சர்ச்சையான கருத்தால் வறுத்தெடுக்கப்பட்டாங்களே அவங்க தானே இது.. கொஞ்சம்கூட கவலைப்படாம சொகுசு காரை வாங்கிட்டாங்க
மலையாள கலை உலகில் நன்கு அறியப்படும் நபர் கலாமண்டலம் சத்தியபாமா. இவரே தன்னுடைய கலைப் பயணம் அல்லது முந்தைய சர்ச்சையான கருத்துகளுக்காக அல்லாமல் வேறொரு புதிய விஷயத்திற்காக தற்போது தலைப்பு செய்திகளில் இடம் பெற்றிருக்கின்றார். அவர் மிகவும் காஸ்ட்லியான காரை வாங்கியதானலேயே தலைப்பு செய்திகளில் தற்போது இடம் பிடித்திருக்கின்றார். பணக்காரர்களின் ஃபேவரிட் பிராண்டான ஜாகுவார் (Jaguar) நிறுவனத்தின் சொகுசு கார் மாடலையே அவர் வாங்கியுள்ளார். அவர் வாங்கியிருக்கும் துள்ளியமான கார் மாடல் எக்ஸ்இ (XE) ஆகும்.
இந்தியாவின் பள்ளம் - மேடுகள் நிறைந்த சாலையிலும் அதிக சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்கக் கூடிய கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதனாலேயே இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பலரின் பிரியமான தேர்வாக இந்த கார் மாடல் இருக்கின்றது. குறிப்பாக சொகுசு செடான் கார் விரும்பிகள் பலரின் கனவு வாகனமாக இது காட்சியளிக்கின்றது.

இத்தகைய கார் மாடலையே நடன கலைஞரும், ஆசிரியரான கலாமண்டலம் சத்தியபாமா தற்போது வாங்கி இருக்கின்றார். நடனத்திற்கு மட்டுமல்ல சர்ச்சையான கருத்துகளுக்கும் அறியப்படும் நபராக இவர் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல மோஹினி ஆட்டக் கலைஞர் ஆர்எல்வி ராமகிருஷ்ணனை மிகவும் கடுமையான கருத்தால் இவர் தாக்கியிருந்தார்.
அவரது நிறத்தை வைத்தே சர்ச்சையான கருத்தை அவர் பதிவிட்டார். இதற்காக வழக்கு போன்ற மிகப் பெரிய சிக்கலுக்கு அவர் ஆளாகினார் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் இவரின் மோசமான கருத்திற்காக மிகப் பெரிய அளவில் நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அனைத்து விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு தற்போது அவர் அதில் இருந்து வெளிவந்திருக்கின்றார்.
மேலும், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை புதிதாக்கவும் அவர் தொடங்கிவிட்டார். இதற்கு சான்றாகவே அவர் வாங்கியிருக்கும் புதிய ஆடம்பர கார் உள்ளது. கலாமண்டலம் சத்தியபாமா வாங்கியிருப்பது புத்தம் புதிய ஜாகுவார் கார் மாடல் அல்ல. புத்தம் புதிது போல் இருக்கும் யூஸ்டு கார் மாடலே அது ஆகும்.
கேரளாவின் புகழ்பெற்ற யூஸ்டு கார் டீலரான ஹர்மன் மோட்டார்ஸ் வாயிலாகவே இந்த காரை அவர் வாங்கி இருக்கின்றார். ஜாகுவார் எக்ஸ்இ கார் மாடலின் இந்திய மதிப்பு ரூ. 44.98 லட்சம் ஆகும். இது அதிக சொகுசு வசதிகளைத் தாங்கியிருக்கும் கார் மாடல் மட்டுமல்ல அதிக ஆற்றலை உருவாக்கக் கூடியதும்கூட.
இந்த காரில் பிரீமியமான டிராவல் அனுபவத்திற்காக 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்போர்ட்ஷிஃப்ட் கியர் செலக்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கும். எஞ்சினை பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு ஆப்ஷன்களும் இந்த காரில் உண்டு. இரண்டிலும் 2.0 லிட்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதேபோல், இது வேற லெவல் ஆற்றலை வெளியேற்றக் கூடியவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கலாமண்டலம் சத்தியபாமா இதில் எந்த ஆப்ஷனை வாங்கியிருக்கின்றார் என்பது பற்றிய துள்ளியமான தகவல் இல்லை. இருப்பினும், அது பார்க்க புத்தம் புதிது போல் இருப்பது ஆச்சரியத்தை தரும் வகையில் இருக்கின்றது. அதேவேளையில், அவர் யூஸ்டு காரை வாங்கியிருப்பதனால் புதியதைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் அவர் பண சேமிப்பைச் செய்திருப்பார் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








