பிரேசிலில் சிக்னல்களில் ஜக்லிங் செய்து அசத்தும் இளைஞர்!
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள சிக்னல்களில் இளைஞர் ஒருவர் பந்துகளை தூக்கி போட்டு வித்தை காட்டி வாகன ஓட்டிகளை குஷிப்படுத்தி வருகிறார்.
அங்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதுபோன்று ஜக்லிங் செய்து காட்டி வாகன ஓட்டிகளிடம் பணம் பெறுவது வாடிக்கையாகி உள்ளது. அங்கு குறைவான வருவாய் கொண்டவர்களும் இதுபோன்று ஜக்லிங் செய்து கூடுதல் வருவாய் சேர்ப்பதாக தெரிவிக்கின்றனர்.
கோப்ரோ கேமரா நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவை கண்டு ரசியுங்கள். சிக்னலில் நிற்கும் வாகனங்களுக்கு முன்னால் சிறிய மரச்சடங்களால் செய்யப்பட்ட ஒரு உயரமான ஸ்டூலில் ஏறி நின்று அனாயசமாக ஜக்லிங் செய்து அசத்துகிறார்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/CA_TTR2PFMU" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications








