சிக்னலில் ரெட் லைட் எரியும்போது நிற்காமல் சென்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் வீடியோ...

சிக்னலை மதிக்காமல் சென்றதால் நடைபெற்ற விபத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிக்னலில் ரெட் லைட் எரியும்போது நிற்காமல் சென்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் வீடியோ...

ஒரு சில வினாடிகளை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு சிலர் சிக்னலை மதிக்காமல், அதனை மீறி செல்கின்றனர். ஆனால் இது மிகவும் அபாயகரமானது. இதனை சைபராபாத் போக்குவரத்து காவல் துறையினர் ஒரு வீடியோ மூலமாக மக்களுக்கு தற்போது விளக்கியுள்ளனர். இது உண்மையில் நடைபெற்ற சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி ஆகும்.

சிக்னலில் ரெட் லைட் எரியும்போது நிற்காமல் சென்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் வீடியோ...

சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும்போது அதனை மதிக்காமல் முன்னேறி சென்றால் என்ன நடக்கும்? என்பதை இந்த வீடியோ விளக்குகிறது. இது ஐதராபாத் நகரில், கடந்த மே 31ம் தேதி நடைபெற்ற சம்பவம் ஆகும். மஹிந்திரா பொலிரோ பிக்-அப் மற்றும் மாருதி சுஸுகி ஈக்கோ ஆகிய 2 வாகனங்கள் சிக்னலை ஜம்ப் செய்து முன்னோக்கி செல்வதை நீங்கள் வீடியோவில் பார்க்கலாம்.

சிக்னலில் ரெட் லைட் எரியும்போது நிற்காமல் சென்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் வீடியோ...

பல்வேறு கேமரா கோணங்களில் இந்த விபத்தை நாம் பார்க்க முடிகிறது. அப்போது அந்த சந்திப்பிற்கு லாரி ஒன்று வேகமாக வருகிறது. அந்த லாரி வந்த பாதையில் பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. எனவே லாரியின் ஓட்டுனர் வேகத்தை குறைப்பதற்கு முயற்சி செய்யவில்லை. அந்த நேரத்தில் மாருதி சுஸுகி ஈக்கோவை, மஹிந்திரா பொலிரோ பிக்-அப் மறைத்து விட்டது.

சிக்னலில் ரெட் லைட் எரியும்போது நிற்காமல் சென்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் வீடியோ...

அந்த இரண்டு வாகனங்களுமே லாரியின் மீது மோதி விட்டன. இதன் காரணமாக இரண்டு வாகனங்களுமே பலத்த சேதமடைந்ததை போல் தெரிகிறது. ஆனால் அந்த வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு என்ன ஆனது? என்பது உறுதியாக தெரியவில்லை. இங்கே லாரியின் ஓட்டுனர் மீது குறை சொல்ல முடியாது. ஏனெனில் பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந்ததால், லாரி தனது பாதையில் செல்லலாம்.

சிக்னலில் ரெட் லைட் எரியும்போது நிற்காமல் சென்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் வீடியோ...

எனவே மாருதி சுஸுகி ஈக்கோ மற்றும் மஹிந்திரா பொலிரோ பிக்-அப் ஆகிய இரண்டு வாகனங்களும் சிக்னலில் சிகப்பு விளக்கை மீறி சென்றதே இந்த விபத்திற்கு காரணம். சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது அதனை மீறி செல்வது எவ்வளவு அபாயகரமானது? என்பதை இந்த வீடியோவின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

சிக்னலில் ரெட் லைட் எரியும்போது நிற்காமல் சென்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் வீடியோ...

ஒருவேளை மற்ற சாலைகளில் வாகனங்கள் வரவில்லை என நினைத்து கொண்டு சிலர் சிகப்பு விளக்கை மீறி செல்லலாம். ஆனால் திடீரென வாகனங்கள் வந்து விட்டால் விபத்தில் சிக்க நேரிடும். மேலும் இந்த விபத்து நடைபெற்ற சமயத்தில் மழை பெய்துள்ளது. இது நமது பார்க்கும் திறனை குறைத்து, விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க செய்து விடும்.

சிக்னலில் ரெட் லைட் எரியும்போது நிற்காமல் சென்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் வீடியோ...

ஒருவேளை சிகப்பு விளக்கை மீறி சென்று நீங்கள் சாலை விபத்தில் இருந்து தப்பித்து விட்டாலும், உங்களுக்கு பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இந்தியாவில் தற்போது ஏராளமான போக்குவரத்து சிக்னல்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. இதன் அடிப்படையில் காவல் துறையினர் உங்களுக்கு நேரடியாக இ-சலான் அனுப்பலாம்.

உங்கள் வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து, உங்களுக்கு இ-சலானை காவல் துறையினர் அனுப்பி விடுவார்கள். அதற்கான அபராத தொகையை செலுத்த தவறினால், உங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே எந்த வகையிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறாமல் இருப்பதுதான் நல்லது.

Article Published On: Tuesday, June 8, 2021, 20:46 [IST]
English summary
Jumping The Signal Is Extremely Dangerous - Watch Viral Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+