1980, 90களில் தமிழ்நாட்ல கனவு கன்னியா இருந்தவங்களா இது! ரொம்ப நாளுக்கு அப்றம் மூனரை கோடி ரூபா கார்ல பாக்கறோம்!

இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் (Range Rover). ரேஞ்ச் ரோவர் கார்கள், சொகுசு வசதிகளை கொண்டிருப்பதாலும், நல்ல டிரைவிங் அனுபவத்தை வழங்குவதாலும்தான் பிரபல மனிதர்கள் ரேஞ்ச் ரோவர் கார்களை விரும்பி வாங்குகின்றனர். அத்துடன் ரேஞ்ச் ரோவர் கார்களை வைத்திருப்பது என்பது, அவர்களின் அந்தஸ்தை வெளிக்காட்டும் ஒரு விஷயமாகவும் கருதப்படுகிறது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, ரேஞ்ச் ரோவர் கார்களை இந்திய பிரபலங்களின் முதன்மையான தேர்வாக மாற்றி இருக்கின்றன.

திரையுலகை பொறுத்தவரையில், அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), சல்மான் கான் (Salman Khan), ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), அலியா பட் (Alia Bhatt), காத்ரீனா கைஃப் (Katrina Kaif), மகேஷ் பாபு (Mahesh Babu), மோகன்லால் (Mohanlal) மற்றும் அனன்யா பாண்டே (Ananya Pandey) போன்ற நட்சத்திரங்களிடம் ரேஞ்ச் ரோவர் கார்கள் உள்ளன.\

Juhi Chawla Spotted In Range Rover Autobiography

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் காரின் ஆரம்ப விலையே 2.40 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 4.98 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) இன்னும் கூடுதலாக வரும்.

மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களால், பிரபலங்கள் ரேஞ்ச் ரோவர் கார்களை அதிகளவில் வாங்கி வருகின்றனர். இந்த வரிசையில் பிரபல நடிகை ஒருவர் ரேஞ்ச் ரோவர் காரில் விமான நிலையத்திற்கு வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Juhi Chawla

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, பிரபல நடிகையான ஜூஹி சாவ்வா (Juhi Chawla) ஆவார். 57 வயதாகும் இவர் இந்தியா முழுக்க மிகவும் பிரபலமாக உள்ள நடிகை ஆவார். ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம், பெங்காலி, பஞ்சாபி மற்றும் குஜராத்தி மொழி திரைப்படங்களில் ஜூஹி சாவ்லா நடித்துள்ளார்.

தமிழை பொறுத்தவரையில், கடந்த 1987ம் ஆண்டு வெளியான பருவ ராகம் (Paruva Ragam) திரைப்படத்தில் ஜூஹி சாவ்லா நடித்துள்ளார். இந்த திரைப்படம் கன்னடத்தில் பிரேமலோகா (Premaloka) என்ற பெயரில் வெளியானது. வர்த்தக ரீதியில் இதுதான் ஜூஹி சாவ்லாவின் முதல் வெற்றிப்படமாக கருதப்படுகிறது.

இதுதவிர கடந்த 1991ம் ஆண்டு வெளியான நாட்டுக்கு ஒரு நல்லவன் (Nattukku Oru Nallavan) திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) உடன் இணைந்தும், ஜூஹி சாவ்லா நடித்திருந்தார். எனவே தமிழ்நாட்டிலும் ஜூஹி சாவ்லாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சூழலில், தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் ஜூஹி சாவ்லா பயன்படுத்தியிருப்பது ரேஞ்ச் ரோவர் காரின் ஆட்டோபயோகிராபி (Autobiography) வேரியண்ட் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே 2.70 கோடி ரூபாயாக இருக்கிறது.

ஆன்-ரோடு விலை தோராயமாக 3.40 கோடி ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில், மிகவும் சக்தி வாய்ந்த 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 394 பிஹெச்பி பவரையும், 2,000 ஆர்பிஎம்மில் 550 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆல் வீல் டிரைவ் (All Wheel Drive - AWD) சிஸ்டம் கொண்ட ஒரு கார் ஆகும். ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில், 90 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு உள்பட மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் எல்லாம், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளும் இந்த காரில் இருக்கின்றன.

இந்த காரின் நீளம் 5,252 மிமீ ஆகும். மிகவும் நீளமானது என்பதால், பயணிகளுக்கு சௌகரியமான பயணத்தையும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் உறுதி செய்கிறது. இது போன்ற காரணங்களால்தான், ஜூஹி சாவ்லா உள்ளிட்ட பிரபலமான மனிதர்கள், ரேஞ்ச் ரோவர் கார்களை விரும்புகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் மற்ற நடிகர், நடிகைகளை போலவே, ஜூஹி சாவ்லாவும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்தை விரும்ப கூடியவர். அவரது விலை உயர்ந்த கார் கலெக்ஸனை (Car Collection) பார்த்தாலே இது நமக்கு தெளிவாக புரிந்து விடும்.

அஸ்டன் மார்ட்டின் ரேபிட் (Aston Martin Rapide), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class), ஜாகுவர் எக்ஸ்ஜே (Jaguar XJ) மற்றும் போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) போன்ற கார்களை எல்லாம் ஜூஹி சாவ்லா வைத்துள்ளார்.

இந்த கார்களின் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் வரும். இந்த கார்கள் எல்லாம் தற்போதைய இளம் தலைமுறை நடிகர், நடிகைகள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. ஜூஹி சாவ்லாவிற்கு சொகுசு கார்களில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் என்பதால், அவற்றை வாங்குவதை அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை.

Take a Poll

இதற்கு உதாரணமாக மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) காரை ஜூஹி சாவ்லா வெகு சமீபத்தில் வாங்கியிருந்தார். கடந்த ஜனவரி மாத மத்தியில்தான் ஜூஹி சாவ்லாவின் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் கார் பதிவு செய்யப்பட்டது. இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

இந்த சூழலில் ஜூஹி சாவ்லா சமீப காலமாக பொது இடங்களுக்கு வராமல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வழியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விமான நிலையத்திற்கு ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் அவர் வந்துள்ளார். அப்போதுதான் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் ஜூஹி சாவ்லா பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாதவர் ஆவார். மிகவும் அரிதாகதான் அவர் பொது இடங்களுக்கே வருவார். அப்படிப்பட்ட ஒரு நபர் மிகவும் விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில், விமான நிலையத்திற்கு வந்த காரணத்தால், இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2025, 14:10 [IST]
English summary
Juhi chawla spotted in range rover autobiography worth rs 3 40 crore viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+