கார் வாங்க ஷோரூமுக்கு வந்தது உண்மையில் இவர்தானா என்று யாராலும் நம்ப முடியவில்லை!! மொத்த குடும்பத்துடன்...
ஜஸ்டீன் வர்கீஸ் (Justin Varghese), இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல் உள்ளதா?... இவர் வேறு யாருமில்லை, பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர். பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து அவற்றின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்துள்ள ஜஸ்டீன் வர்கீஸின் வீட்டில் புதியதாக ஒரு கார் இணைந்துள்ளது. ஆம்... ஜஸ்டீன் வர்கீஸ் பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்றை குடும்பத்துடன் ஷோரூம் சென்று டெலிவிரி பெற்றுள்ளார். அது எந்த மாதிரியான பிஎம்டபிள்யூ கார் என்பதை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது. அதாவது, அந்த அளவிற்கு பிஎம்டபிள்யூ கார்கள் மீது இந்திய மக்களின் ஆர்வம் உள்ளது. பல செல்வந்தர்களும், திரைப்பட துறையை சேர்ந்தவர்களும் பிஎம்டபிள்யூ கார்களை வாங்குகின்றனர்.

அந்த வகையில், பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் ஜஸ்டீன் வர்கீஸ் புதியதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஜஸ்டீன் வர்கீஸ் வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் கார் ஆகும். முதலில் ஜஸ்டீன் வர்கீஸை பற்றி பார்த்துவிடுவோம். 2017ஆம் ஆண்டில் 'நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல' என்கிற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டீன் வர்கீஸ் ஆவார்.
ஆனால், அதன்பின் 2018இல் இவரது இசையில் எந்த படமும் வெளிவரவில்லை. அதனை சேர்த்து, 2019ஆம் ஆண்டில் 2 படங்கள் வெளிவந்தன. இருப்பினும், 2022ஆம் ஆண்டுதான் ஜஸ்டீன் வர்கீஸுக்கு முக்கியமான ஆண்டு என சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த ஆண்டில் மட்டும் சுமார் 7 படங்கள் இவரது இசையில் திரைக்கு வந்தன. 8வது படம் இன்னும் திரைக்குவரவில்லை.
கடந்த 2023இல் பிரபல நடிகர் மம்முட்டியின் கிறிஸ்டோபர் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஜஸ்டீன் வர்கீஸ் ஆவார். இந்த 2024ஆம் ஆண்டில் தனது சினிமா பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக பாலிவுட் இந்தி திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைத்து கொடுக்க ஆரம்பித்திருக்கும் ஜஸ்டீன் வர்கீஸின் வாழ்க்கை இதன் மூலமாக நல்லப்படியாக சென்று கொண்டிருப்பது, அவர் புதியதாக விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியிருப்பதில் இருந்தே தெரிகிறது.
இந்தியாவில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் கார் மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. எம் ஸ்போர்ட் மற்றும் எம் ஸ்போர்ட் புரோ என்பன அவை ஆகும். இந்த இரு வேரியண்ட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. 3 சீரிஸ் கிரான் கூபே காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.60.60 லட்சத்தில் இருந்து ரூ.65 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.
கார்பன் பிளாக் மெட்டாலிக், போர்டிமோ ப்ளூ மெட்டாலிக், ஸ்கைஸ்க்ராபர் கிரே மெட்டாலிக் மற்றும் மினரல் வெள்ளை மெட்டாலிக் என 4 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த பிஎம்டபிள்யூ கார் கிடைக்கிறது. இசையமைப்பாளர் ஜஸ்டீன் வர்கீஸ் வாங்கியிருப்பது, இதில் கார்பன் ப்ளாக் மெட்டாலிக் நிறத்தில் ஆகும். இதனால்தான், இவரது புதிய கார் முழுவதும் பளபளக்கும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அல்லது 2 லிட்டர் டீசல் என்ஜின் உடன் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் கூபே காரை வாங்கலாம். இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 258 பிஎஸ் மற்றும் 400 என்.எம் டார்க் திறன் வரையிலும், 2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 193 பிஎஸ் மற்றும் 400 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் பிஎம்டபிள்யூ கார்களுள் 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் காரும் ஒன்றாகும். ஆதலால், மலையாள திரைப்பட இசையமைப்பாளர் ஜஸ்டீன் வர்கீஸ் அட்வான்ஸான தொழிற்நுட்ப வசதிகளை கொண்ட மாடர்னான காரை தான் வாங்கியுள்ளார்.
Source: Manoramaonline


Click it and Unblock the Notifications








