ஒரு படத்துக்காக இவ்வளவு காசு செலவு பண்ணி இருக்காங்களா... சத்தியமா நம்பவே முடியல!!
கல்கி 2898 AD (Kalki 2898 AD) திரைப்படம் ஏற்படுத்திய சூறாவளி தற்போதுதான் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. பாகுபலி நடிகர் பிரபாஸின் நடிப்பில், நாக் அஷ்வினின் இயக்கத்தில் மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கல்கி 2898 AD திரைப்படம் தற்போதுவரையில் சுமார் 1,100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளது. இன்னும் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருப்பதால், பாக்ஸ் ஆபிஸ் வசூல் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.
இந்து கடவுளான விஷ்ணு தனது கடைசி அவதாரத்தில் 2898ஆம் காலக்கட்டத்தில் பூமிக்கு வரும் போது நடப்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை ஆகும். இந்த படத்திற்காக 'புஜ்ஜி' என்கிற பெயரில் ஒரு பிரத்யேகமான 3-சக்கர வாகனத்தை உருவாக்கினர். இந்த வாகனத்தில்தான் படம் முழுக்க நடிகர் பிரபாஸ் வருவார். இந்த வாகனத்தை நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. அப்போது நாங்கள் காட்சிப்படுத்தியவற்றை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
கல்கி 2898 AD திரைப்படத்திற்காக உண்மையில் இயங்கக்கூடிய ஒரு பிரம்மாண்ட 3-சக்கர வாகனத்தை உருவாக்கி உள்ளனர். புஜ்ஜி என அழைக்கப்படும் இந்த வாகனத்தை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனங்கள் உடன் இணைந்து கல்கி திரைப்படக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் வாகனமாக உருவாக்கப்பட்டதால், புஜ்ஜியின் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். அளவில் பெரியதான தோற்றத்தில் இருப்பினும், புஜ்ஜி வாகனத்தினுள் 2 பேர் மட்டுமே அமர முடியும். திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு புஜ்ஜி வாகனத்தை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு கொண்டு சென்றனர். அதேபோல், திரைப்படம் திரைக்கு வந்த பின்பும் ரசிகர்களின் பார்வைக்காக திரையரங்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








