இந்த நடிகையின் சொத்து மதிப்பு 4,600 கோடியா!.. இந்த மதிப்புக்கு அவங்க வாங்கி இருக்க காரு வெறும் தூசி!

இந்தியாவின் பெரும் பணக்கார நடிகையாக ஜுஹி சாவ்ளா உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 4,600 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் இவரை இந்தியாவில் செல்வந்தர் நடிகை என்றும் கூறுகின்றனர். இந்த நடிகையே தற்போது புதிதாக ஓர் ஆடம்பர காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நடிகை அந்த பிராண்ட் நியூ காரில் வலம் வரும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் இ450 4மேட்டிக் ஏஎம்ஜி லைன் (Mercedes-Benz E 450 4MATIC AMG Line) கார் மாடலையே அவர் தற்போது புதிதாக வாங்கி இருக்கின்றார். வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் இந்த கார் மாடலில் அவர் வந்திறங்கக் கூடிய வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

Juhi chawla s new benz e450 4matic amg line car

இந்த காரின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும். இது அவரின் சொத்து மதிப்பிற்கு ஒரு தூசி என கூறலாம். அதேபோல், நடிகை இடத்தில் ஏற்கனவே பல ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருந்தபோதிலும் அவர் தற்போது இந்த கார் மாடலை புதிதாக வாங்கி இருக்கின்றார். காரின் கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக ஆடம்பர அம்சங்களைக் கருத்தில் கொண்டே இந்த காரை அவர் வாங்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

ஆமாங்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். அதிக கவர்ச்சியான தோற்றத்திற்கு உரித்தான கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இதுமட்டுமல்ல இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்சினும் அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் இ450 4மேட்டிக் ஏஎம்ஜி லைன் சொகுசு காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாருடன் சேர்த்து 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 381 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 4.5 செகண்டுகளே போதுமானது. இத்தகைய அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட காரையே இந்தியாவின் பெரும் பணக்கார நடிகை தற்போது வாங்கி இருக்கின்றார்.

Juhi chawla buys mercedes benz e450 4matic amg line

இந்த காரில் பிரீமியம் அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும். அந்தவகையில், கழுத்துக்கான தலையனைகள், சூரிய ஒளியை மறைக்கும் வசதி, 14.4 அங்குல சூப்பர் ஸ்கிரீன், 12.3 அங்குல பயணிகளுக்கான திரை, 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். இதுமட்டுமல்ல 17 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 எக்சைடர்களைக் கொண்ட பர்மெஸ்டர் சரவுண்டு சவுண்டு சிஸ்டம், லெவல் 2 அடாஸ் அம்சம் உள்ளிட்டவற்றையும் இந்த காரில் பென்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜுஹி சாவ்ளாவிடம் இதுபோன்று காஸ்ட்லியான கார் மாடல்கள் இன்னும் பல பயன்பாட்டில் இருக்கின்றன. மிக முக்கியமாக அஸ்டன் மார்டின் ரேபிடே, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜே உள்ளிட்ட கார் மாடல்களையே அவர் பயன்படுத்தி வருகின்றார். இவற்றுடனேயே தற்போது புதிதாக பென்ஸ் இ450 செடான் ரக காரும் இணைக்கப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 11, 2025, 5:00 [IST]
English summary
Juhi chawla one of india s wealthiest actress buys mercedes benz e450 4matic amg line
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+