நாம கொடுக்கும் செய்கூலி-சேதாரம் எல்லாம் எப்படி காரா வந்து நிக்குது பாருங்க! கல்யாண் நகை கடை ஓனரிடம் இத்தன காரா

தென் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக டிஎஸ் கல்யாணராமன் இருக்கின்றார். கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் கல்யாண் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இவர் உள்ளார். இந்தியாவின் மற்ற செல்வந்தர்களைப் போலவே இவரும் மிகப் பெரிய சொகுசு கார் விரும்பியாக இருக்கின்றார். இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது. டிஎஸ் கல்யாணராமனின் சொகுசு கார்கள் கலெக்சன் பற்றிய வீடியோவே அது ஆகும். அவரிடத்தில் இருக்கும் அனைத்து கார்களும் ஒரே இடத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

கார்ஸ்பாட்டர் கேரளா (Carspotter Kerala) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அந்த வீடியோ பகிரப்பட்டு உள்ளது. கல்யாணராமன், அவரது மகன்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான பல்வேறு உயர்தர வாகனங்களே இங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. வீடியோவில் இடம் பெற்றிருந்த ஒரு சில கார் மாடல்களின் விலை நம்ப முடியாததாக இருக்கின்றது.

Kalyan jewellers owner car collection

குறிப்பாக, அந்த வீடியோவில் இடம் பிடித்திருந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் (BMW XM) ஒன்றின் மதிப்பு மட்டும் ரூ. 2.60 கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதுபோன்று அவரிடத்தில் இன்னும் பல விலை உயர்ந்த கார் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன.

அந்தவகையில், மெர்சிடிஸ் மேபேக் எஸ்680 (Mercedes Maybach S680) சொகுசு கார் மாடலும் அவரிடத்தில் இருப்பதை இந்த வீடியோ உறுதி செய்திருக்கின்றது. அது ரூபெல்லைட் ரெட் மெட்டாலிக் டூயல்-டோன் ஷேடில் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. சொகுசு அம்சங்கள் நிறைந்த ஓர் வாகன மாடல் இதுவாகும்.

இதனால்தான் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக மெர்சிடிஸ் மேபேக் எஸ்680 காட்சியளிக்கின்றது. அம்பானி குடும்பத்தினர் தொடங்கி இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் இந்த காரை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் விலை ரூ. 3.44 கோடி ஆகும்.

மிகுந்த ஆடம்பர அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த அளவிற்கு மிக மிக உயரிய விலையில் அந்த கார் விற்கப்படுகின்றது. எஸ்680 சொகுசு காரில் 6.0-லிட்டர் டர்போசார்ஜ்டு வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அது அதிகபட்சமாக 610 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த காரைத் தொடர்ந்து டொயோட்டா வெல்ஃபயர் கார் மாடலும் கல்யாணராமனிடத்தில் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இது ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இந்த காருக்கும் இந்திய சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, மலையாள திரைப் பிரபலங்கள் மத்தியில் பிரபலமான கார் மாடலாக இந்த சொகுசு எம்பிவி இருக்கின்றது. இதன் விலை ரூ. 1.32 கோடிக்கும் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், ஸ்ட்ராங்கான ஹைப்ரிட் அமைப்புடன் வழங்கப்பட்டுள்ளது.

வெல்ஃபையருக்கு அடுத்தபடியாக கல்யாண் ஜுவல்லர்ஸ் ஓனரிடத்தில் ரேஞ்ஜ் ரோவர் வோக் சொகுசு காரும் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2.77 கோடி ஆகும். ஆஃப்-ரோடு மற்றும் வழக்கமான சாலை எதுவாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்டதே இந்த கார் மாடல் ஆகும்.

குறிப்பாக ஆஃப்-ரோடில் பயணித்தாலும் மிகுந்த சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கக் கூடிய அம்சங்கள் பலவற்றை இந்த கார் தாங்கி இருக்கின்றது. இதனால்தான் இந்த கார் மாடலுக்கும் இந்தியர்கள் மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் 335 பிஎச்பி மற்றும் 740 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டு 4.4 லிட்டர் வி8 டீசல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

மேலும், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் சொகுசு காரையும் கல்யாணராமன் வைத்திருக்கின்றார். இந்த காரின் மதிப்பும் கோடியைத் தாண்டக் கூடியதே ஆகும். 1.73 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு எஸ்யூவி ரக கார் மாடலே இதுவாகும். இந்த காரில் 4.4 லிட்டர் வி8 டீசல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 262 பிஎச்பி மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. லேண்ட் க்ரூஸரும் ஆஃப் ரோடு பயணங்களுக்கு உகந்த கார் மாடலே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை தமிழக அரசியல்வாதிகள் சிலரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார் மாடல்களுடன் சேர்த்து கல்யாண் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் மூன்று ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) தயாரிப்புகளையும் பயன்படுத்தி வருகின்றார். நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான பேந்தம் (Phantom) மற்றும் கல்லினன் (Cullinan) ஆகிய கார் மாடல்களையே அவர் தன் வசம் வைத்திருக்கின்றார். சொகுசு கப்பல் மாதிரியான கார் மாடலே இந்த இரண்டும் ஆகும்.

கல்லினன் ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இதன் விலை ரூ. 7 கோடிக்கும் அதிகம். இதற்கு அடுத்தபடியாக ரோல்ஸ் ராய்ஸ்-இன் மற்றுமொரு மிக முக்கியமான தயாரிப்பான பேந்தம் காரையும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.

சீரிஸ் 1 மற்றும் சீரிஸ் 2 என இரண்டு வெர்ஷன்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இதன் ஒரே ஒரு யூனிட்டின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ. 9 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்ற மிக மிக விலை உயர்ந்த கார்களையே கல்யாண் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் வைத்திருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த கார் மாடல் மட்டுமில்லைங்க. அவரிடத்தில் இன்னும் பல ஆடம்பர வகை கார் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஆடி ஆர்எஸ் 5 உள்ளிட்ட ஆடம்பர கார்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இது, தென்னிந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கல்யாணராமனின் அந்தஸ்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 22, 2024, 5:00 [IST]
English summary
Kalyan jewellers exotic multi crore car collection
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+