடங்கியது. மிக முக்கியமாக இந்தியாவிற்கான முதல் காரான ஹெக்டர் எஸ்யூவி-யையும் அது இங்கு வைத்தே உற்பத்தி செய்து விற்பனைக்குக் களமிறக்கியது. 2019 ஆம் ஆண்டிலேயே இந்த காரை அது விற்பனைக்குக் களமிறக்கியது.
இந்த கார் மாடலைத் தொடர்ந்து அது ஹெக்டர் பிளஸ், அஸ்டர், குளோஸ்டர், இசட்எஸ் இவி மற்றும் கோமெட் இவி உள்ளிட்ட கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடல்களைப் போன்ற இன்னும் பல சிறப்பு வாய்ந்த கார் மாடல்களையே ஜேஎஸ்டபிள்யூ மற்றும் செய்க் மோட்டார் இனி வரும் நாட்களில் இந்தியாவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றன.
அந்தவகையில், இரு நிறுவனங்களின் இணைவால் இன்னும் மலிவு விலை கார்களும் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக கோமெட் இவி போன்ற பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் கார் மாடலை இன்னும் அதிக எண்ணிக்கையில் இந்த நிறுவனங்கள் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக டாடா டியாகோ இவி இருந்து வந்தது. இதற்கு போட்டி அளிக்கும் விதமாக எம்ஜி அதன் கோமெட் இவி-யை விற்பனைக்குக் களமிறக்கியது. இதன் விலை ரூ. 8 லட்சத்திற்கும் குறைவு ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதுபோன்ற மலிவு விலை கார்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் இந்த பிராண்டில் இருந்து வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








