30 வருஷத்துக்கு முன்னாடி ஒரே படத்துல தமிழகத்தையே மயக்கிய நடிகையின் மகனா இது! கார் கதவ திறந்து விடலாம் தனி ஆள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக வேகமாக பிரபலமடைந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e). எஸ்யூவி கூபே (SUV Coupe) ரகத்தை சேர்ந்த இந்த எலெக்ட்ரிக் கார், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் மிக குறுகிய காலத்திலேயே மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. 59 kWh மற்றும் 79 kWh என மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன.

Yug Devgn Spotted In Mahindra XEV 9e

இதில், 59 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 542 கிலோ மீட்டர்கள் ஆகும். மறுபக்கம் 79 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 656 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 22.65 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 31.25 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை சார்ஜர் உடன் கூடிய எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரை திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தற்போது தொடர்ச்சியாக வாங்கி வருகின்றனர்.

Mahindra XEV 9e

இந்த சூழலில், பிரபல திரையுலக தம்பதியின் மகன், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, சுமார் 15 வயதேயான யுக் தேவ்கன் (Yug Devgn) ஆவார். கார் கதவை ஒருவர் திறந்து விட, அதில் யுக் தேவ்கன் ஏறி பயணிப்பதை நாம் காணலாம்.

அஜய் தேவ்கன் - கஜோல் (Ajay Devgn - Kajol) தம்பதியின் மகன்தான் இந்த யுக் தேவ்கன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதில், அஜய் தேவ்கன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். அவருக்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் போன்ற முகங்களும் உள்ளன.

மறுபக்கம் அவரது மனைவி கஜோலுக்கும் அறிமுகமே தேவையில்லை. இவர் மொத்தம் 2 தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அவை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மின்சார கனவு மற்றும் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான விஐபி 2 ஆகியவை ஆகும். 2 திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட, கஜோலுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அஜய் தேவ்கன் - கஜோல் தம்பதியிடம், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ்600 (Mercedes Maybach GLS600), மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே (Maserati Quattroporte), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), பிஎம்டபிள்யூ இஸட்4 (BMW Z4), பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் மினி கன்ட்ரிமேன் (Mini Countryman) ஆகிய கார்கள் எல்லாம் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அஜய் தேவ்கன் - கஜோலின் மகன் யுக் தேவ்கன் பயன்படுத்திய மஹிந்திரா எக்ஸ்இவி 9இ, இந்தியாவில் மிக வேகமாக பிரபலமடைந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும். அதன் கம்பீரமான தோற்றம் மற்றும் வசதிகள் போன்ற அம்சங்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை கவர கூடியதாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, June 12, 2025, 14:10 [IST]
English summary
Kajol son yug devgn spotted in mahindra xev 9e viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+