42 வயதை கடந்த நடிகரிடம் இத்தனை சொகுசு கார்களா? வீட்டில் இதுக்குனே பெரிய கேரேஜ் வைத்து இருப்பார் போலயே!!
ஜூனியர் என்டிஆர் (Junior NTR), பிரபலமான தெலுங்கு நடிகர். இயக்குனர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இந்திய அளவில் கவனத்தை பெற்ற இந்த நடிகர் மே 20ஆம் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். மகனுடன் விமான நிலையத்தில் இருந்து ஜூனியர் என்டிஆர் வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆக, தனது பிறந்த நாளை வெளியூரில் அல்லது வெளிநாட்டில் மகனுடன் இந்த தெலுங்கு நடிகர் கொண்டாடி இருக்கலாம்.
தற்சமயம் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் ஜூனியர் என்டிஆரிடம் உள்ள சொத்துக்களை எல்லாம் பார்த்தால் தலை சுற்றுகிறது. அந்த அளவிற்கு அதிகப்படியான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வைத்திருக்கும் ஜூனியர் என்டிஆர், இவற்றுள் பலவற்றை தனது சொந்த முயற்சியில் வாங்கினாலும், சில பரம்பரை சொத்துக்களும் அடங்குகின்றன.

தெலுங்கு மக்களின் சூப்பர் ஸ்டாரான மறைந்த என்.டி ராமராவ் அவர்களின் பேரன் தான் ஜூனியர் என்டிஆர் ஆவார். தாத்தாவின் பெயரை வைத்து அழைக்கப்படும் இந்த நடிகரின் சொத்துக்கள் பெரிய லிஸ்ட்டாக உள்ளன. அவற்றுள் அசையும் சொத்துக்களாக ஜூனியர் என்டிஆரிடம் உள்ள சொகுசு கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 (Mercedes-Maybach S580): இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கார்களுள் இந்த மேபக் காரும் ஒன்றாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.70 கோடியாக உள்ளது. இதில், 4 லிட்டர் வி8 ட்வின்-டர்போசார்ஜ்டு என்ஜின் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது.

லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus): மேலே கண்ட மேபக் காரை காட்டிலும் விலைமிக்கது இந்த லம்போர்கினி கார் ஆகும். ஜூனியர் என்டிஆரிடம் உள்ள மிகவும் விலையுயர்ந்த கார் இது ஆகும். ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனை செய்வதில் பிரபலமான லம்போர்கினி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி கார் உருஸ் ஆகும். இதில், 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series): இந்த பிஎம்டபிள்யூ காரின் 740டி எம் ஸ்போர்ட் என்கிற டீசல் வேரியண்ட்டை நடிகர் ஜூனியர் என்டிஆர் வைத்துள்ளார். இந்த பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.84 கோடி என்கிற அளவில் உள்ளது. பிஎம்டபிள்யூ செடான் ரக காரான 7-சீரிஸில் நவீன தொழிற்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா வெல்ஃபைஃபர் (Toyota Vellfire): இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்யும் பிரம்மாண்டமான மற்றும் விலையுயர்ந்த கார், வெல்ஃபையர் ஆகும். ரூ.1.39 கோடியில் இருந்து ரூ.1.51 கோடி வரையில் தற்சமயம் விலையை கொண்டுள்ள இந்த விலையுயர்ந்த டொயோட்டா காரும் நடிகர் ஜூனியர் என்டிஆரிடம் உள்ளது. சுமார் 5 மீட்டர் நீளம் கொண்ட இந்த காரின் அகலம் 1.85மீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) என்கிற விலையுயர்ந்த காரையும் நடிகர் ஜூனியர் என்டிஆர் வைத்துள்ளார். தொடர்ச்சியாக புதிய படங்களில் புக் ஆகுவதினால் இந்த லிஸ்ட் வரும் காலங்களில் பெரியது ஆகுவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வளவு ஏன், தற்போது சென்றுள்ள 42வது பிறந்தநாளை முன்னிட்டும் ஜூனியர் என்டிஆர் ஏதேனும் புதிய சொகுசு காரை வாங்கக்கூடும்.


Click it and Unblock the Notifications









