கடன் கடன்னு சொல்லீட்டு இத்தன கோடி ரூபா காரா! கமல் வந்த காரின் விலை தெரிஞ்சதும் நாடாளுமன்றமே ஆடி போயிருச்சு!

சமூக வலை தளங்களில் தற்போது 'கமல்ஹாசன் எனும் நான்' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சியின் தலைவராக (President) உள்ள கமல்ஹாசன் (Kamal Haasan), இன்று (ஜூலை 25) ராஜ்யசபா எம்பி-ஆக (Rajya Sabha) பதவியேற்று கொண்டார்.

இதை தொடர்ந்து 'கமல்ஹாசன் எனும் நான்' என்ற ஹேஷ்டேக்கை, கமல்ஹாசன் ரசிகர்களும் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், சமூக வலை தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அத்துடன் சமூக வலை தளங்களில், ராஜ்யசபா எம்பி கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Kamal Haasan MP Arrives At Parliament In BMW i7

இந்த சமயத்தில், ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்க நாடாளுமன்றத்திற்கு (Parliament), கமல்ஹாசன் வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி கொண்டுள்ளது. தி ஃப்ரீ ப்ரஸ் ஜர்னல் யூடியூப் (YouTube) சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் வெள்ளை நிற காரில், வெள்ளை நிற உடையில், கமல்ஹாசன் நாடாளுமன்றத்திற்கு வந்ததை நம்மால் பார்க்க முடிகிறது.

நாடாளுமன்றத்திற்கு வர கமல்ஹாசன் பயன்படுத்தியது பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) கார் ஆகும். இது எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Kamal Haasan MP

இதில், eDrive50 வேரியண்ட் ஒன்றாகும். மற்றொன்று M70 xDrive ஆகும். இந்த 2 வேரியண்ட்களிலும் 101.7 kWh பேட்டரி ஆப்ஷன்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) வெவ்வேறாக உள்ளது. இதில், eDrive50 வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 603 கிலோ மீட்டர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் M70 xDrive வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 560 கிலோ மீட்டர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டிரைவிங் ரேஞ்ச் ஆகும். பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், பயணம் செய்ய கூடிய தொலைவுதான் டிரைவிங் ரேஞ்ச் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை. இதில், 31.3 இன்ச் 8K சினிமா திரை மிகவும் முக்கியமான ஒன்றாகும். காரின் மேற்கூரையில் இந்த திரை பொருத்தப்பட்டுள்ளது. 'ஆக்டிவேட் தியேட்டர் மோட்' என வாயால் கூறினாலே, இந்த திரை உங்கள் கண் முன்பாக விரிந்து கொள்ளும்.

தேவையில்லாத சமயங்களில் இந்த திரையை மடித்து வைத்து கொள்ளலாம். மேலும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகளும், பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற சொகுசு வசதிகள் காரணமாகவே, இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும், பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரின் eDrive50 வேரியண்ட்டின் விலை 2.05 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் M70 xDrive வேரியண்ட்டின் விலை 2.50 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் கமல்ஹாசன் பயன்படுத்தியது என்ன வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை.

முன்னதாக ராஜ்யசபா எம்பி தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்த வேட்புமனுவில், 49.67 கோடி ரூபாய் கடன் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இவ்வளவு கடன் இருக்கும்போது, நாடாளுமன்றத்திற்கு வர மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரா? என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் பேசி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கமல்ஹாசன் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ ஐ7 காரானது, சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். நடிகர் அஜய் தேவ்கன் (Ajay Devgn) மற்றும் நடிகைகள் ரேகா (Rekha), ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் (Jacqueline Fernandez) போன்ற பிரபலங்களிடமும், பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் கார் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Image Source: @The Free Press Journal via YouTube

More from DriveSpark

Article Published On: Friday, July 25, 2025, 19:06 [IST]
English summary
Kamal haasan mp arrives at parliament in bmw i7 viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+