1990களிலேயே ஒரு கோடி ரூபா சம்பளம் வாங்கினாங்களா!.. தீபிகா படுகோன், பிரியங்காவ எல்லாம் பின்னுக்கு தள்ளிட்டாங்க!
ஜூஹி சாவ்ளா, இந்த பெயரை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரகாக அவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இதுமட்டுமில்லைங்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) ஐபிஎல் (IPL) அணியின் உரிமையாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். இதுமட்டுமில்லைங்க, 90 காலக்கட்டங்களிலேயே ஒரு படத்திற்கு 1 கோடி ரூபாக்கும் அதிகமான சம்பளம் பெற்ற நடிகையாகவும் இவர் இருக்கின்றார். மிக முக்கியமாக 1984-இல் மிஸ் இந்தியா எனும் பட்டத்தையும் இவர் வென்றார்.
இதுபோன்று பல்வேறு புகழ்ச்சிகளுக்கு உரித்தான ஓர் நபரே தற்போது இந்தியாவின் பணக்கார நடிகைகளின் பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்து இருக்கின்றார். முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், ஆலியா பட் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த அவர் பிடித்திருக்கின்றார்.

ஹூருன் இந்தியா ரிச் லிஸ்ட் (Hurun India Rich List) 2024-இன் படி ஜூஹி சாவ்ளாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 4,600 கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது. இத்தகைய பெரும் பணக்கார நடிகையான ஜூஹி கார்களை வைத்திருப்பதிலும் முன்னணியிலேயே உள்ளார். இந்த நடிகை இடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
சொத்து மதிப்பில் மட்டுமல்ல சொகுசு கார்களை வைத்திருப்பதிலும் இவர் பாலிவுட் திரையுலகின் மற்ற முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கக் கூடிய நபராக இருக்கின்றார். ஜூஹி-யிடம் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்கள் இருக்கலாம். ஆனால், வெளியுலகத்திற்கு அவர் வைத்திருப்பதாக தெரிய வந்திருக்கும் டாப்5 கார் மாடல்களை பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அந்த ஐந்துமே மிகமிக அதிக விலைக் கொண்டவையாகும். அப்படி என்ன கார் மாடல்களை அவர் வைத்திருக்கின்றார். பார்த்துவிடலாம் வாங்க.

ஆஸ்டன் மார்டின் ராபிடே (Aston Martin Rapide): இது ஓர் ஸ்போர்ட்ஸ் வகை கார் மாடல் ஆகும். இந்தியாவில் மிக மிக குறைவான நபர்களிடத்தில் மட்டுமே இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருக்கின்றது. அந்தவகையில், ஜூஹி சாவ்ளா-வும் இந்தியாவில் உள்ள ஆஸ்டன் மார்டின் ரேபிடே கார் மாடலின் உரிமையாளர் ஆவார்.
இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 3.3 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த காரை இந்தியாவில் இன்னும் சில பிரபலங்களும் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்-கும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றார்.

ஆஸ்டன் மார்டின் ரேபிடே கார் மாடலில் 6.0 லிட்டர் வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 470 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்தகைய ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மற்றும் அதிக விலைக் கொண்ட காரையே ஜூஹி பயன்படுத்தி வருகின்றார்.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series): இந்திய பணக்காரர்களின் மிகவும் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக இந்த ஆடம்பர கார் மாடல் காட்சியளிக்கின்றது. இதன் ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 1.8 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இந்த ஆடம்பர காரில் எஞ்சினைப் பொருத்த வரை 3.0 லிட்டர் 6சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 333 பிஎச்பி மற்றும் 450 என்எம் டார்க் வரை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த செடான் ரக கார் மாடல் ஆகும். இந்த காரில் ஜூஹி சாவ்ளா பயணித்ததை பலமுறை அவருடை ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலும், மிக முக்கியமான அம்சங்களாக இந்த காரில் ரிமோட் கன்ட்ரோல் பார்க்கிங், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் இருக்கை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இருக்கைகளில் மசாஜ் செய்யும் வசதி என ஏகப்பட்டவை வழங்கப்பட்டு இருக்கும்.
ஜாகுவார் எக்ஸ்ஜே (Jaguar XJ): ஜூஹி சாவ்ளாவிடம் இருக்கும் மற்றுமொரு விலை உயர்ந்த தயாரிப்பாக இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. இதன் மதிப்பும் கோடிளிலேயே உள்ளது. ரூ. 1.2 கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட கார் மாடலே ஜாகுவார் எக்ஸ்ஜே ஆகும். இது ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த செடான் ரக கார் மாடல் ஆகும்.
2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 3.0 லிட்டர் வி6 டீசல் மோட்டார் ஆகிய ஆப்ஷன்களிலேயே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் அடம்பர அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்தும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும்.
மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் (Mercedes-Benz S-Class): இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் மற்றும் உச்ச நட்சத்திர நடிகர்களின் பிரியமான கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 1.7கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த காரில் எஞ்சினை பொருத்த வரை 3.0லிட்டர் வி6 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 453பிஎச்பி மற்றும் 700என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்தகைய காரையும் ஜூஹி சாவ்ளா பயன்படுத்தி வருகின்றார்.
போர்ஷே கேயன்னே (Porsche Cayenne): ஜூஹி சாவ்ளாவிடம் இருக்கும் மற்றுமொரு விலை உயர்ந்த மற்றும் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 1.27 கோடி ஆகும். மேலும், இதன் அதிகபட்ச விலை ரூ. 1.93 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். போர்ஷே கேயன்னே ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3.0 லிட்டர் பெட்ரோல்-எலெக்ட்ரிக் ஹைபிரிட் வசதிக் கொண்ட எஞ்சின் ஆகிய ஆப்ஷன்களே அதில் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, 4.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. அனைத்திலும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ஆடம்பர கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 8 கிமீட்டருக்கும் குறைவான மைலேஜையே வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், ஹைபிரிட் வசதிக் கொண்ட ஆப்ஷன் சற்றே அதிக மைலேஜை வழங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜூஹி சாவ்ளா கடந்த பத்து ஆண்டுகளாக எந்தவொரு முக்கிய ரோலிலும் நடிக்கவில்லை. இவரின் இந்த மிகப் பெரிய வளர்ச்சிக்கு அவருடைய கணவரும் ஓர் காரணம் என கூறலாம். ஜூஹி சாவ்ளா இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஜே மேத்தாவையே மனந்துக் கொண்டார். அதேவேளையில், 90 கால கட்டங்களில் பல ஹிட் படங்களைக் கொடுத்த நடிகை இவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


Click it and Unblock the Notifications









