1997ல ஒரே படம் மூலம் தமிழ்நாட்டின் கனவு கன்னியா மாறிய நடிகையின் பொண்ணா இது! ஒன்னரை கோடி ரூபா கார்ல வர்றாங்க!

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7). ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கி வரும் சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார்தான் எக்ஸ்7. 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் மிகவும் விலை உயர்ந்தது ஆகும். தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 1.29 கோடி ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 1.33 கோடி ரூபாயாக இருக்கிறது. இத்தனைக்கும் இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-road price) முறையே 1.55 கோடி ரூபாய் மற்றும் 1.65 கோடி ரூபாய் என்ற அளவில் வரும்.

Nysa Devgn Spotted In BMW X7

சொகுசு வசதிகள் (Luxury Features), சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) மற்றும் சிறப்பான கையாளுமை ஆகிய காரணங்களால், கோடீஸ்வரர்களின் விருப்பமான கார்களில் ஒன்றாக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை வைத்துள்ள பிரபலங்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

ஆனால் இது அவருக்கு பரிசாக கிடைத்தது ஆகும். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலாநிதி மாறனால் (Kalanithi Maran), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு, பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் பரிசாக வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் தவிர பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் (Ajay Devgn), தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபாதி (Divyanka Tripathi) ஆகியோரிடமும் கூட பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் உள்ளது.

Nysa Devgn

இதில், அஜய் தேவ்கனின் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை அவரது மகள் நைசா தேவ்கன் (Nysa Devgn) பயன்படுத்தி வருகிறார். கடந்த காலங்களில் நைசா தேவ்கன் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் பொது இடங்களுக்கு வந்ததை நாம் பலமுறை பார்த்துள்ளோம். இந்த வரிசையில் மீண்டும் ஒரு முறை நைசா தேவ்கன் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் வந்து இறங்கியதை காட்டும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ, மும்பை (Mumbai) நகரில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைசா தேவ்கன் பயன்படுத்தியது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் xDrive40i M Sport வேரியண்ட் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட்டின் விலை 1.31 கோடி ரூபாயாக உள்ளது.

இதன் ஆன்-ரோடு விலை சுமாராக 1.63 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். ஆனால் அஜய் தேவ்கன் இந்த காரை கடந்த 2020ம் ஆண்டிலேயே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. சுமார் 5 ஆண்டுகள் கடந்து விட்டதால், தற்போது இந்த காரின் மதிப்பு குறைந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நைசா தேவ்கன் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில், 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 375 பிஹெச்பி பவர் மற்றும் 520 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு கார் ஆகும். அத்துடன் இது 6 சீட்டர் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காரில், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெஸ்ட் அப் டிஸ்ப்ளே, ஹார்மன் ஆடியோ சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம் என ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப், வென்டிலேஷன் மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள், பின் இருக்கை பயணிகளுக்கும் டச்ஸ்க்ரீன்கள் ஆகிய வசதிகளும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் xDrive40i M Sport வேரியண்ட்டில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாங்கிய புதிதில் அஜய் தேவ்கன்தான் இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை பயன்படுத்தி வந்தார். அதன் பின் தற்போது நைசா தேவ்கன் பயன்படுத்த தொடங்கி விட்டார். இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார், பைடோனிக் ப்ளூ கலரில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறம் சாலையில் அனைவரையும் கவரக்கூடியதாக உள்ளது.

நைசா தேவ்கன், அஜய் தேவ்கனின் மகள் என்றபோதே, அவரது அம்மா யார்? என்பதை நீங்கள் யூகித்திருக்கலாம். கடந்த 28 வருடங்களுக்கு முன்பு, அதாவது கடந்த 1997ம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டின் கனவு கன்னியாக மாறிய கஜோல்தான் (Kajol), நைசா தேவ்கனின் அம்மா ஆவார்.

அஜய் தேவ்கன் மற்றும் கஜோல் ஆகியோர் இந்திய திரையுலகின் வெற்றிகரமான தம்பதிகளில் ஒருவராக கருதப்படுகின்றனர். அவர்களுடைய மகள்தான் இந்த நைசா தேவ்கன். இவரது அப்பா அஜய் தேவ்கன் தீவிரமான கார் காதலர் ஆவார். அவரது கார் கலெக்ஸனில் (Car Collection) ஏராளமான விலை உயர்ந்த வாகனங்கள் இருக்கின்றன.

இதில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவை எல்லாம் தவிர கடந்த காலங்களில் இன்னும் நிறைய கார்களையும் அஜய் தேவ்கன் வைத்திருந்தார்.

இதில், மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே (Maserati Quattroporte), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series), பிஎம்டபிள்யூ இஸட்4 (BMW Z4), ஆடி க்யூ7 (Audi Q7), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்-க்ளாஸ் (Mercedes Benz GL-Class) மற்றும் மினி கூப்பர் (Mini Cooper) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆனால் இந்த கார்கள் எல்லாம் தற்போது அவரிடம் இருக்கிறதா? என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, April 21, 2025, 17:35 [IST]
English summary
Kajol daughter nysa devgn once again spotted in bmw x7 luxury suv viral video read full details
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+