குடிபோதையில் கார்ல போனது அந்த நடிகர்-நடிகையின் பொண்ணா! ஊருக்கு உபதேசம் பண்ணீட்டு மகளை இப்படி வளத்தீட்டாங்களே!
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவின் தொடக்கத்தில், இளம்பெண் ஒருவர் ஒரு கட்டிடத்தின் உள்ளே இருந்து வந்து, காரில் ஏறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் அவர் இயல்பாக நடந்து வரவில்லை. தள்ளாடியபடியே நடந்து வந்தார். ஒரு இடத்தில் அவரது கால் இடறுவதையும் நம்மால் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அத்துடன் ஒரு கட்டத்தில் அங்கிருந்த ஒரு கம்பத்தை பிடித்து கொண்டும் அவர் நடந்து வந்தார்.
இதை எல்லாம் பார்த்த நெட்டிசன்கள் பலரும், அந்த இளம்பெண் மது போதையில் இருப்பதாக, சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கே அதிர்ச்சியடைந்து விட வேண்டாம். ஏனெனில் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் யார்? என தெரிந்தால், நீங்கள் இன்னும் அதிர்ச்சியடைய கூடும்.

தற்போது வைரலாக பரவி வரும் வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது நைசா தேவ்கன் (Nysa Devgn) ஆவார். இவர் கஜோல் (Kajol)-அஜய் தேவ்கன் (Ajay Devgn) தம்பதியின் மகள் ஆவார். இவர்கள் இருவருக்கும் அறிமுகமே தேவையில்லை. அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றனர்.
குறிப்பாக கஜோல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். மின்சார கனவு மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கஜோல் நடித்துள்ளார். மறுபக்கம் அஜய் தேவ்கன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர்களின் மகள் நைசா தேவ்கன்தான் தற்போது குடிபோதை தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆனால் நைசா தேவ்கன் குடிபோதை தொடர்பான சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர். ஆம், உண்மைதான். கடந்த காலங்களிலும் அவர் இதே போன்ற சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
தொடர்ச்சியாக இதே போன்ற சர்ச்சைகளில் சிக்கி வருவதால், நைசா தேவ்கனை நெட்டிசன்கள் தற்போது கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அத்துடன் நைசா தேவ்கனின் பெற்றோரான கஜோல் மற்றும் அஜய் தேவ்கனும், நெட்டிசன்களின் கடுமையான விமர்சனங்களை தற்போது எதிர் கொண்டாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் கடந்த காலங்களில் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர், பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பொது வெளியில் அறிவுரைகளை வழங்கியுள்ளனர். எனவே ஊருக்கு உபதேசம் செய்து விட்டு மகளை தவறான வழியில் வளர்த்துள்ளதாகவும் நெட்டிசன்கள் பலர், கமெண்ட் பாக்ஸில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
சரி, இந்த நேரத்தில் நைசா தேவ்கன் பயணித்தது என்ன கார்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஆரம்ப விலையே 1.29 கோடி ரூபாயாக இருக்கிறது. அதேசமயம் டாப் வேரியண்ட்டின் விலை 1.33 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், கோடீஸ்வரர்களிடம் மட்டுமே இந்த காரை பார்க்க முடியும். குறிப்பாக பிரபல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை வைத்துள்ளனர். இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் விருத்திமான் சாஹா (Wriddhiman Saha) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு காரில், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் 14 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் என ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதுதவிர 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளும், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இது கருதப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரையில், 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை, பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு எஸ்யூவி கார் கொண்டுள்ளது. இந்த 2 இன்ஜின்கள் உடனும், 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நைசா தேவ்கன் பயணம் செய்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரானது, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.
இதற்கிடையே தற்போது வைரலாக பரவி வரும் நைசா தேவ்கனின் வைரல் வீடியோவின் அடுத்தடுத்த பகுதிகளில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh) போன்ற பிரபலங்களையும் நம்மால் காண முடிகிறது. பிரபலங்கள் வெளி இடங்களுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட காட்சிகளை தொகுத்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








