கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பற்றிய இந்த விஷயம் தெரியுமா? கேட்கவே பிரம்மிப்பா இருக்கு...

கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பற்றிய இந்த விஷயங்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி.

கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பற்றிய இந்த விஷயம் தெரியுமா? கேட்கவே பிரம்மிப்பா இருக்கு...

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் கார் மற்றும் பைக் கலெக்ஸன் குறித்து கடந்த காலங்களில் செய்திகளை வெளியிட்டுள்ளோம். இந்த வரிசையில் இந்திய அளவில் மிக பிரபலமான மற்றும் வெற்றிகரமான தொழிலதிபர் ஒருவரின் வாகன கலெக்ஸனை இன்று பார்க்க போகிறோம்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பற்றிய இந்த விஷயம் தெரியுமா? கேட்கவே பிரம்மிப்பா இருக்கு...

அவர் லக்ஸரி கார்களை மட்டும் சொந்தமாக வைத்திருக்கவில்லை. அவற்றுடன் சேர்த்து பிரைவேட் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் சொந்தமாக வைத்துள்ளார். கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் கல்யாண் டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான டி.எஸ்.கல்யாணராமன் பற்றிதான் இங்கே பேசி கொண்டிருக்கிறோம்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பற்றிய இந்த விஷயம் தெரியுமா? கேட்கவே பிரம்மிப்பா இருக்கு...

கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் கல்யாண் டெவலப்பர்ஸ் ஆகியவை மிகவும் பிரபலமான நிறுவனங்களாக உள்ளன. குறிப்பாக கல்யாண் ஜூவல்லர்ஸ் தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான நகை கடைகளில் ஒன்றாக திகழ்கிறது. கல்யாணராமன் மிக இளம் வயதிலேயே ஒரு தொழில் அதிபராக தனது பயணத்தை தொடங்கியவர்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பற்றிய இந்த விஷயம் தெரியுமா? கேட்கவே பிரம்மிப்பா இருக்கு...

அவருக்கு 12 வயதாக இருக்கும்போதே அவரது தந்தை அவர்களது டெக்ஸ்டைல் ஷாப்களுக்கு அழைத்து சென்று கல்யாணராமனுக்கு அடிப்படைகளை கற்று கொடுத்தார். அங்கு கற்று கொண்ட பாடத்தின் மூலம் இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே கல்யாணராமன் உருவாக்கியுள்ளார். மற்ற தொழில் அதிபர்களை போலவே கல்யாணராமனுக்கும் லக்ஸரி கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பற்றிய இந்த விஷயம் தெரியுமா? கேட்கவே பிரம்மிப்பா இருக்கு...

முதலில் அவர் பயன்படுத்தும் கார்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்த்து விடலாம். இந்த பட்டியலில் முதலில் வருவது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் சீரிஸ் 2 (Rolls Royce Phantom Series 2). ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் மூன்று ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் சீரிஸ் 2 கார்களை கல்யாணராமன் வைத்துள்ளார்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பற்றிய இந்த விஷயம் தெரியுமா? கேட்கவே பிரம்மிப்பா இருக்கு...

இதில், ஒரு கார் சில்வர் நிறத்திலும், மற்றொரு கார் வெள்ளை நிறத்திலும், மூன்றாவது கார் கருப்பு நிறத்திலும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த கார்களில் கல்யாணராமன் பயணிப்பதை பல முறை பார்க்க முடிந்துள்ளது. ஒரு ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரின் விலை தோராயமாக 9.5 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பற்றிய இந்த விஷயம் தெரியுமா? கேட்கவே பிரம்மிப்பா இருக்கு...

இதுதவிர ஃபோக்ஸ்வேகன் டூரெக் (Volkswagen Touareg) காரை கல்யாணராமன் பயன்படுத்துவதையும் பார்க்க முடிந்துள்ளது. இது எஸ்யூவி ரக கார். கல்யாணராமனிடம் இருப்பது பழைய தலைமுறை கார் ஆகும். மேலும் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series) காரையும் கல்யாணராமன் சொந்தமாக வைத்துள்ளார். இதுபோன்ற சொகுசு கார்கள் மட்டுமல்லாது பிரைவேட் ஜெட் ஒன்றும் அவரிடம் உள்ளது.

கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பற்றிய இந்த விஷயம் தெரியுமா? கேட்கவே பிரம்மிப்பா இருக்கு...

கல்யாணராமனிடம் லீகஸி 650 (Legacy 650) பிஸ்னஸ் ஜெட் உள்ளது. இதன் விலை எவ்வளவு தெரியுமா? 222 கோடி ரூபாய் (கீழே வழங்கப்பட்டுள்ள வீடியோவின்படி). இவை எல்லாம் தவிர பெல் 427 (Bell 427) ஹெலிகாப்டரும் கல்யாணராமனிடம் உள்ளது. ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டிலும் கல்யாண் குழுமத்தின் லோகோ இடம்பெற்றுள்ளது.

இந்தியாவை சேர்ந்த சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலரிடம் பிரைவேட் ஜெட் இருக்கிறது. செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் சென்று சேர அவர்களுக்கு பிரைவேட் ஜெட் உதவி செய்கிறது. இதுதவிர பிரைவேட் ஜெட்கள் அவர்களின் அந்தஸ்தை வெளிக்காட்டும் அம்சமாகவும் பார்க்கப்படுகின்றன.

Image Courtesy: Cars For You

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kalyan Jewellers Chairman Kalyanaraman's Luxury Cars, Private Jet, Helicopter. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X