பாட்டு பாடியே 3 கோடி ரூபாய் கார வாங்கீட்டாரு! டெலிவரி குடுக்க அந்த கம்பெனிகாரங்களே வீட்டுக்கு வந்துட்டாங்களா!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள பாடகர்களில் ஒருவர் கைலாஷ் கெர் (Kailash Kher). இவர் சமீபத்தில் புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport) கார் ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது.

இந்த புத்தம் புதிய காரை கைலாஷ் கெர் டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. டீலர்ஷிப் ஊழியர்கள் கைலாஷ் கெர்ரின் வீட்டிற்கே வந்து, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை டெலிவரி செய்யும் காட்சிகளை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

Kailash Kher Buys Land Rover Range Rover Sport

இந்திய சந்தையில் தற்போது முன்னணி நிறுவனங்கள் பலவும் இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்த 'ஹோம் டெலிவரி' வசதி, பிரபலங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் பிரபலங்கள் ஷோரூம்களுக்கு வந்தால், தேவையில்லாத பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி காரானது, 1.69 கோடி ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.80 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

Range Rover Sport SV

இந்த காரின் எந்த வேரியண்ட்டை கைலாஷ் கெர் வாங்கியுள்ளார்? என்பது தெரியவில்லை. எனினும் இந்த காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 4.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும்.

மல்டி ஃபங்ஷன் 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மசாஜ் ஃபங்ஷன் உடன் கூடிய வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் 19 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் என லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி காரானது, இந்திய பிரபலங்கள் அதிகம் விரும்பி வாங்கும் கார்களில் ஒன்றாகும். சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தில் கலக்கிய பாபி தியோல் (Bobby Deol) கூட லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி காரை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கார், முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி காரின் விலை மிகவும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 11, 2024, 23:28 [IST]
English summary
Kailash kher buys land rover range rover sport viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+