ஓட்டுநரின் உதவியில்லாமல் காரை இயக்கப்போகும் ஸ்டீர்-ஃபை-வயர் தொழில்நுட்பம்!
காரின் ஸ்டீரிங் வீலில் ஸ்டீர்-ஃபை-வயர் என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை புகுத்த திட்டமிட்டுள்ளது உலகின் பெரிய ஸ்டீரிங் வீல் சப்ளை நிறுவனம் ஒன்று. அது குறித்த தகவல்களை காணலாம்.
தற்போதுள்ள கார்களில் மேனுவல் ஸ்டீரிங் வீல் தான் உள்ளது, இது மனிதர்களால் இயக்கப்படும் தொழில்நுட்பமாகும். இனி இவை மனித ஆற்றல் தேவைப்படாத புதிய தானியங்கி தொழில்நுட்பம் கொண்டு மாற்றம் பெற உள்ளது. இதற்கான வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது ஜப்பானிய நிறுவனம் ஒன்று.

ஜப்பானைச் சேர்ந்த ஜேடிஈகேடி கார்ப், என்பது, உலகின் முன்னணி ஸ்டீரிங் வீல் சப்ளை நிறுவனமாகும், இது உலகாலாவிய சப்ளை நிறுவனங்களின் பட்டியலில் 15ஆம் இடம் வகிக்கின்றது. புதிய தலைமுறை ஆட்டோமேடிக் ஸ்டீரிங் வீல்களை தயாரிக்கும் முனைப்பில் தற்போது இறங்கியுள்ளது இந்த நிறுவனம்.

இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைவர் டெட்சுயூஓ அகடா கூறியதாவது, "தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர், அதிலும் குறிப்பாக அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் செமி ஆட்டோமேடிக் எனப்படும் பகுதி தானியங்கி வாகனங்களை தயாரிக்கும் பணியில் கவனம் செலுத்தியுள்ளனர். இதனால் அவற்றிற்கு தகுந்தபடி நாங்களும் புதிய தானியங்கி ஸ்டீரிங் வீல்களை அடுத்த சில ஆண்டுகளில் அறிமுகப்படுத்த உள்ளோம்" என்றார்.

ஓட்டுநர் உதவியில்லாமல் காரை இயக்கும் தொழில்நுட்பம் தான் அது. ஸ்டீர்-ஃபை-வயர் தொழில்நுட்பம் இதனை சாத்தியமாக்குகிறது. இத்தொழில்நுட்பம் மேனுவல் மெகானிசத்தை மாற்றி எலெக்ட்ரிககல் சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் உதவியுடன் ஸ்டீரிங் வீலை இயக்கும். இதற்கு ஓட்டுநரின் உதவி அவசியமில்லை.

பாதுகாப்பானதா?
ஸ்டீர்-ஃபை-வயர் தொழில்நுட்பம் உள்ள ஸ்டீரிங் வீல்களை மேனுவலாகவும் இயக்கலாம், ஓட்டுநருக்கு ஓய்வு தேவைப்படும் சமயத்தில், இது தானாகவே செயல்படத் துவங்கும். தானியங்கி கார்களிலும் கூட இது கூடுதல் மெக்கானிசமாக செயல்படும். இதனால் இருமடங்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

பழைய தலைமுறையாக உள்ள மேனுவல் ஸ்டீரிங் வீல்களை உற்பத்தியாளர்கள் விரும்பவில்லை, ஏனெனில் முன் பகுதியின் முக்கிய பகுதியை ஆக்கிரமித்துக்கொள்வதால், அது பயணிகளின் இடத்தேவையை சுறுக்குவதாக கருதுகின்றனர். மேலும் இது காரில் உள்பக்க டிசைனையும் பாதிக்கிறது.

டிரைவ்-ஃபை-வயர் எனப்படும் தானியங்கி டிரைவ் சிஸ்டத்தை தொடர்ந்து விரைவில் அறிமுகமாக உள்ள ஸ்டீர்-ஃபை-வயர் தொழில்நுட்பம் ஓட்டுநருக்கு வரப்பிரசாதமாக அமையப்போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பகானி ஹுஅய்ரா ரோட்ஸ்டர் காரின் படங்கள்:


Click it and Unblock the Notifications








