பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரத்தியேக வேன் ஒன்றை தயார் செய்துள்ளார். இந்த வேனில் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் இருக்கின்றன. இந்த வேன் குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வேனில் உள்ள அம்சங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் விரிவாக காணலாம் வாருங்கள்.
தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் எல்லாம் நிறைவடைந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளார்.

இவர் தமிழக முழுவதும் பயணித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரத்தியேக வேன் ஒன்றை தயார் செய்து உள்ளார். இது குறித்த வீடியோவை மக்கள் நீதி மையம் கட்சியைச் சார்ந்த கன்னிகா சினேகன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் கமலஹாசன் இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக போர்ஸ் நிறுவனத்தின் டிராவலர் என்ற வேனை பயன்படுத்த உள்ளார். இதற்காக இந்த பிரத்தியேகமாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. வேனின் வெளிப்புறத்தில் இவர் பிரச்சாரம் செய்வது அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக வேனை சுற்றி ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேனை சுற்றிலும் கமலஹாசனின் புகைப்படம் மற்றும் வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

வேனை சுற்றிலும் இவருக்கு பாதுகாவலர்கள் நிற்க வேண்டும் என்பதற்காக வேன் பயணிக்கும் போது உடன் இவர்கள் தொற்றிக்கொண்டு பயணிக்க பக்கவாட்டு பகுதிகளில் பெரிய பூட் ரெஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் தொங்கிக் கொண்டே செல்வதற்காக பிடிமானத்திற்காக பக்கவாட்டின் மேல் பகுதியில் கம்பி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தேர்தல் பிரச்சாரங்களை பாதுகாப்பாக செய்ய முடியும்.
இந்த வேனின் உட்புறம் தான் ஏகப்பட்ட அம்சங்களை கவனிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக வேனின் மேல் புறம் இவர் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக பானரோமிக் சன் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பட்டனை அழுத்தினால் அந்த ரூஃப் டாப் திறந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரூஃப் டாப்பிற்கு நேர் கீழே நடைமேடை லிஃப்ட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் கமலஹாசன் ஏறி நின்று ஒரு பட்டனை அழுத்தினால் தானாக இது மேலே ஏறி கமலஹாசன் ரூஃப் டாப் வழியாக பொதுமக்களை பார்த்து அவர்களுடன் பேச முடியும். இதற்காக இந்த செட்டப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பட்டனை அழுத்தினால் லிஃப்ட் தானாக கீழே வரும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் இந்த வெப்பத்தை சமாளிப்பதற்காக வேன் உள்ளே அதிக பவர் கொண்ட ஏசிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வெளியில் என்ன வெப்பம் இருந்தாலும் வேன் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும் வகையில் ஏசி வேன்ட்கள் பெரிதாகவும் அனைத்து இடங்களுக்கும் பரவும் வகையிலும் மாடிஃபிகேஷன் செய்து செட்டப் செய்யப்பட்டுள்ளன.
இந்த வேனிலேயே கமலஹாசன் தமிழக முழுவதும் பயணிக்க உள்ளதால் இதில் அவர் பிரச்சாரம் செய்யும் நேரம் போக பயண நேரத்தில் ஓய்வெடுப்பதற்காக கேப்டன் சேர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த சேரில் அவர் உடல் அசதியை போக்குவதற்காக மசாஜ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் களைப்பில்லாமல் இவர் பயணம் செய்து பிரச்சாரம் செய்ய முடியும்.
இது மட்டுமல்லாமல் வேன் உள்ளேயே தற்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக டிவி செட்டப் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதில் செய்திகள் மற்றும் அனைத்து விவரங்களையும் இவர் உடனுக்குடன் லைவாக பார்த்துக் கொள்ள முடியும். பயணத்தின் போதே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தேர்தல் நேரங்களில் பிரச்சாரம் செய்யும் அரசியல் தலைவர்கள் இப்படியான சொகுசு வசதி நிறைந்த பிரச்சார வேன்களை தயார் செய்து தங்கள் பிரச்சாரங்களை துவங்குவார்கள். நடிகர் கமலஹாசன் செட்டப் செய்துள்ள இந்த பிரச்சார வேன் பலரை ஈர்க்கும் விதமாக இருக்கிறது. பல்வேறு சொகுசு அம்சங்கள் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









