ரூ. 200 கோடி சம்பாதித்த குஷி.. வேலையாட்களுக்கு டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா காரை பரிசளித்த ஓனர்.. எங்கு?..
நகைக் கடை உரிமையாளர் ஒருவர் 200 கோடி ரூபாய் சம்பாதித்த குஷியில் தன்னுடைய ஊழியர்கள் பலருக்கு காஸ்ட்லியான காரை பரிசாக தந்து குஷியில் ஆழ்த்தியிருக்கின்றார். மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700), டொயோட்டா இன்னோவா (Toyota Innova), ஹூண்டாய் ஐ10 (Hyundai i10), ஹூண்டாய் எக்ஸ்சென்ட் (Hyundai Xcent) மற்றஉம் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Ertiga) ஆகிய கார் மாடல்களையே ஜுவல்லரி கடை உரிமையாளர் தன்னுடைய பணியாளர்களுக்கு பரிசாக தந்திருக்கின்றார்.
மொத்தமாக 12 மூத்த ஊழியர்களுக்கே அவர் காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த 12 பேரும் ஜுவல்லரி கடையின் ஆரம்பக்கட்டத்தில் இருந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது. குஜராத்தில் உள்ள கப்ரா ஜுவல்லரி கடை உரிமையாளர் கைலாஷ் கப்ரா. இவரே நகைக் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காரை பரிசாக தந்தவர் ஆவார்.

ரூ. 200 கோடி விற்பனை இலக்கை எட்டியதைக் கொண்டாடும் விதமாகவே கார் பரிசளிப்பு செய்யப்பட்டு உள்ளது. கைலாஷ் கப்ராவால், அவருடைய 21 வயதில் தொடங்கப்பட்டதே இந்த நகைக் கடை ஆகும். ஆரம்பத்தில் 12 நபர்கள் மட்டுமே இந்த நகைக் கடையில் பணியாற்றி வந்திருக்கின்றனர்.
மேலும், அப்போதைய ஆண்டு வருமானமாக ரூ. 2 கோடி மட்டுமே இருந்திருக்கின்றது. ஆனால், இப்போது 140 பேர் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய வளர்ச்சியே 12 ஊழியர்களுக்கு காஸ்ட்லியான காரை கப்ராவால் பரிசாக வழங்கச் செய்திருக்கின்றது. இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் ரூ. 13.99 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது.

இதன் அதிகபட்ச விலை ரூ. 25.14 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். 2.0 லிட்டர் எம் ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்-ஹாவ்க் டர்போ டீசல் ஆகிய எஞ்சின் ஆப்ஷன்களிலேயே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது கவனிக்கத்தகுந்தது. இதில் டீசல் மோட்டாரை மட்டுமே இரண்டு விதமான ட்யூன்-அப்களில் அது விற்பனைக்கு வழங்குகின்றது. எம்எக்ஸ் வேரியண்டில் கிடைக்கும் டீசல் அதிகபட்சமாக 114 kW பவரையும், ஏஎக்ஸ் வேரியண்டில் உள்ள டீசல் மோட்டார் 136 kW பவரையும் வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.

அதேவேளையில், பெட்ரோல் மோட்டார் 147 kW பவரை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், இந்த கார் பரிசளிப்பில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு காஸ்ட்லி காராக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காட்சியளிக்கின்றது. பெட்ரோல் மற்றும் பெட்ரோல் + ஹைபிரிட் தொழில்நுட்பம் என இரண்டு விதமான ஆப்ஷன்களில் இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதில் பெட்ரோல் வசதி மட்டுமே கொண்ட இன்னோவா ஹைகிராஸ் ரூ. 19.09 லட்சம் என்கிற தொடக்க விலையிலும், ஹைபிரிட் வசதிக் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் ரூ. 26.31 லட்சம் என்கிற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தது போன்ற காஸ்ட்லியான கார்களையே பரிசாக தந்து ஊழியர்களை மிரளச் செய்திருக்கின்றார் குஜராத் நகைக் கடை உரிமையாளர். இதுபோன்று ஊழியர்களுக்கு காரை பரிசாக நகைக்கடை உரிமையாளர்கள் வழங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









