யூஸ்டு ஆல்டோ காரை ரோல்ஸ் ராய்ஸ் ரேஞ்சுக்கு டெலிவரி எடுத்தது அவரா! இந்த முகத்தை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே!
சமூக வலை தளங்களின் (Social Media Websites) ஆதிக்கம் பெருகி விட்ட கால கட்டம் இது. எனவே இன்றைய சூழலில் சினிமா நடிகர்களை விட, சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள்தான் (Social Media Influencers) பிரபலமானவர்களாக திகழ்கின்றனர். அப்படி நெட்சடின்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்தான் ஸ்ரீ ராஜ் (Sree Raj). இவர் கடல் கொம்பன் (Kadal Komban) என்ற பக்கத்தை நிர்வகித்து வருகிறார். யூடியூப் (YouTube), இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட தளங்களில் பல லட்சக்கணக்கானோர் ஸ்ரீ ராஜை பின்தொடர்ந்து வருகின்றனர்.
இவரது வீடியோக்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். கடல் கொம்பன் என்ற பெயரை கேட்டதுமே, இவரது வீடியோக்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும்? என்பதை நீங்கள் யூகித்திருக்கலாம். ஆம், கடலில் மீன் பிடிப்பது தொடர்பான வீடியோக்களை ஸ்ரீ ராஜ் வெளியிட்டு வருகிறார்.

இவர் தற்போது கார் ஒன்றை வாங்கியுள்ளார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று பிரம்மாண்டமான முறையில் அவர் அந்த காரை டெலிவரி எடுத்துள்ளார். இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. ஸ்ரீ ராஜ் தற்போது வாங்கியிருப்பது, மாருதி சுஸுகி ஆல்டோ 800 (Maruti Suzuki Alto 800) ஆகும்.
இது யூஸ்டு கார் (Used Car) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம் கொச்சியை (Kochi) சேர்ந்த ஸ்ரீ ராஜ் மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியில் வந்த இளைஞர் ஆவார். இதுதான் அவரது முதல் கார் ஆகும். எனவே கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து பிரம்மாண்டமான முறையில் அவர் காரை டெலிவரி எடுத்துள்ளார்.

யூஸ்டு மாருதி சுஸுகி ஆல்டோ 800 காரை வாங்குவதற்கு இவ்வளவு பிரம்மாண்டம் தேவையா? என ஒரு சிலர் நினைக்கலாம். ஆனால் ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு கார் என்பது மிகப்பெரிய கனவு. எனவே அந்த கனவை எட்டும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
எனவே ஸ்ரீ ராஜின் கொண்டாட்டங்களில் தவறு இல்லை. இதுவே அவரது முதல் அடி. வரும் காலங்களில் அவர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை (Luxury Cars) வாங்கலாம். இதற்காக சமூக வலை தளங்களில் பலரும் ஸ்ரீ ராஜிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் நாமும் அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போது மாருதி சுஸுகி ஆல்டோ 800 கார் விற்பனையில் இல்லை. அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. மிகவும் கடுமையான மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக, ஆல்டோ 800 காரின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தி விட்டது.
அதாவது மிகவும் கடுமையான மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் ஆல்டோ 800 காரை மேம்படுத்தினால், அது லாபகரமான முடிவாக இருக்காது என மாருதி சுஸுகி நிறுவனம் கருதியதே அதன் விற்பனை நிறுத்தப்பட்டதற்கு காரணம். தற்போது விற்பனையில் இருப்பது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) ஆகும்.
இதில் 998 சிசி (1.0 லிட்டர்) பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. உண்மையில் முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கு மாருதி சுஸுகி ஆல்டோ மிக சரியான ஒரு ஆப்ஷன்தான். விலை மிகவும் குறைவு என்பதே இதற்கு முக்கியமான காரணம். ஸ்ரீ ராஜ் வாங்கியுள்ள காரின் விலை எவ்வளவு? என்பது சரியாக தெரியவில்லை.
இருப்பினும் சுமார் 2 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். பழைய மாருதி சுஸுகி ஆல்டோ 800 காருக்கு 2 லட்சமாக என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், பழைய மாருதி சுஸுகி ஆல்டோ 800 காருக்கு தற்போது 'டிமாண்ட்' அதிகமாக உள்ளது. நல்ல கண்டிஷனில் உள்ள கார்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








