30 வருஷத்துக்கு முன்னாடி பாத்தத விட இப்ப இன்னும் அழகு! ஒன்னரை கோடி ரூபா காரில் வந்த தமிழ்நாட்டின் கனவு கன்னி!

இந்திய திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), அஜய் தேவ்கன் (Ajay Devgn) மற்றும் யாமி கௌதம் (Yami Gautam) உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களிடம் எல்லாம் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் உள்ளது.

6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் கிடைக்கிறது. அத்துடன் 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 14 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் என ஏராளமான வசதிகளை கொண்டதாக இந்த கார் இருக்கிறது.

Kajol Spotted In BMW X7

அத்துடன் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களும், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் வழங்கப்படுகின்றன. எனவேதான் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, திரையுலக நட்சத்திரங்கள் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். இந்த சூழலில் பிரபல நடிகை ஒருவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது முன்னணி நடிகையான கஜோல் (Kajol) ஆவார். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வெளியான மின்சார கனவு (Minsara Kanavu) திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக கஜோல் மாறினார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுமார் 8 வருடங்களுக்கு முன்பு வெளியான விஐபி 2 தமிழ் திரைப்படத்திலும் கஜோல் நடித்திருந்தார்.

Kajol

ஆக மொத்தத்தில் தற்போது வரை 2 தமிழ் திரைப்படங்களில் மட்டுமே கஜோல் நடித்துள்ளார். இருப்பினும் தமிழ்நாட்டில் கஜோலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சூழலில்தான் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் கஜோல் வந்து இறங்கிய வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் கஜோல் பயன்படுத்தியது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் எக்ஸ்டிரைவ்40ஐ எம் ஸ்போர்ட் (xDrive40i M Sport) வேரியண்ட் ஆகும். தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 1.31 கோடி ரூபாயாக உள்ளது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 1.70 கோடி ரூபாய் வரும்.

இந்த வேரியண்ட்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5200-6250 ஆர்பிஎம்மில் 376 பிஹெச்பி பவரையும், 1850-5000 ஆர்பிஎம்மில் 520 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 245 கிலோ மீட்டர்கள் ஆகும்.

இந்த கார் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாங்கப்பட்டுள்ளது. சுமார் 5 வயதான இதே பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை, கஜோலின் மகள் நைசா (Nysa) கூட அடிக்கடி பயன்படுத்தி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். கடந்த காலங்களில் பலமுறை இந்த காரில் நைசாவை பார்க்க முடிந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த ஒரு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எஸ்யூவி (SUV) ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு கஜோல் பயன்படுத்திய எக்ஸ்7 கார் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 10, 2025, 18:29 [IST]
English summary
Kajol spotted in bmw x7 viral video check car price features here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+