பிரபாஸ் படத்துக்காக மஹிந்திரா உருவாக்கி கொடுத்த ராட்சத வாகனம்!! உள்ளே இருக்கும் பார்ட்ஸை பற்றி தெரியுமா?

நடிகர் பிரபாஸின் நடிப்பில் திரைக்கு வந்துள்ள கல்கி 2898 AD திரைப்படம் இந்திய அளவில் கவனத்தை பெற்று வருகிறது. மகாபாரத இதிகாச கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோனே என பெரிய நட்சத்திர கூட்டம் நடித்துள்ளது. கடந்த ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படத்தில் புஜ்ஜி என்கிற வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படத்திற்காக இந்த வாகனத்தை நிஜமானதாக உருவாக்கி அசத்தி உள்ளனர். புஜ்ஜி வாகனத்தை உருவாக்குவதற்கு மட்டும் ரூ.4 கோடி வரையில் செலவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கல்கி 2898 AD திரைக்கு வருவதற்கு முன்னதாக, புஜ்ஜி வாகனத்தை பல்வேறு நகரங்களுக்கு விளம்பரத்திற்காக படக்குழுவினர் கொண்டு சென்றனர். அதேபோல், திரைப்படம் வெளியான நாளான ஜூன் 27ஆம் தேதியும் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான திரையரங்கிற்கு வெளியே புஜ்ஜி வாகனம் ரசிகர்களின் பார்வைக்காக நிறுத்தப்பட்டது. இந்த வாகனத்தை பற்றிய விரிவான விபரங்களை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மற்றும் கோயம்புத்தூரை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டீவ்ஸ் நிறுவனங்கள் இணைந்து புஜ்ஜி வாகனத்தை உருவாக்கி கல்கி 2898 AD படக்குழுவுக்கு வழங்கியுள்ளனர். இதனை கார் என சொல்ல முடியாது. ஏனெனில், முன்பக்கத்தில் 2 மற்றும் பின்பக்கத்தில் பெரியதாக 1 என இந்த வாகனத்தில் வெறும் 3 சக்கரங்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன.

bujji vehicle specifications video

பார்ப்பது மட்டுமின்றி, புஜ்ஜி வாகனத்தை ஓட்டவும் முடியும். அளவில் பிரம்மாண்டமானதாக உருவாக்கப்பட்டு இருப்பினும், இதனுள் வெறும் இருவர் மட்டுமே அமர முடியும். ஹெலிகாப்டரில் வழங்கப்படுவதை போன்று கண்ணாடி கதவுகள் மேல்நோக்கி திறக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. மும்பையில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட போது மஹிந்திரா & மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த வாகனத்தை ஓட்டி பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, June 28, 2024, 19:15 [IST]
English summary
Kalki 2898 ad movie bujji vehicle specifications detailing video in tamil
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+