ஜெட் விமானம், ரோல்ஸ்ராய்ஸ், 10 சொகுசு எஸ்யூவிக்கள், 2 வால்வோ பேருந்துகள்: தெறிக்கவிட்ட ஜஸ்டின் பீபர்

Written By:

பிரபல பாப் இசைப்பாடகரான ஜஸ்டின் பீபர், இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

கனடாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சிக்காக நேற்று இந்தியா வந்தடைந்தார். 23 வயதாகும் இவர் உலகின் மிகப் பிரபலமான பாப் பாடகர் ஆவார்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

இசை நிகழ்ச்சிக்காக முதல் முறையாக இந்தியா வர ஜஸ்டின் முன்வைத்த நிபந்தனைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்திற்கு செல்ல தனி விமானம், மற்ற இடங்களுக்கு பயணிக்க ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் கார், அவரது குழுவிற்கு 2 சொகுசு வோல்வோ பேருந்துகள் வேண்டும் என பீபர் நிபந்தனை விதித்துள்ளார்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

இது மட்டுமல்ல, அவர் பாடும் மேடைக்குப் பின்புறம், சிறப்பாக தயாரிக்கப்பட்ட டேபிள் டென்னிஸ் மேஜை, பிளே ஸ்டேஷன், ஐ.ஓ.ஹாக் எனப்படும் ஸ்கேட்போர்டு.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

மேலும், சோஃபா செட், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஆடை வைக்கும் அலமாரி, மசாஜ் மேஜை, ஜக்குஸி எனப்படும் சொகுசு குளியல்தொட்டி அத்தனையும் இருக்க வேண்டுமாம்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

இவரின் நிபந்தனைகள் பலவும் மலைப்பை ஏற்படுத்தினாலும் இவர் உலக பாப் இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் செல்லப்பிள்ளை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

நேற்று அதிகாலை 2 மணியளவில் மும்பை வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

மைக்கேல் ஜாக்சனுக்கு பிறகு உலகப் புகழ் பெற்ற பிரபல இசைக்கலைஞர் ஒருவரின் இசைநிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதே மும்பையில் பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் 1996ல் இசைநிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

இசைநிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்னர் மும்பையில் உள்ள வணிகவளாக மால் ஒன்றில் காபி அருந்தியாவேறே கூடி இருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுதினார் அவர்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

கிராமி விருது வென்ற இசைக்கலைஞரான ஜஸ்டினின் இந்திய வருகையில் பல ஆச்சரியம் நிறைந்த பிரம்மாண்ட விஷயங்கள் நிறைந்துள்ளன, அவற்றை தொடர்ந்து காணலாம்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

ஜஸ்டின் பீபர் பயணத்திற்கென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தனியாக ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் கேட்கப்பட்டது. ஆயினும் அவர் பயன்படுத்தியது வலிமைவாய்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவியைத்தான்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது குழுவிற்காக மட்டும் 2 பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் முழுவதுமாக புக் செய்யப்பட்டுள்ளன. ஜஸ்டின் பீபருக்காக சமைக்க சமையல் வல்லுனர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியின் ஆரம்பநிலை டிக்கெட் 4,000 ரூபாய். அதிகபட்ச விலை ரூ 80000 வரை இருந்தது.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலர் ஷெரா தான் தற்போது ஜஸ்டின் பீபரின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புப் பொறுப்பாளராக உள்ளார். பீபருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

நிகழ்ச்சி நடைபெற்ற மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு தான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தார் பீபர்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

ஜஸ்டின் பீபருக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற ஷார்ட்ஸ் உடன் ஜஸ்டின் பீபர் மேடைக்கு வந்து "ஹலோ இந்தியா" என்று தனது பெர்பார்மன்ஸை தொடங்கினார்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

"வேர் ஆர் யு நவ்" எனும் பாடல் மூலம் இசை நிகழ்ச்சியை தொடங்கிய பீபர் மொத்தம் 120 நிமிடங்கள் 20 பாடல்கள் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மேடையில் நடனம் ஆடி, ரசிகர்களுடன் பேசி என மிகவும் கோலாகலமாக நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

மைக்கேல் ஜாக்சனுக்கு செய்யப்பட்டதை விடவும் அதிகமான ஆடம்பர ஏற்பாடுகள் 23 வயதே நிரம்பிய ஜஸ்டின் பீபருக்காக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

இந்த இசை நிகழ்ச்சிக்காக, 4 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன் ஜெயின் தெரிவித்துள்ளார்.இந்திய மதிப்பில் இது சுமார் 25 கோடி ரூபாய் ஆகும்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

இசைநிகழ்ச்சி நடந்த இந்தியா வருகை புரிந்துள்ள பீபருடன் அவருடைய 120 உதவியாளர்களுக்காக 2 வால்வோ சொகுசுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

ஜஸ்டின் பீபர் இந்தியாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெல்லி, ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் உள்ளிட்டவற்றை பார்க்க உள்ளார்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

இந்தியாவில் அவர் எங்கு சென்றாலும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவி அல்லது ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணிப்பார் என்று தெரியவருகிறது.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

அவரின் பயணத்தின் போது அவருக்கு பாதுகாப்பு தரும் அதிகாரிகள் பயண்படுத்த அவரின் காருக்கு முன்னும், பின்னுமாக 10 எஸ்யூவிக்கள் கொண்ட கான்வாயும் செல்லும்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

கிராமி விருது மட்டுமல்லாமல் இசை ஆல்பங்களுக்கான 8 கின்னஸ் உலக சாதனையையும் பீபர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேரால் ஃபாலோ செய்யப்படும் ஆண் நபராக பீபர் இருப்பது சிறப்பான ஒன்றாகும். அவரை 92 மில்லியன் பேர் டிவிட்டரில் ஃபாலோ செய்கின்றனர்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

இதே போல யூடியூபில் அதிகம் பேரால் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட பாடகர் என்ற சிறப்பையும் பீபர் பெற்றுள்ளார்.

இந்தியர்களை தெறிக்கவிட்ட ஆடம்பர மன்னன் ஜஸ்டின் பீபர்..!

கடந்த 2016ஆம் ஆண்டில் யூடியூபில் 10 பில்லியன் பார்வைகளை பெற்ற முதல் இசைக்கலைஞர் என்ற அரிய சாதனையையும் பீபர் படைத்துள்ளார்.

English summary
Read in Tamil about Justin bieber's indian visit and astonishing facts behind his convoy.
Story first published: Thursday, May 11, 2017, 13:43 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more