3ரோல்ஸ் ராய்ஸ் காரை டெலிவரி எடுத்த நகை கடை ஓனர்! 178 கோடி ரூபா விமானம் வச்சிருக்கவருக்கு இதெல்லாம் சாதாரணம்!

உலகின் விலை உயர்ந்த சொகுசு கார் (Luxury Car) மாடல்களில் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனத்தின் கல்லினன் (Cullinan) மாடலும் ஒன்றாக அறியப்படுகின்றது. இந்த கார் மாடலையே ஒரே நேரத்தில் மூன்று யூனிட்டுகளை டெலிவரி பெற்றிருக்கின்றார் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நகைக் கடை உரிமையாளர் ஒருவர்.

அவர் யார்? இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சொகுசு எஸ்யூவி ரக கார் மாடலின் விலை என்ன? மற்றும் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. மிக முக்கியமாக இந்த காரில் என்ன மாதிரியான திறன் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய விபரத்தைக் காணலாம், வாங்க.

Kalyan jewellers owner buys 3 rolls royce cullinan black badge

உலகின் விலை உயர்ந்த கார் மாடல் மட்டுமில்லைங்க, உலக செல்வந்தர்கள் பலரின் பிரியமான கார் மாடாலகவும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) காட்சியளிக்கின்றது. இது ஓர் சொகுசு எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதன் ஆரம்ப விலையே ரூ. 6.95 கோடி ஆகும்.

ஆனால், இந்த மாடலிலேயே அதிக விலையைக் கொண்டதாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எனும் தேர்வு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதையே இந்தியாவைச் சேர்ந்த பிரபல நகைக் கடை உரிமையாளர் வாங்கி இருக்கின்றார். அவர் வேறு யாருமல்ல பிரபல கல்யான் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் கல்யாணராமன் தான் அவர் ஆவார்.

Rolls royce cullinan

இவர் வாங்கி இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் சொகுசு எஸ்யூவி காரின் ஒன்றின் விலையே 10 கோடிக்கும் அதிகமாகும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த கார் மாடலையே ஒன்றல்ல மொத்தமாக மூன்று யூனிட்டுகளை அவர் வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களைப் போலவே பூனவல்லா குடும்பத்தினரும் ஆளுக்கு ஒன்று என்கிற கணக்கில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே இந்த ஜாம்பவான் பணக்காரர்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பணக்காரரான கல்யாண் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ஒரே நாள், ஒரே நேரத்தில் மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எஸ்யூவி சொகுசு காரை வாங்கி குவித்திருக்கின்றார்.

Kalyan jewellers owner home

இந்த தகவல் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், இவரிடத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட சொகுசு கார்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் சிலவும் கல்யாணராமன் இடத்தில் உள்ளன. அந்தவகையில், ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் சீரிஸ் I மற்றும் இரண்டு பேந்தம் சீரிஸ் II கார் மாடல்களையும் அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே, ஏற்கனவே மூன்று ரோல்ஸ் ராய்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்க மேலும், மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்தி வரும் நபர்களில் ஒருவராக கல்யாணராமன் மாறி இருக்கின்றார்.

Rolls royce cullinan black badge

புதிதாக வாங்கப்பட்டு இருக்கும் மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் சொகுசு கார்களும் வெவ்வேறு நிறத்தைக் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன. ஒன்று மக்மா ரெட் ஷேட் (Magma Red shade) நிறத்திலும், மற்றொன்று மிட்நைட் சஃபையர் (Midnight Sapphire) நிறத்திலும் மற்றும் கடைசி ஒன்று டைமண்ட் பிளாக் (Diamond Black) நிறத்திலும் இருக்கின்றன.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி ஆடம்பர பங்களாவிற்கு இணையான வசதிக் கொண்ட ஓர் சொகுசு கார் ஆகும். இதில் பயணிக்கும்போது துளியளவும் அசௌகரியமான உணர்வே ஏற்படாது. குறிப்பாக, இதில் பயணிக்கும்போது கப்பலில் மிதப்பதைப் போன்ற அனுபவமே கிடைக்கும். பள்ளம், மேடுகள் நிறைந்த சாலையில் பயணித்தால்கூட, அப்படி ஒரு பாதையில் பயணிக்கின்ற உணர்வையே அது வழங்காது.

இத்தகைய வாகனத்தையே கல்யாணராமன் தற்போது வாங்கி குவித்துள்ளார். இந்த காரை அதீத திறனை வெளிப்படுத்துவதிலும் சிறந்த தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. இதில், 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரையே ரோல்ஸ் ராய்ஸ் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 569 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

இது வழக்கமான கல்லின்-இல் இருக்கும் எஞ்சின் வெளியேற்றும் திறன் ஆகும். அதேவேளையில், கல்லினன் பிளாக் பேட்ஜ் வழக்கமான கல்லினனில் இருந்து கூடுதலாக 29 பிஎஸ் மற்றும் 50 என்எம் டார்க்கை வெளியேற்றும். கல்யாணராமன் இடத்தில் இதுபோன்று இன்னும் பல அதிக திறனை வெளியேற்றும் திறன் கொண்ட கார்களும் பயன்பாட்டில் உள்ளன.

மேலும், ஃபோக்ஸ்வேகன் டூரெக் (Volkswagen Touareg) மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5-Series) போன்ற அரிய வகை கார்களும் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, 178 கோடி ரூபா மதிப்புள்ள (Embraer Legacy 650) பிரைவேட் ஜெட் மற்றும் பெல் 427 ஹெலிகாப்டர் (Bell 427 helicopter) ஆகியவற்றையும் இந்த நபர் பயன்படுத்தி வருகின்ரார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் மாடலுக்கு ஃபேன் பட்டாளம் அதிகம். அம்பானி வீட்டில் மட்டுமே கல்லினன் கார் மாடல் மொத்தம் 4 இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதேபோல், பாலிவுட் நடிகரான ஷாருக்கான் இடத்தில் கல்லினன் பிளாக் பேட்ஜ் ஓர் யூனிட் பயன்பாட்டில் இருக்கின்றது. இவர்களைப் போலவே இன்னும் சிலரும் இந்தியாவில் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, February 26, 2024, 12:57 [IST]
English summary
Kalyan jewellers owner kalyanaraman buys 3 rolls royce cullinan black badge car on single day
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X