சாதாரணமா ஆட்டோவில் போனது அவர் பெத்த பிள்ளையா! அப்பா பேரை சொன்னால் இந்தியா முழுக்க தெரியும்! ஆனா பந்தாவே இல்ல!

இந்தியா முழுக்க மிகவும் பிரபலமாக இருந்து வரும் பாலிவுட் நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான் (Aamir Khan). மற்ற பாலிவுட் நடிகர், நடிகைகளை போலவே, ஆமிர் கானும் சொகுசு கார்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார். ஆமிர் கானின் விலை உயர்ந்த கார் கலெக்ஸன் (Car Collection) இதற்கு சாட்சியாக உள்ளது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 (Mercedes Benz S600) மற்றும் ரேஞ்ச் ரோவர் (Range Rover) போன்ற மிகவும் விலை உயர்ந்த கார்கள் எல்லாம் ஆமிர் கானிடம் உள்ளன.

இவை எல்லாம் தவிர, பென்ட்லீ (Bentley) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) போன்ற நிறுவனங்களின் கார்கள் கூட, ஆமிர் கானிடம் இருக்கின்றன. ஆமிர் கானின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Junaid Khan Spotted In Auto

இவ்வளவு அதிக சொத்துக்களை கொண்ட ஒரு பிரபலமான பாலிவுட் நடிகரின் மகன் நிச்சயமாக ஆடம்பரமான வாழ்க்கையைதான் வாழ்வார் என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கும். இந்த எண்ணம் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உடனடியாக உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். ஆம், ஜூனைத் கான் (Junaid Khan) எளிமையான வாழ்க்கையைதான் விரும்புகிறார்.

இவர் ஆமிர் கானின் மகன் ஆவார். நடிகர் என்ற முகமும் கூட ஜூனைத் கானுக்கு உள்ளது. ஆடம்பரமான சொகுசு கார்கள் நிறைய இருந்தாலும் கூட, ஜூனைத் கான் ஆட்டோவில் பயணம் செய்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Aamir Khan

இந்த வீடியோ அனேகமாக மும்பை நகரில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜூனைத் கான் எதற்காக ஆட்டோவில் பயணம் செய்தார்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இது ஜூனைத் கானின் எளிமையை வெளிக்காட்டுவதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் பிரபலமான மனிதர்கள் ஆட்டோவில் பயணம் செய்வது இது முதல் முறையல்ல. குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலர், கடந்த காலங்களில் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். இதில், பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான் (Varun Dhawan) குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

இவரும், நடிகை கீர்த்தி சுரேசும் (Keerthy Suresh) சமீபத்தில் ஆட்டோவில் பயணம் செய்தனர். அந்த வீடியோ, சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவியது. இவர்கள் தவிர சல்மான் கான் (Salman Khan), ஆலியா பட் (Alia Bhatt) மற்றும் ஜான் ஆபிரஹாம் (John Abraham) போன்ற பிரபலங்களும் கூட, ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர்.

உண்மையிலேயே ஆட்டோவில் பயணம் செய்வது நல்ல அனுபவத்தை தரும் (மீட்டர் இல்லாமல் வசூல் செய்யப்படும் அதிக கட்டணத்தை தவிர!). எனவேதான் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு மாற்றாக ஒரு சில நாட்கள் மட்டும் திரை பிரபலங்கள் ஆட்டோவில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2024, 13:55 [IST]
English summary
Junaid khan spotted in auto viral video all details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+